மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 4 பண் : காந்தார பஞ்சமம்

கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண்
டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழ
அம்ப லத்துறை வான்அடி யார்க்கடை யாவினையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பூங்கொம்பு தனக்கு இணையாகாவாறு அலையச் செய்து அதனழகினையும் தான் பெற்ற நுண்ணிய இடையையும், அழகும் ஒளியும் உடைய திங்கள் போலும் முகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகீர் என்றொதுக்கிய திருக் கண்களையும் உடைய சிவகாமியம்மையார் கொங்கைகளை விரும்பிய வார்சடையான், ( நடராசப் பெருமான் ), அரகர முழக்கஞ் செய்து விழுந்தெழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப் போன்ற உடற் கட்டினர். பேரார்வத்தோடு திருக்கழலணிந்த சிவந்த திருவடிகளைக் கைகளால் தொழ, பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் முழு முதல்வன் அடியவர்க்கு வினைத் தொடர்பு இல்லை.

குறிப்புரை :

` கொம்பு.. முலை ` என்றது கங்கையைக் குறித்தலுமாம். ஆயினும், அஃது அத்துணைச் சிறப்பினதன்று. காளையர் என்பது வழிபடுவோருள் அத்தகையாரைக் குறித்ததெனலும் பொருந்தும். காளையர்க்கு முன்னும் பின்னும் உள்ள அடைமொழியால் முறையே பெருமானது திருமேனியிற் கொண்ட ஆர்வமும் திருவடிக்கண் நின்ற வேட்கையும் விளங்கும். கொம்பு - பூங்கொம்பை. அலைத்து ( நமக்கு இத்தகைய அழகே இல்லையென வருந்த ) வருத்தி, அழகு எய்திய - அழகைப்பெற்ற. நுண் இடை - சிறிய இடை, கோலம் - அழகிய, வாள். ஒளி பொருந்திய முகத்து - முகத்தில், அம்பு அலைத்த - அம்புகளை, ( அவ்வாறே ) வருத்திய. இரண்டு கண்ணாள் - இரு விழிகளையுடைய உமாதேவியாரின், வார்சடை - நெடிய சடாபாரம். கம்பலைத்து - முக்காரம் செய்து, காமுறு - ( கண்டார் ) விரும்பும், காளையர் - ஏறுபோற் பீடுநடையையுடைய தில்லைவாழ் அந்தணர் மக்கள், காதலால் - அன்போடு, கழல் சேவடி கை தொழ - கழலையணிந்த சிவந்த திருவடிகளைத் தொழ. அடையாவினை - துன்பங்கள் அடையமாட்டா. இறைவனைப் போற்றும் வீறுடைமையால் பெருமித நடைக்குக் காளை உவமம். ` ஏறுபோற் பீடு நடை ` என்றார் வள்ளுவரும். ( திருக்குறள் 59) தில்லைவாழந்தணர்களின், துதித்தல், பாடுதல், புகழ் பாராட்டுதல் ஆகிய செயல்களின் ஓசைக்கு, முக்காரம் செய்தல் ஆகிய உவமையும் பெறப்படும். ஏற்றின் ஒலி முக்காரம் எனப்படும். கம்பலைத்து - கம்பலை யென்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம். கம்பலை - ஓசை. ` கம்பலை சும்மை, கலியே, அழுங்கல் என்றிவை நான்கும் அரவப்பொருள ` ( தொல். சொல். உரி. 53) காதலான் : ஆனுருபு ஒடுப்பொருளில் வந்தது. ` தூங்குகையான் ஓங்குநடைய ` என்புழிப்போல. ( புறம்.22. )

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
one who has long matted locks.
the minute waist which is beautiful after harassing the twig with flowers.
desiring the breasts of the lady Civakāmi who has two eyes which harassed the arrows, in her face which resembles the bright and beautiful moon.
the attractive youths who make a big sound uttering the names of the Lord, to worship with both hands out of devotion the red feet wearing anklets actions will not attach to those devotees of one who resides in ampalam.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kompa laiththazha keythiya :nu'n'nidaik koala vaa'lmathi poalamu kaththira'n
dampa laiththaka'n 'naa'lmulai maeviya vaarsadaiyaan
kampa laiththezhu kaamu'ru kaa'laiyar kaatha laalkazha'r saevadi kaithozha
ampa laththu'rai vaanadi yaarkkadai yaavinaiyae.
சிற்பி