9. வினாவெண்பா
001 வினாவெண்பா
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
பாடல் எண் : 1

நீடும் ஒளியும் நிறையிருளும் ஓரிடத்துக்
கூடல் அரிது கொடுவினையேன் - பாடிதன்முன்
ஒன்றவார் சோலை உயர்மருதச் சம்பந்தா
நின்றவா றெவ்வாறு நீ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நீடும் ஒளியும் நிறை இருளும் ஓரிடத்துக் கூடல் அரிது விரிந்த பிரகாசமும் நிறைந்த இருளும் ஓரிடத்திலே கூடமாட்டாது ; கொடுவினையேன் பாடு இதன்முன் கொடுவினையேன் பக்கல் தரிசிப்பதற்கு முன் ; வார் சோலை உயர் மருதச் சம்பந்தா நீ ஒன்ற நின்றவாறு எவ்வாறு அழகிய சோலை யுயர்ந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனிவனே, தேவரீர் அடியேனிடத்துப் பொருந்த நின்றதெப்படி.
அந்தகன் கண்ணுக்கு ஆதித்தப் பிரகாசம் வியாத்தமா யிருந்தும் தெரியாத தன்மைபோலென்பது கருத்து.

குறிப்புரை :

உதாரணம் : சிவஞானபோதத்தில் (11.3) ‘அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க், கிருட்கண்ணே பாசத்தார்க் கீசன்’ என்பது கண்டுகொள்க. மலம் ஆன்மாவைச் சகசமாய் மறைத்திருக்கையிலே சிவம் ஆன்மாவைப் பொருந்தி நின்ற தெப்படியென்றும் வினா. உம் : சிவஞான போதத்தில் (7.5) ‘மெய்ஞ்ஞானந் தன்னில்... தான்’ ; சிவதருமோத்தரத்தில் ‘பரமசிவம் பராசத்தி பல்லுயிர்க்கும் பயின்றிருக்க, விரவுவதெ னிருளெனிற்கேள் வெய்யவழல் பசுமரத்தில், விரவியதே பசுமரமும் வெந்தவல வெந்து விழும், பருவமுறக் கரணமுறப் பதியுமுறப் பழுதறவே’ என்பன கண்டுகொள்க.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:needum o'liyum :ni'raiyiru'lum oaridaththuk
koodal arithu koduvinaiyaen - paadithanmun
on'ravaar soalai uyarmaruthach sampa:nthaa
:nin'ravaa 'revvaa'ru :nee.
சிற்பி