3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
பாடல் எண் : 4

கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கின் விகற்பங் கற்பங்
குரோதம் மோகங் கொலையஞர் மதநகை
விராயெண் குணனுமா ணவமென விளம்பினை
5. அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த
10. அறுவகைக் குணனுங் கருமத் தருளினை
ஆங்கவை தானும் நீங்காது நின்று
தன்வழிச் செலுத்தித் தானே தானாய்
என்வழி யென்பதொன் றின்றா மன்ன
ஊரும் பேரு முருவுங் கொண்டென்
15. ஊரும் பேரு முருவுங் கெடுத்த
பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியிற்
சைவ சிகாமணி மெய்யர் மெய்ய
மும்மலஞ் சடமென மொழிந்தனை யம்ம
மாறுகோள் கூறல் போலுந் தேறுஞ்
20. சடஞ்செய லதனைச் சார்ந்திடு மெனினே
கடம்பட மதனுட் கண்டில விடம்படும்
ஊன்றிரள் போன்ற தாயில் தோன்றி
யணைந்தாங் ககறல் வேண்டுங் குணங்களும்
பன்மையின் றாகும் எம்மைவந் தணையத்
25. தானே மாட்டா தியானோ செய்கிலன்
நீயோ செய்யாய் நின்மல னாயிட்டு
இயல்பெனிற் போகா தென்றும் மயல்கெடப்
பந்தம் வந்த வாறிங்கு
அந்த மாதி யில்லாய் அருளே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கூறிய மூன்று மலத்தின் குணக்குறி வேறு கிளக்கின் விகற்பங் கற்பங் குராதம் மோகங் கொலை யஞர் மத நகை விராய் எண் குணனும் ஆணவமென விளம்பினை சொல்லப்பட்ட மும்மலங்களின் குணம் ஆணவமலத்துக்கு வேற்றுமையாகச் சொல்லுமிடத்து, பிடித்தது விடாதாகை - க, மோகமிகுத்துச் சொல்லுகை - உ, கோபமி டையறாமை - ங, அறியாமை விஞ்சுதல் - ச, கொலைத் தொழில் நினைவு விஞ்சுதல் - ரு,எப்பொழுதும் வருத்தமுறுதல் - சா, யானெனது விஞ்சுதல் - எ, மாச்சரியம் விடாநகை - அ; இவை எட்டும் ஆணமலத்தின் குணமாமம் ; அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம் பைசால குநியம் மாச்சரியம் பய மாவேழ்குணனும் மாயைக் கருளினை பலகலை கற்றும் அறியாமை - க, களவு செய்கை - உ, கண்டது மறுத்தல் - ங, அறிந்தது மறுத்தல் - ச, அழகு பொருந்த உண்டாயும் ஈயானாகை - ரு, அத்தத்தின் மேலே மாச்சரியம் - சா, அழுக்கறாமை - எ; இவை ஏழும் மாயைக்குள்ள குணமாம்; இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும் விடுத்தலும் பரநித்தை மேவல் என்று எடுத்த அறுவகைக் குணனுங் கருமத் தருளினை மடிவந்திருத்தல் - க, பொசிப்பற்றுக் கிடக்கை - உ, புண்ணியத்தைச் செய்கை - ங, பாவத்தைச் செய்கை - ச, தொழிலைச் செய்யாமல் விடுகை - ரு, பரநிந்தனை செய்கை - சா என ஆறு குணங்களுங் கன்மத்துக் கென்றருளிச் செய்தாய்; ஆங்கவை தானும் நீங்காது நின்று தன்வழிச் செலுத்தித் தானே தானாய் என்வழியென்பதொன் றின்றாம் மன்ன எட்டு ஏழு ஆறு குணங்களையுடைய ஆணவம் மாயை கன்மென்று சொல்லப்பட்டவை அறியாமையாயுந் தனுகரணாதியாயும் மனோவாக்குக் காயங்களால் வரும் இதமகிதங்களாயும் நீங்காமல் நின்று தன்தன் வசங்களிலே என்னையாக்கித் தானே தானாகி நின்று என்னை நீங்கியறிய என்வழி யில்லையாகா நின்றது, தலைவனே; ஊரும் பேரும் உருவுங்கொண்டு என் ஊரும் பேரும் உருவுங் கெடுத்த பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம்பதியிற் சைவ சிகாமணி மெய்யர் மெய்ய உனக்குத் தனித்தொரு ஊருமில்லையாயினும் ஊரின்னதென்றும், எல்லாம் பேராயிருக்கவும் பேரின்னதென்றும், எல்லாம் உருவாயிருக்கவும் உருவின்னதென்றுங் கொண்டெழுந்தருளி வந்து, தானொழிந்தெனக்கு ஊரும் பேரும் உருவுமில்லை என்னும்படி நீக்கிப் பெண்ணையாற்றுப் புனல் சூழப்பட்ட வெண்ணெய்நல்லூரில் வந்தவன் சைவசித்தாந்தத்துக்கோர் அபிடேக இரத்தினமாகியவன் மெய்யர்க்கு மெய்யனாகிய மெய்கண்டதேவனே முன்னே; மும்மலஞ் சடமென மொழிந்தனையம்மமாறுகோள் கூறல் போலும் மூன்று மலமுஞ் சடமெனக் கூறினாய் ஈதோராச்சரியம், முன்னொடுபின் மாறுபடுமதாகாநின்றது; தேறுஞ் சடஞ்செயலதனைச் சார்ந்திடு மெனினே கடம்பட மதனுட் கண்டில இப்படி யிருபத்தொரு விதமான ஆணவம் மாயை கன்மங்களுஞ் செயலைச் சாராது சாருமாயில் சடமாகிய கடபடாதிகளிடத்துக் காணப்பட்டதில்லையே யெனின்; விடம்படும் ஊன்றிரள் போன்றதாயில் தோன்றி யணைந்தாங்கு அகறல்வேண்டும் உடலைக் கரந்த நஞ்சு உடலைப் பேதித்துத் தனக்கறிவில்லையாயினும் விகாரங்களைச் செய்விக்குமா போலவென்னின், அவை போல ஒரு கால் தோன்றி நீங்கிவிட வேண்டும் அதுவுமின்றி; குணங்களும் பன்மையின்றாகும் வெவ்வேறாக எட்டும் ஏழும் ஆறுமாகப் பலவகைக் குணங்களு மில்லையாம்; எம்மை வந்து அணையத் தானோ மாட்டாது இம்மலங்கள் என்னை வந்து தானே கூடமாட்டாது; யானோ செய்கிலன் யான் மலங்களை யறிந்து கூடிக் கொள்வதில்லை; நீயோ செய்யாய் நின்மலனாயிட்டு உன்னாற் செய்விக்கப்படுமெனின் நீ நின்மலனாதலாற் கூடிச் செய்விப்பதுமில்லையாம்; இயல்பெனிற் போகாது ஆன்மாக்களுக்குத் தானே வந்து கூடுவது இயல்பெனில் முத்தியிலும் வந்து கூடும்; என்றும் மயல்கெட எப்போதும் மயக்கங்கெட; பந்தம் வந்தவாறு இங்கு அந்தமாதியில்லாய் அருளே எமக்குப் பாசங்கூடிய வழியை முடிவும் ஈறுமில்லாதவனே சொல்லென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், ஆன்மாவுக்குப் பாசம் கூடியமுறைமையும் நீங்கிய முறைமையும் எப்படி என்று வினாவ அதற்குத்தரம்; செம்புக்குக் களிம்புபோல ஆணவம் பொருந்தியது காரணமின்றி அனாதியேயுள்ளதாம்; அது அனாதியாகவே செம்புக்குக் களிம்பும் அனாதியாக சிவப்பும் நாற்ற(மு)ங் கூடிக் கிடக்குமாப்போல மும்மலங்களும் ஆன்மாவுக்கு அனாதியாம், சத்தியாலே கூட்டியும் பிரித்துஞ் செய்வனென்பது கருத்து. பாசத்துக்கு நின்ற நிலைமை கண்டதொழிந்து அதற்குப் போக்குவரத்தில்லையென்பது பொருந்தப் பொருளாம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
The Nature of Paasam

You have explicated to me the qualities
Of the three malas. Aanavamala causes
The state which makes one feel that one is
Different from others; it causes one to attribute
To oneself qualities which one lacks.
It is also the cause of enmity and delusion.
It inclines one to kill; it causes sorrowing;
It engenders hauteur; it makes one praise
Oneself and denigrate others. These are
The eight characteristics of Aanavamala.
Mayamalam generates ignorance, falsehood,
Befuddlement, a desire to possess base things,
From Mayamalam. Indolence, nonchalance,
Performance of good and bad deeds,
Abandonment, dispraising and a nostalgia
For the gutter: these six characterize
Kanmamalam. These cling to me and force me
To pursue their own ways; I am not suffered
To follow my way. O Ruler, assuming a name,
A form and an abode in a chosen polis,
You have denuded me of my name, form
And place. You abide at Vennainallur
On the banks of the Pennai river,
As the crest-jewel of the Saivite clan; You are
The truest of the true. You declared ex cathedra
That all the malas are jada; this is a wonder
Fraught wit contradiction. If the malas
Are jada, how can they cause me misery?
They cannot act by themselves.
Pots and clothing which are jada, do not
Act by themselves, this should be the case
With the malas also. If you say
That inanimate things too can act, and cite
Poison as an example, my objection is this.
After a time; it abates and disappears.
So too, malas after sometime should quit me.
A single act; it kills. On the contrary the malas
Function multifariously. They do not get,
Of themselves, attached to me; neither will I
Suffer myself to be fettered by them.
You being, forever, mala-free, would not
Cause them to fetter me. If however you say
That it is soul’s nature to remain fettered
By the malas, in mukti too this fettering
Will continue. The fettering by malas is patent.
O One that has neither beginning nor end!
Rid me of my tohu-bohu and tell me
How I came to be fettered.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
koo'riya moon'ru malaththin ku'nakku'ri
vae'ru ki'lakkin vika'rpang ka'rpang
kuroatham moakang kolaiyagnar matha:nakai
viraaye'n ku'nanumaa 'navamena vi'lampinai
5. anjgnaa nampoy ayarvae moakam
paisaala soo:niyam maachchari yampaya
maavaezh ku'namum maayaik karu'linai
iruththalung kidaththalum iruvinai yiya'r'ralum
viduththalum para:ni:nthai maevalen 'reduththa
10. a'ruvakaik ku'nanung karumath tharu'linai
aangkavai thaanum :neengkaathu :nin'ru
thanvazhich seluththith thaanae thaanaay
envazhi yenpathon 'rin'raa manna
oorum paeru muruvung ko'nden
15. oorum paeru muruvung keduththa
pe'n'nai soozh:ntha ve'n'neyam pathiyi'r
saiva sikaama'ni meyyar meyya
mummalanj sadamena mozhi:nthanai yamma
maa'rukoa'l koo'ral poalu:n thae'runj
20. sadanjseya lathanaich saar:nthidu meninae
kadampada mathanud ka'ndila vidampadum
oon'rira'l poan'ra thaayil thoan'ri
ya'nai:nthaang kaka'ral vae'ndung ku'nangka'lum
panmaiyin 'raakum emmaiva:n tha'naiyath
25. thaanae maaddaa thiyaanoa seykilan
:neeyoa seyyaay :ninmala naayiddu
iyalpeni'r poakaa then'rum mayalkedap
pa:ntham va:ntha vaa'ringku
a:ntha maathi yillaay aru'lae.
சிற்பி