பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
70 சடைய நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1
பாடல் எண் : 1

தம்பி ரானைத் தோழமைகொண்
    டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பால் ஒருதூது
    செல்ல யேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான்
    பெருமாள் இணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார்
    ஞாலம் எல்லாம் குடிவாழ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

தம் தலைவரான சிவபெருமானையே தமக்குத் தோழராகக் கொண்டு, அப்பெருமானையே, தம் பெரிய தோள்களைத் தழுவும் பூங்கொம்பர் போன்ற பரவையாரிடத்துத் தூதாகச் செல்லு மாறு அனுப்பிய எம்பெருமானை, சேரமான் பெருமாள் நாயனாரின் ஒப்பற்ற துணைவரான நம்பியாரூரரை, உலகத்தில் எல்லா உயிர் களும் வாழ்வடையும் பொருட்டுப் பெற்ற பேறுடையவர், சடையனார் ஆவர்.

குறிப்புரை :

`பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற' (குறள், 61) என்பர் திருவள்ளுவர். அறிவறிந்த மக்கட் பேறுமட்டுமன்று; அருள்நலம் சான்ற மக்கட் பேறாகவும் அமையச் சடையனாரிடத்து நம்பியாரூரர் தோன்றினார். அப்பேறொன்றே சாலும் என்பதால் இவ்வொரு பாடல் வழிநின்றே சடையனாரை ஆசிரியர் போற்றியருளுவாராயினர். சடைய நாயனார் புராணம் முற்றிற்று.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
He was a friend of the Lord and he bade Him
Ply as his messenger to her-- verily a flowery liana--,
That would embrace his broad shoulders;
He, Nampi Aarooran, the peerless friend
Of Ceramaan Perumaan, was engendered
By Sataiyan that the world might thrive.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
thampi raanaith thoazhamaiko'n
daru'lith thamathu thadampuyanjsaer
kompa naarpaal oruthoothu
sella yaevik ko'ndaru'lum
empi raanaich saeramaan
perumaa'l i'naiyil thu'naivaraam
:nampi yaaroo raraippaya:nthaar
gnaalam ellaam kudivaazha.
சிற்பி