பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
31 தண்டியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
பாடல் எண் : 6

நண்ணி நாளும் நற்றொண்டர்
    நயந்த விருப்பால் மிகப்பெருகி
அண்ணல் தீர்த்தக் குளங்கல்லக்
    கண்ட அமணர் பொறாராகி
எண்ணித் தண்டி யடிகள்பால்
    எய்தி முன்னின் றியம்புவார்
மண்ணைக் கல்லிற் பிராணிபடும்
    வருத்த வேண்டா வென்றுரைத்தார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

இவ்வாறாக நாள்தோறும் சென்று, தண்டியடிகள் நயந்த விருப்பினாலே, அவ்வாசை மிகப் பெருகி, பெருமானுடைய தீர்த்தக் குளத்தை அகழக் கண்ட சமணர்கள் பொறுக்க மாட்டாராய், மனத்தில் வஞ்சனை கொண்டு தண்டியடிகள்பால் சென்று, இதனைச் சொல்வாராய், `நீர் மண்ணை அகழ்ந்தெடுத்தால் அதனுள் வாழும் உயிரினங்கள் இறந்தும் காயமுற்றும் வருந்தும், எனவே அகழ வேண்டா' என்று சொன்னார்கள்.

குறிப்புரை :

இவ்வாறாக நாள்தோறும் சென்று, தண்டியடிகள் நயந்த விருப்பினாலே, அவ்வாசை மிகப் பெருகி, பெருமானுடைய தீர்த்தக் குளத்தை அகழக் கண்ட சமணர்கள் பொறுக்க மாட்டாராய், மனத்தில் வஞ்சனை கொண்டு தண்டியடிகள்பால் சென்று, இதனைச் சொல்வாராய், `நீர் மண்ணை அகழ்ந்தெடுத்தால் அதனுள் வாழும் உயிரினங்கள் இறந்தும் காயமுற்றும் வருந்தும், எனவே அகழ வேண்டா' என்று சொன்னார்கள்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
As the great serviteur in growing love plied himself
Daily in the task of deepening the Lord’s tank,
The Samanas who witnessed it could not endure it;
They came to Tandi Atikal and addressed him thus:
“If you dig the earth, beings that live there
May die; desist from such exertion.”
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:na'n'ni :naa'lum :na'r'ro'ndar
:naya:ntha viruppaal mikapperuki
a'n'nal theerththak ku'langkallak
ka'nda ama'nar po'raaraaki
e'n'nith tha'ndi yadika'lpaal
eythi munnin 'riyampuvaar
ma'n'naik kalli'r piraa'nipadum
varuththa vae'ndaa ven'ruraiththaar.
சிற்பி