பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
31 தண்டியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
பாடல் எண் : 16

மன்ன கேள்யான் மழவிடையார்
    மகிழுந் தீர்த்தக் குளங்கல்லத்
துன்னும் அமணர் அங்கணைந்தீ
    தறமன் றென்று பலசொல்லிப்
பின்னுங் கயிறு தடவுதற்கியான்
    பிணித்த தறிக ளவைவாங்கி
என்னை வலிசெய் தியான்கல்லுங்
    கொட்டைப் பறித்தா என்றியம்பி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

`அரசே! கேள்; இளைய ஆனேற்றினையுடைய பெருமான் மகிழ்கின்ற தீர்த்தக் குளத்தை யான் தோண்டிட, அதனைக் கண்டு அங்கு இருந்த சமணர்கள், வந்து என்னை நோக்கி, ஈது அறமன்று என்று பல சொல்லிப் பின்னர், யான் குருடானமையின், தடவிச் செல்லக் கட்டிய கயிறு, அதனைப் பிணைத்திருக்கும் கோல்கள் ஆகியவற்றைப் பிடுங்கி, எனக்கு வன்மைசெய்து, யான் வைத்திருந்த மண்வெட்டியையும் பறித்தார்கள்' என்று சொல்லிப் பின்னரும்.

குறிப்புரை :

************

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
“O king, listen to me! When I tried to deepen
The tank of the Lord whose mount is the young Bull,
The Samanas came there in their strength and said:
“This is not piety!” They also spoke many harsh words
And uprooted the pegs over which I had fastened
The rope to feel my way; they also snatched
From me the basket that I kept for carrying
The earth.” He subjoined and said:
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
manna kae'lyaan mazhavidaiyaar
makizhu:n theerththak ku'langkallath
thunnum ama'nar angka'nai:nthee
tha'raman 'ren'ru palasollip
pinnung kayi'ru thadavutha'rkiyaan
pi'niththa tha'rika 'lavaivaangki
ennai valisey thiyaankallung
koddaip pa'riththaa en'riyampi.
சிற்பி