பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
31 தண்டியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
பாடல் எண் : 14

தண்டி நமக்குக் குளங்கல்லக்
    கண்ட அமணர் தரியாராய்
மிண்டு செய்து பணிவிலக்க
    வெகுண்டான் அவன்பால் நீமேவிக்
கொண்ட குறிப்பால் அவன்கருத்தை
    முடிப்பா யென்று கொளவருளித்
தொண்டர் இடுக்கண் நீங்கஎழுந்
    தருளி னார்அத் தொழிலுவப்பார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

` தண்டி நமக்குக் குளம் தோண்டக் கண்ட சமணர்கள் தாங்காது, பொறாமையால் வன்மை செய்து, அவன் பணியினை விலக்கிட, அவன் வெகுட்சியால் வேதனைப்பட்டான். அவனிடம் நீ சென்று அவன் மனத்தில் கொண்ட குறிப்பின்வழி அவன் எண்ணத்தை முடிப்பாய்' என அருள் புரிந்து, தண்டியடிகளது இடுக்கண் நீங்க அருள்செய்து மறைந்தருளினார் அவர்தம் தொழிலை மகிழ்வாராகிய இறைவர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
“The Samanas who witnessed the deepening
Of Our tank by Tandi, unable to endure it,
Have forcibly prevented him from doing so;
He is therefore extremely wroth; may you call
On him and implement his intent.”
The Lord who delights to do away with the misery
Of His devotee, disappeared having ordered
The removal of His devotee’s misery.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
tha'ndi :namakkuk ku'langkallak
ka'nda ama'nar thariyaaraay
mi'ndu seythu pa'nivilakka
veku'ndaan avanpaal :neemaevik
ko'nda ku'rippaal avankaruththai
mudippaa yen'ru ko'lavaru'lith
tho'ndar idukka'n :neengkaezhu:n
tharu'li naarath thozhiluvappaar.
சிற்பி