பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
31 தண்டியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
பாடல் எண் : 1

தண்டி யடிகள் திருவாரூர்ப்
    பிறக்கும் பெருமைத் தவமுடையார்
அண்ட வாணர் மறைபாட
    ஆடுஞ் செம்பொற் கழன்மனத்துக்
கொண்ட கருத்தின் அகனோக்கும்
    குறிப்பே யன்றிப் புறநோக்கும்
கண்ட வுணர்வு துறந்தார்போற்
    பிறந்த பொழுதே கண்காணார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

தண்டியடிகள் என்பார் திருவாரூரில் பிறந்திடும் பெருமையாம் தவமுடையார். தேவர்கள் நான்மறைகளைப் பாட ஆடிடும் சிவந்த பொன்மயமான இறைவரின் திருவடிகளை மனத்தில் கொண்ட கருத்தில், உள்ளத்தே நோக்கி மகிழும் குறிப்பேயல்லாது வெளியே நோக்கிக் காணும் உணர்ச்சிகளை நீக்கினார் போன்று, தாம் தோன்றிய பொழுதே கண்பார்வை யிலரானார்.

குறிப்புரை :

திருவாரூரில் பிறக்க முத்தி என்பர். திருவாரூர்ப் பிறந்தார் கள் எல்லாருக்கும் அடியேன் என்பர் சுந்தரரும் (தி.7 ப.39 பா.10), `திருவாரூர்த் தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால், ஆற்றவும் மற்றவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்' என்பது மனு வேந்தர் கூற்றாகும் (தி.12 திருமலைச் சரு. பா.126). `ஆரூர்ப் பிறத்தல் நேர்படின் அல்லது, செயற்கையின் எய்தும் இயற்கைத் தன்றே' என்பர் குமரகுருபர அடிகள் (குமர. சிதம்பர மும். பா.1). இத்தகைய அருமை யும் பெருமையும் நோக்கியே திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார் என்றார். புற நோக்கினும் இவர் பெருமானைக் கண்டு மகிழும் அகநோக்குச் சிறப்புடைத்தாதல் பற்றியே சுந்தரர் பெருமானும் `நாட்டம்மிகு தண்டி' (தி.7 ப.39 பா.5) என்றார். `அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம்' (தி.10 த.9 ப.25 பா.10) என்பர் திருமூலரும்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Tandi Atikal had wrought such glorious tapas
As to get born in Tiruvaaroor; the Lord dances
To the hymning of the Vedas by the celestials;
As if he would envision only the two dancing feet
Of the Lord, dazzling like ruddy gold, with his
Inner eye and see nothing else which is externally
Witnessed by eyes of limited vision,
He was sightless from his very birth.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
tha'ndi yadika'l thiruvaaroorp
pi'rakkum perumaith thavamudaiyaar
a'nda vaa'nar ma'raipaada
aadunj sempo'r kazhanmanaththuk
ko'nda karuththin akanoakkum
ku'rippae yan'rip pu'ra:noakkum
ka'nda vu'narvu thu'ra:nthaarpoa'r
pi'ra:ntha pozhuthae ka'nkaa'naar.
சிற்பி