எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
01 இயற்கைப் புணர்ச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18


பதிக வரலாறு :

இதன் பொருள்:
இயற்கைப்புணர்ச்சி, பாங்கற் கூட்டம், இடந்தலைப்பாடு, மதியுடன்படுத்தல், இருவருமுள்வழி யவன்வரவுணர்தல், முன்னுறவுணர்தல்,
குறையுறவுணர்தல், நாண நாட்டம், நடுங்கநாட்டம், மடல், குறைநயப்பித்தல், சேட்படை, பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தணத்தல், உடன்போக்கு, வரைவு முடுக்கம், வரைபொருட்பிரிதல், மணஞ்சிறப்புரைத்தல், ஓதற்பிரிதல், காவற்பிரிதல், பகைதணிவினைப்பிரிதல், வேந்தற் குற்றுழிப்பிரிதல், பொருள்வயிற்பிரிதல், பரத்தையிற்பிரிதல் என இவ்விருபத்தைந்தும் இந் நூற்குக் கிளவிக் கொத்தெனப்படும் அதிகாரங்களாம் என்று கூறுவர் அகத்திணை இலக்கணம் உணர்ந்தோர் என்றவாறு. அவற்றுள்,இயற்கைப் புணர்ச்சி என்பது பொருளதிகாரத்திற் கூறப் பட்ட தலைமகனும், தலைமகளும், அவ்வாறொரு பொழி லிடத்து எதிர்ப்பட்டுத் தெய்வம் இடைநிற்பப் பான்மைவழியோடி ஓராவிற் கிருகோடுதோன்றினாற்போலத் தம்முள் ஒத்த அன்பின ராய் அவ்விருவரொத்தார் தம்முட்டாமே கூடுங்கூட்டம். அது நிகழுமாறு
காட்சி யையந் தெளித னயப்பே
யுட்கோ டெய்வந் துணிதல்கைக் கிளையொடு
கலவி யுரைத்த லிருவயி னொத்தல்
கிளவி வேட்ட னலம்புனைந் துரைத்தல்
பிரிவுணர்த் தல்லொடு பருவர லறித
லருட்குண முரைத்த லணிமை கூற
லாடிடத் துய்த்த லருமை யறிதல்
பாங்கியை யறித லெனவீ ரொன்பா
னீங்கா வியற்கை நெறியென மொழிப. -திருக்கோவைநெறிவிளக்கம்
இதன் பொருள்:
காட்சி, ஐயம், தெளிதல், நயப்பு, உட்கோள், தெய்வத்தைமகிழ்தல், புணர்ச்சிதுணிதல், கலவியுரைத்தல், இருவயி னொத்தல், கிளவிவேட்டல், நலம்புனைந்துரைத்தல், பிரிவுணர்த்தல், பருவரலறிதல், அருட்குணமுரைத்தல், இடமணித்துக்கூறி வற்புறுத்தல், ஆடிடத்துய்த்தல், அருமையறிதல், பாங்கியையறிதல் என இவை பதினெட்டும் இயற்கைப் புணர்ச்சியாம் என்றவாறு. அவற்றுள்

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.