எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
16 திருப்பொன்னூசல்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பதிக வரலாறு :

அருட்சுத்தி
`மகளிர் விளையாட்டுக்களில், ஊசலாடுதல் ஒன்று` என்ப தும், இதனைப் பொழில் விளையாட்டில் கொடிகளாலாகிய ஊசலில் ஏறியும், இல்லங்களில் சங்கிலியிற் கோக்கப்பட்ட பலகையில் ஏறியும் ஆடுவர்` என்பதும், `அங்ஙனம் ஆடுங்கால் இனியதொரு பாடலைப் பாடிக்கொண்டு ஆடுவர்` என்பதும் நன்கறியப்பட்டவை. பொழில் விளையாட்டு ஊசல் கலித்தொகை முதலியவற்றிலும், ஏனையது பிற்கால இலக்கியங்களிலும் காணப்படும். ஊசலாட்டில் பாடும் பாடல் `ஊசல்வரி` எனப்படும் என்பதும், பாடாண்பாட்டும் அவ் வரிப்பாட்டு வகையில் பாடப்படும் என்பதும் சிலப்பதிகாரத்து ஊசல்வரியால் இனிதுவிளங்கும். மேற்கூறிய இருவகை ஊசல்களுள் இஃது இல்லத் துள் பொற்பலகைமீது ஏறியாடும் ஊசல் வகையாக அருளிச் செய்யப் பெற்றமையால், `பொன்னூசல்` எனப்பட்டது. ஊசலை இக்காலத்தில், `உஞ்சல்` என்றும், `ஊஞ்சல்` என்றும் வழங்குப. இதன்கண் கூற்று நிகழ்த்தும் தலைவி, இறைவன்பால் பேரின்பம் பெற்றவள் என்றே கொள்க. ஒன்பது திருப்பாட்டுக்களான் இயன்றிருத்தலின், இது, பின் வரும் பத்துக்கள் சிலவற்றின்பின் வைக்கற்பாலதாயினும், ஆறடி களான் இயன்ற கொச்சகக் கலிப்பாக்களான் இயன்றிருத்தல்பற்றி அவற்றிற்கு முன்வைத்துக் கோக்கப்பட்டது. `இது தில்லையில் அருளிச்செய்யப்பட்டது` என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. திருத்தோணோக்கத்தில் சில திருப்பாட்டுக்களுள் இறைவனது மறக் கருணையைக் கூறியவாறு போலாது இங்கு முழுதும் அறக் கருணையைக் கூறுதலின், இதற்கு `அருட்சுத்தி` எனக் குறிப்புரைத் தனர் முன்னோர். அருட்சுத்தி - அருளால் உண்டாகிய தூய்மை.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.