எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
    அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
    பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
    எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
    இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து, எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி வாய் மிகுதியும் ஊறி, இனிமை பயக்கும்படிப் பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்! இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது, சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ? உன் அன்புடைமை வஞ்சனையோ? உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்.

குறிப்புரை:

`பேசுவாய்` என்றதும், `பேசுகின்றவளே` என விளித்ததேயாம். இவ்வாறு விளித்தது முன்னாள் இவள், `நீவிர் வரும் முன்னமே நான் எழுந்திருந்து, நீவிர் வரும்பொழுது உங்கள் எதிரே வந்து இறைவனை மனம் உருகித் துதிப்பேன்` என்று சொல்லி, இது பொழுது அவ்வாறு செய்யாது உறங்கிக் கிடந்தமையைச் சுட்டியாம். ஆகவே, ``முன்வந்து எதிர்எழுந்து`` என்றது `முன் எழுந்து எதிர் வந்து` என மாற்றியுரைக்கற்பாலதாயிற்று. இதனானே, ``முத்தன்ன வெண்ணகையாய்`` என்றதும் `எதனையும் திட்பமின்றிப் பேதை நீரையாய்ச் சொல்லளவில் இனிமைப்படச் சிரித்துக்கொண்டு கூறுகின்றவளே` என்றவாறாம். கடை - வாயில். முதற்றொட்டு, `கடை திறவாய்` என்றதுகாறும் சென்றமகளிர் கூறியது. இதனை அடுத்து வரும் இரண்டடிகளும் உறங்கினவள் கூறுவன.
பத்து - அடியார்க்குரிய இலக்கணமாகிய பத்து. இவற்றை, `புறத்திலக்கணம் பத்து` எனவும், `அகத்திலக்கணம் பத்து` எனவும் இரண்டாக்கி உபதேச காண்டங்கூறும். அவற்றுள் புறத்திலக்கணம் பத்தாவன: திருநீறும் கண்டிகையும் அணிதல். பெரியோரை வணங்கல், சிவனைப் புகழ்ந்துபாடுதல், சிவநாமங்களை உச்சரித்தல், சிவபூஜை செய்தல், சிவபுண்ணியங்களைச் செய்தல், சிவபுராணங் களைக் கேட்டல், சிவாலயவழிபாடு செய்தல், சிவனடியாரிடத்தன்றி உண்ணாமை, சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல் என்பன.
அகத்திலக்கணம் பத்தாவன; சிவபெருமானது புகழைக் கேட்குங்கால் மிடறு விம்மல், நாத்தழுதழுத்தல், இதழ் துடித்தல், உடல் குலுங்கல், மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், சொல்லெழாமை, கண்ணீர் அரும்புதல், வாய்விட்டழுதல், மெய்ம்மறத்தல் என்பன.
``பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே`` (தி.4. ப.18. பா. 10) என்றருளினார் திருநாவுக்கரசரும். இவற்றை, சித்தாந்த நூல்களிற் காணப்படும் தசகாரியமாகவும் சொல்லுப. `பத்தும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. இனி, `பற்று என்பது எதுகை நோக்கி, பத்தென ஆயிற்று` என்றும் உரைப்பர். பழைமை, புதுமைகளை முன் எழுதல், பின் எழுதல் பற்றிக் கூறினாள். பாங்கு - எல்லாம் நிரம்பிய தன்மை. `நீங்கள் தாம் நிரம்பிய அடியார்கள்` என, தன்னை நகைத்துரைத்தவர்களைத் தான் நகைத்துரைத்தாள் என்க. இகலிக் கூறுகின்றாளாகலின், தன்னோடொத்த பிறரையும் உளப்படுத்து, `அடியோம்` எனவும், `எமக்கு` எனவும் பன்மையாற் கூறினாள். புன்மை - குற்றம். பொல்லாது - தீமை; `தீமை உண்டோ` என உரைக்க. அடுத்து வரும் மூன்றடிகளும் சென்றோர் மறித்தும் கூறுவன.
`நின் அன்புடைமை எத்தோ` என மாற்றுக. எத்து-வஞ்சனை. ``எத்தனாகிவந் தில்புகுந்து`` (தி.8 சென்னிப். 4) என்றாற் போலப் பின்னரும் வருதல் காண்க. தங்களை, `மெய்யடியார்கள்` என்று அவள் நகையுள்ளுறுத்துக் கூறக்கேட்டவர்கள், `உன்னுடைய மெய்யன்பை நாங்கள் அறிந்திலமோ` என மறித்தும் நகைபடக் கூறிப் பின்னர், `உள்ளத்தில் மெய்யன்புடைய மகளிரானவர், விடியலில் எழுந்து நம்பெருமானைப் பாடமாட்டார்களோ` என வெளிப்படை யாகவே கழறினர். `விடியலில் எழுந்து` என்பது, இடத்தால் வந்து இயைந்தது. இதன்பின், உறங்கியிருந்தவள், `சிறிது அயர்த்துப் போய் விடியலில் எழாது துயின்று கிடந்த எனக்கு இத்துணையும் வேண்டுவது தான்` என்று தன் நெஞ்சோடே சொல்லிக் கொண்டு வந்து உடன் கலந்தாள். ஈற்றடியையும், சென்ற பெண்கள் கூற்றாகவே கொண்டு `இவ்வளவே எமக்கு வேண்டும்` எனவும் உரைப்பர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
“ముత్యములవరుసకు ఈడైన తెల్లటి దంతవరుసను కాన్పరచుచూ, నవ్వగల ఓ స్త్రీ! “ “అనుదినమూ మా అందరికంటే ముందుగ నిద్రలేచి, మాకు ఎదురొచ్చి, మాతండ్రియైన ఆ ఈశ్వరుడు, ప్రేమమయుడు; అమృతమువంటివాడని మనసారా స్తుతించు విధమున మిక్కిలి మధురముగ, చక్కెర నోటినుండివూరునట్లు మాటలాడెదవు; ఇప్పుడు ఇంకనూ నిద్రించుచున్నావు! లేచివచ్చి, నీయొక్క నోటిని తెరవుము!” ” మీరు భగవంతునిపై అధికమైన ప్రేమను చూపువారు! ఆ భగవంతుని అతిప్రాచీనమైన భక్తులు మీరు! పద్ధతితో కొలుచు అలవాటుగలవారు!” “క్రొత్త భక్తులైన మాయొక్క లోపములను తొలగించి, మీ శిష్యులను చేసుకొనినచో, మా పాపములు తొలగిపోవునో!?” “మీయొక్క భక్తి వంచకముతో కూడినదా!? “ “మీయొక్క నిజమైన భక్తి మేమందరమూ తెలుసుకొనలేమా?!శుద్ధమైన మనసుగలవారు ఆ పరమేశ్వరునిపై గానము చేయరా!? నిన్ను నిద్రనుండి లేపడానికి వచ్చిన మాకందరికీ ఇది కావలసినదే!?”

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಮುತ್ತಿನಂತಹ ದಂತಗಳುಳ್ಳವಳೇ ! ಹಿಂದೆಲ್ಲಾ ಮುಂದೆ ಬಂದು ನಿಂತು, ನನ್ನ ತಂದೆ, ಆನಂದ ಸ್ವರೂಪನು ! ಅಮೃತ ಸಮಾನನು ! ಎಂದು ಬಾಯ್ತುಂಬಾ ನುಡಿದು ಇನಿದಾಗಿ ಸ್ತುತಿಸುತ್ತಿದ್ದೆ. ಈಗಲೋ ನಿನ್ನ ಬಾಯೆಂಬ ಬಾಗಿಲನ್ನು ತೆರೆಯದಂತಿರುವೆ ! ಎಂದು ಹೀಗಳೆದು ನಿದ್ದೆಗೈವವಳನ್ನು ಎಬ್ಬಿಸಿದಾಗ ಆಕೆ ಮೇಲೆದ್ದು ನೀವು ದೇವನ ಮೇಲೆ ಅಪಾರ ಪ್ರೀತಿ ಹೊಂದಿರುವಿರಿ ! ಭಗವಂತನ ಹಳೆಯ ಭಕ್ತರು ನೀವು ಹೊಸ ಭಕ್ತನಾದ ನಮ್ಮ ನೀಚತವನ್ನು ನೀಗಿಸಿ ಆಳ್ಗೊಂಡರೆ, ಆಗುವ ಕೇಡೇನು? ಎಂದು ತಮಾಷೆ ಮಾಡಲು ಜೊತೆಯಲ್ಲಿ ಬಂದ ಹೆಂಗಳೆಯರು ಇದೂ ಒಂದು ವಂಚನೆಯೋ? ನಿನ್ನ ಪ್ರೀತಿಯನ್ನು ನಾವೆಲ್ಲರು ಅರಿಯೆವೇ? ಮನ ಶುದ್ಧರಾದವರು ನಮ್ಮ ಶಿವ ಪರಮಾತ್ಮನನ್ನು ನೆನೆಯರೇ? ನಿನ್ನನ್ನು ನಿದ್ದೆಯಿಂದ ಎಬ್ಬಿಸಲು ಬಂದ ನಮಗೆ ಇದೂ ಆಗಬೇಕಾದುದೆ. ಮತ್ತಷ್ಟು ಆಗಬೇಕಾದುದೇ. ನಮ್ಮ ಹೆಣ್ಣೇ ಮೇಲೇಳು ನಾವು ನುಡಿವುದ ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು ಎಂದರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

മുത്തുപ്പൊന്‍ പുഞ്ചിരിയാളേ ! മുന്‍കൂ എഴുു നം എതിരില്‍ വു എന്‍
അത്തന്‍, ആനന്ദന്‍, അമൃതന്‍ എല്ലൊം നാവൂറി
തിത്തിക്കുമാറുര ചെയ്യുവോളേ വാതില്‍ തുറക്ക നീ
ഭക്തിയുള്ളവളേ ഈശനില്‍ പാങ്ങാര്‍ പുരാണിയേ
പുത്തന്‍ അടിയാരെയും അവന്‍ പുന്‍മ തീര്‍ത്തരുളുക അരുതോ
ചിത്തം ശിവമാര്‍ാേരും പാടുകില്ലേ നം ശിവനെ
എത്താര്‍ നിന്‍ സ്‌നേഹ വാത്സല്യം നാം അറിയില്ലേ !
ഇത്ഥമിതുവേണം നമുക്കെന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මුතු සේ සිනහ ඇති ලඳුනි, පෙරට’වුත් ඉදිරියේ සිට මගේ
පියාණන්, ආනන්දයන්, අමෘතයන් යනාදි වදන්, මුව පුරා
මධුර ලෙස පවසන්නෙහි, ඇවිත් නුඹේ දොර හරිනු මැන
බන්ධන ඇත්තා, දෙවිඳුගෙ පරණ බැතිමතා‍ය, මිතු දම් ඇත්තා‍ ද වේ
නවක බැතිමතුන් වී, අප කිලුට දුරුකර, පිළිසරණ වුවහොත් නරකද?
කිමදෝ නුඹේ බැති පෙම සියල්ලන් ම නො දනිමු දෝ?
හදවත් පිවිතුරුවූවන් නො ගයාවි දෝ අප ශිව දෙව් ගුණ?
මේ සියල්ලම වුවමනයි අපට දන්නෙහි දෝ සුරතලියේ! 03

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai gadis yang bergigi putih ibarat mutiara!
Setiap hari anda bangun sebelum kami dan berdiri di hadapan
Dengan manis menyatakan bahawa “Tuhan ayahndaKu,
kebahagiaanKu dan ibarat madu (amutham),” sila buka pintu
(ujaran gadis di luar rumah)
Kamu sangat menyayangi Tuhan, merupakan penganut lama dan
Mengetahui cara mendekatinya. Malapetaka mungkin timbul
Jika Ku merupakan penganut baru-Nya menyertai kamu sebagai hamba-Nya
(ujaran gadis di dalam rumah)
Tidakkah kami mengetahui percintaan sejatimu terhadap-Nya?
Tidakkah mereka yang berfikiran murni akan menyanyikan Siva kita?
Kami yang datang membangunkan kamu meminta semua ini.
Oleh itu, Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!
(ujaran gadis di luar rumah)

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
एक सखीः मोती सदृश दंत पंक्तिवाली सखी
इसके पूर्व तो हम सबसे पहले आकर
‘हमारे पिताश्री, अमृतमयी‘ आदि कहकर
भगवान की स्तुति जी भरकर आनन्द से गायी करती थीं।
आज क्या हुआ, पुकारने पर भी जगती नहीं।

दूसरी सखी सोनेवालीः (परिहास करते हुए) आप सब लोग भगवद् भक्त हैं।
ईश के पुराने भक्त हैं। हम नवागंतुक भक्त हैं।
हमें कुछ भी नहीं मालूम।
क्या हमारी अज्ञानता को दूर करके
आप लोग अपने साथ हमें सम्मिलित नहीं कर सकती।
अन्य सखियॉं :- क्या हम नहीं जानती कि
ईश पर तुम्हारा कितना प्रेम है?
सभी भगवद् प्रेमी हमारे शिव की स्तुति करना चाहते हैं।
खेद है हम तुमको जगाने आई हैं,
धिक्कार है, हमें यह भी चाहिए।
इतना ही नहीं और भी चाहिए।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
”मौत्तिकधवलस्मिते, पुरा त्वं शीघ्रमेव उत्थाय, मम तात, आऩन्दस्वरूपी, अमृतमय इति
मधुरं भाषन्नासीः। इदानीं कपाटं अपावृणु। त्वं तु ईश्वरस्य प्रेमिणी असि, ततस्तु पुरातनी च। शिष्ठा चासि।
नव दासीनां अस्माकं दोषान्क्षमित्वा किं त्वं न प्रसीदसि। तव प्रेम किं वञ्चना अस्ति। वयं सर्वे जानीमः।
चित्तसौन्दर्यवत्यः अस्माकं शिवं किं न गायन्ति। वयं यत् त्वां अबोधयाम, एतत् परिहासं अर्हामः”।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Balapramathanī-Šakti zur Balavikarnī-Šakti:
O du mit den weißen Zähnen,
Die hell erglänzen wie Perlen,
Steg’ auf, geh’ uns vorauf!
Mit deiner lieblichen Stimme
Preise den Höchsten, Mädchen,
Preis’ ihn als deinen Vater,
Als den Seligen preis’ ihn!
Preis’ ihn als den Nektar!
Komm’, Mädchen, öffne dein Zimmer!
Balavikarnī:
Ihr Frommen -ach! - Ihr Frommen
Ihr Dienerinnen, all bewährt,
Ihr Tugendsamen - sagt an:
Wird es euch Böses bringen,
Wenn ihr der neuen Sklavin,
Der unerfahr’nen, helft?
Und wenn ihr mich nehmt auf
Als eure Dienerin?
Balapramathanī zur Balavikarnī:
Sprich nicht also, o Mädchen!
Wir alle, wir kennen ja
Deine große Liebe zu Šiva!
Zu allen O Tugendsame, ihr!
Wir singen doch nur unserm Šiva!
Das ist es, was wir wünschen!
Höre doch, hör’, o Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
(ေနာက္တစ္ေယာက္ေသာ ပ်ိဳေမကို ႏိွဳးၾကရန္ ပ်ိဳေမတစ္သိုက္ ေနရာေရႊ႕ခဲ့ၾက ေလၿပီ…..
ပ်ိဳေမတစ္ေယာက္က…
ပုလဲသြယ္တန္းျဖဴေဖြးလွပ သြားအလွပိုင္သူ လံုမေရ….အရင္ကဆို ငါတို႔ထက္ ေစာေအာင္ အာရုဏ္မတိုင္မီ အိပ္ယာထက္မွ ႏိုးထႀကိဳဆိုေနခဲ့ၿပီး ငါ့ ဖခင္ဘုရားရွင္က အနႏၲ ေပ်ာ္ရႊင္မွုကို ေပးအပ္ေစတဲ့ နတ္သုဒၶါတမွ် ခ်ိဳျမေစတဲ့သူျဖစ္တယ္လို႔ သြားရည္ယိုေအာင္ ခ်ိဳၿမိန္စြာ ဆိုေလ့ရွိသူရယ္….၊ ယခုအခါ အိပ္ယာထက္မွ ထလာခဲ့ၿပီး အိမ္ေရွ႕တံခါးကို ဖြင့္ပါေလေတာ့….?
အိပ္ေပ်ာ္ေနခဲ့သူ လံုမက…
ရွင္ေတာ္ျမတ္ဘုရားအား ခ်စ္ခင္ၾကည္ညိဳေသာသူမ်ားရယ္၊ သီဝအရွင္ရဲ႕ ဂုဏ္ေတာ္ကို ပြားမ်ားသူတို႔ေရ…..ေမတၲာ၏ ေက်းကၽြန္ျဖစ္ၾကကုန္ေသာ ပ်ိဳေမတို႔ေရ…၊ ငါ့ရဲ႕အျပစ္ကို ခြင့္လႊတ္ကာ ငါ့အား ေခၚသြားၾကဦးမည္ မဟုတ္ပါလား…။
အျခားလံုမပ်ိဳတစ္ေယာက္က…..
နင့္(ညည္း)ရဲ႕ ေမတၲာစစ္ကို ငါတို႔အားလံုး သိၿပီးခဲ့ၾကပါၿပီ၊ စိတၲစင္ၾကယ္သူမ်ားက သီဝအရွင္ျမတ္ကို လကၤာတို႔ျဖင့္ သီဆိုပူေဇာ္ျခင္းမျပဳပဲ ေနႏိုင္ပါမည္ေလာ။ နင့္(ညည္း) ႏိွုးဖို႔ရန္ ေရာက္ရွိလာတဲ့ ငါတို႔မွာလည္း ဤသည္ အားလံုးလိုအပ္ေနပါသည္ေလ။
(အျခားေသာ အေဖာ္ျဖစ္ေသာ အပ်ိဳစင္တစ္ေယာက္အိမ္သို႔ ေရာက္ရွိလာပါသည္။ ထိုအိမ္မွ သူမကိုလည္း ႏိွဳးၾကပါသည္။
လံုမပိ်ဳေလး တစ္ေယာက္က…..
ထြန္းလင္းေတာက္ပေနေသာ ဘုရားရွင္အတြက္သာလွ်င္ ငါ၏ ေမတၱာျဖစ္ေစရမည္ ဟူ၍ ေန႔၊ ညမျပတ္ ေျပာဆိုေနခဲ့သည့္ ပ်ိဳမေရ…ခုေတာ့ ပန္းခင္းေမြ႕ယာထက္ဝယ္ အိပ္ေပ်ာ္ေမြ႕ေနေလၿပီေလာ…?
အိပ္ေပ်ာ္ေနခဲ့သူက…
ဟင့္အင္း…ေကာင္းကင္ဘံုသားတို႔ကို ၾကည္ညိဳေစေသာ နင္(ညည္း)တို႔ရဲ႕
ပါးစပ္ဝယ္ ငါ့အား ကဲ့ရဲ႕ျပစ္တင္ရေကာင္းသေလာ…..?
အျခားလံုမပ်ိဳတစ္ေယာက္က…..
ျမင့္မားတဲ့ ေရာင္ျခည္ေတာျဖစ္သူ၊္ကို ျဖန္႔ေဝလို႔ ရွိေနသူ၊ သီဝေလာက၏ အဓိပတိျဖစ္သူ၊ သီ(လ္)လိတ္ သီရုေျမရဲ႕ ဗ်ာဒိတ္ေတာ္ရွင္အျဖစ္ ေပၚထြန္းခဲ့တဲ့ အက(ပန္တ်ာ) အႏုပညာရဲ႕ အရွင္သခင္ အတြက္သာလွ်င္ ငါတို႔ေမတၱာက အစဥ္အၿမဲ ေပးဆပ္မည္ဟူ၍ ဆိုၾကပါစို႕လားကြယ္…..?

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
এগৰাকী সখী : মুক্তাৰ দৰে দাঁতযুক্ত সখী
ইয়াৰ পূৰ্বে আমি সকলোতকৈ আগত আহি
‘আমাৰ পিতা, আমৃতময়ী’ আদি কৈ
ভগৱআনৰ স্তুতিও অতি আনন্দেৰে গাইছিলা।
আজি কি হ’ল, মাতি থকাৰ পিছতো তুমি উঠা নাই?
দ্বিতীয় সখী (শুই থকা) : (পৰিহাস কৰি) আপোনালোক সকলো ভগৱদ্ ভক্ত।
ঈশ্বৰৰ পুৰণি ভক্ত। মই নৱ আগন্তুক ভক্ত।
মই একোৱে নাজানো।
মোৰ এই অজ্ঞানতাক দূৰ কৰি
আপোনালোকে নিজৰ সৈতে মোক সন্মিলিত কৰিব নোৱাৰে নেকি?
বাকী সখীসকল : আমি নাজানো নেকি ঈশ্বৰৰ প্ৰতি তোমাৰ কিমান প্ৰেম?
সকলো ভগৱত প্ৰেমীয়ে আমাৰ শিৱৰ স্তুতি কৰিবলৈ বিচাৰে।
পৰিতাপৰ বিষয় যে আমি তোমাক জগাবলৈ আহিলোঁ।
ধিকাৰ যে আমাক এয়াও লাগে।
এয়াই নহয় আমাক আৰু লাগে।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O One whose teeth are white as pearl !
You will daily Wake up before we bestir,
come before us And affirm thus:
``The form of our Sire is bliss;
He is The One ambrosial.
`` Thus,
even thus,
will you Utter words suffused with your salival sweetness.
Well,
come,
open your door.
``You foster great love for our God;
Yours indeed is Hoary servitorship.
If you who are Established in the service of Siva,
do away with our – The new servitors` littleness and rule us,
Will it spell evil?
`` ``Ha,
is your love deceptious?
Do we not all of us,
Know that your love is true?
Will not those Of chastened heart,
hymn and hail our Siva?
Well,
we who have come to wake you up,
Deserve all these,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O, Girl of pearl-white smiles! Fine, you come
Before us,rising early,speak sweet,and hail Him
`Father,Bliss, Ambrosia`, in salival relish;
To open the gate and greet won`t you rush?
Poised in pious heritage,to service you hold on.sure
Help us, fresh among flock, expiate some pettiness and cure;
Is it awry?What then is your love we deem true, Hark!
The Fair Conscious paean our Siva! But we`re done by, o, frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


O, Maid with pearly silver smile! Well before we woke up, you had gotten up
everyday, in our front, hymned our Father is Joy incarnate, Ambrosia,
with a spring of relish on your sweet tongue; why this day you haven`t opened
the threshold gates! You have an exceeding love for our Lord; you are
Lord`s hoary servitor; confirmed in order! We are a fresh flock; subduing
our base nature, were you to take us in, would it turn offensive!
Is your love makebelieve! But we know yours is truth forsooth! Won`t ripe hearts
sing Siva Lord! We came to wake you up, all this Is good enough, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀢𑁆𑀢𑀷𑁆𑀷 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀓𑁃𑀬𑀸𑀬𑁆 𑀫𑀼𑀷𑁆𑀯𑀦𑁆 𑀢𑁂𑁆𑀢𑀺𑀭𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑁂𑁆𑀷𑁆
𑀅𑀢𑁆𑀢𑀷𑁆 𑀆𑀷𑀦𑁆𑀢𑀷𑁆 𑀅𑀫𑀼𑀢𑀷𑁆𑀏𑁆𑀷𑁆 𑀶𑀴𑁆𑀴𑀽𑀶𑀺𑀢𑁆
𑀢𑀺𑀢𑁆𑀢𑀺𑀓𑁆𑀓𑀧𑁆 𑀧𑁂𑀘𑀼𑀯𑀸𑀬𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼𑀷𑁆 𑀓𑀝𑁃𑀢𑀺𑀶𑀯𑀸𑀬𑁆
𑀧𑀢𑁆𑀢𑀼𑀝𑁃𑀬𑀻𑀭𑁆 𑀈𑀘𑀷𑁆 𑀧𑀵𑀯𑀝𑀺𑀬𑀻𑀭𑁆 𑀧𑀸𑀗𑁆𑀓𑀼𑀝𑁃𑀬𑀻𑀭𑁆
𑀧𑀼𑀢𑁆𑀢𑀝𑀺𑀬𑁄𑀫𑁆 𑀧𑀼𑀷𑁆𑀫𑁃𑀢𑀻𑀭𑁆𑀢𑁆 𑀢𑀸𑀝𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀶𑁆 𑀧𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀢𑁄
𑀏𑁆𑀢𑁆𑀢𑁄𑀦𑀺𑀷𑁆 𑀅𑀷𑁆𑀧𑀼𑀝𑁃𑀫𑁃 𑀏𑁆𑀮𑁆𑀮𑁄𑀫𑁆 𑀅𑀶𑀺𑀬𑁄𑀫𑁄
𑀘𑀺𑀢𑁆𑀢𑀫𑁆 𑀅𑀵𑀓𑀺𑀬𑀸𑀭𑁆 𑀧𑀸𑀝𑀸𑀭𑁄 𑀦𑀫𑁆𑀘𑀺𑀯𑀷𑁃
𑀇𑀢𑁆𑀢𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀏𑁆𑀫𑀓𑁆𑀓𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুত্তন়্‌ন় ৱেণ্ণহৈযায্ মুন়্‌ৱন্ দেদিরেৰ়ুন্দেন়্‌
অত্তন়্‌ আন়ন্দন়্‌ অমুদন়্‌এণ্ড্রৰ‍্ৰূর়িত্
তিত্তিক্কপ্ পেসুৱায্ ৱন্দুন়্‌ কডৈদির়ৱায্
পত্তুডৈযীর্ ঈসন়্‌ পৰ়ৱডিযীর্ পাঙ্গুডৈযীর্
পুত্তডিযোম্ পুন়্‌মৈদীর্ত্ তাট্কোণ্ডার়্‌ পোল্লাদো
এত্তোনিন়্‌ অন়্‌বুডৈমৈ এল্লোম্ অর়িযোমো
সিত্তম্ অৰ়হিযার্ পাডারো নম্চিৱন়ৈ
ইত্তন়ৈযুম্ ৱেণ্ডুম্ এমক্কেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
मुत्तऩ्ऩ वॆण्णहैयाय् मुऩ्वन् दॆदिरॆऴुन्दॆऩ्
अत्तऩ् आऩन्दऩ् अमुदऩ्ऎण्ड्रळ्ळूऱित्
तित्तिक्कप् पेसुवाय् वन्दुऩ् कडैदिऱवाय्
पत्तुडैयीर् ईसऩ् पऴवडियीर् पाङ्गुडैयीर्
पुत्तडियोम् पुऩ्मैदीर्त् ताट्कॊण्डाऱ् पॊल्लादो
ऎत्तोनिऩ् अऩ्बुडैमै ऎल्लोम् अऱियोमो
सित्तम् अऴहियार् पाडारो नम्चिवऩै
इत्तऩैयुम् वेण्डुम् ऎमक्केलोर् ऎम्बावाय् 

Open the Devanagari Section in a New Tab
ಮುತ್ತನ್ನ ವೆಣ್ಣಹೈಯಾಯ್ ಮುನ್ವನ್ ದೆದಿರೆೞುಂದೆನ್
ಅತ್ತನ್ ಆನಂದನ್ ಅಮುದನ್ಎಂಡ್ರಳ್ಳೂಱಿತ್
ತಿತ್ತಿಕ್ಕಪ್ ಪೇಸುವಾಯ್ ವಂದುನ್ ಕಡೈದಿಱವಾಯ್
ಪತ್ತುಡೈಯೀರ್ ಈಸನ್ ಪೞವಡಿಯೀರ್ ಪಾಂಗುಡೈಯೀರ್
ಪುತ್ತಡಿಯೋಂ ಪುನ್ಮೈದೀರ್ತ್ ತಾಟ್ಕೊಂಡಾಱ್ ಪೊಲ್ಲಾದೋ
ಎತ್ತೋನಿನ್ ಅನ್ಬುಡೈಮೈ ಎಲ್ಲೋಂ ಅಱಿಯೋಮೋ
ಸಿತ್ತಂ ಅೞಹಿಯಾರ್ ಪಾಡಾರೋ ನಮ್ಚಿವನೈ
ಇತ್ತನೈಯುಂ ವೇಂಡುಂ ಎಮಕ್ಕೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 

Open the Kannada Section in a New Tab
ముత్తన్న వెణ్ణహైయాయ్ మున్వన్ దెదిరెళుందెన్
అత్తన్ ఆనందన్ అముదన్ఎండ్రళ్ళూఱిత్
తిత్తిక్కప్ పేసువాయ్ వందున్ కడైదిఱవాయ్
పత్తుడైయీర్ ఈసన్ పళవడియీర్ పాంగుడైయీర్
పుత్తడియోం పున్మైదీర్త్ తాట్కొండాఱ్ పొల్లాదో
ఎత్తోనిన్ అన్బుడైమై ఎల్లోం అఱియోమో
సిత్తం అళహియార్ పాడారో నమ్చివనై
ఇత్తనైయుం వేండుం ఎమక్కేలోర్ ఎంబావాయ్ 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුත්තන්න වෙණ්ණහෛයාය් මුන්වන් දෙදිරෙළුන්දෙන්
අත්තන් ආනන්දන් අමුදන්එන්‍රළ්ළූරිත්
තිත්තික්කප් පේසුවාය් වන්දුන් කඩෛදිරවාය්
පත්තුඩෛයීර් ඊසන් පළවඩියීර් පාංගුඩෛයීර්
පුත්තඩියෝම් පුන්මෛදීර්ත් තාට්කොණ්ඩාර් පොල්ලාදෝ
එත්තෝනින් අන්බුඩෛමෛ එල්ලෝම් අරියෝමෝ
සිත්තම් අළහියාර් පාඩාරෝ නම්චිවනෛ
ඉත්තනෛයුම් වේණ්ඩුම් එමක්කේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
മുത്തന്‍ന വെണ്ണകൈയായ് മുന്‍വന്‍ തെതിരെഴുന്തെന്‍
അത്തന്‍ ആനന്തന്‍ അമുതന്‍എന്‍ റള്ളൂറിത്
തിത്തിക്കപ് പേചുവായ് വന്തുന്‍ കടൈതിറവായ്
പത്തുടൈയീര്‍ ഈചന്‍ പഴവടിയീര്‍ പാങ്കുടൈയീര്‍
പുത്തടിയോം പുന്‍മൈതീര്‍ത് താട്കൊണ്ടാറ് പൊല്ലാതോ
എത്തോനിന്‍ അന്‍പുടൈമൈ എല്ലോം അറിയോമോ
ചിത്തം അഴകിയാര്‍ പാടാരോ നമ്ചിവനൈ
ഇത്തനൈയും വേണ്ടും എമക്കേലോര്‍ എംപാവായ് 

Open the Malayalam Section in a New Tab
มุถถะณณะ เวะณณะกายยาย มุณวะน เถะถิเระฬุนเถะณ
อถถะณ อาณะนถะณ อมุถะณเอะณ ระลลูริถ
ถิถถิกกะป เปจุวาย วะนถุณ กะดายถิระวาย
ปะถถุดายยีร อีจะณ ปะฬะวะดิยีร ปางกุดายยีร
ปุถถะดิโยม ปุณมายถีรถ ถาดโกะณดาร โปะลลาโถ
เอะถโถนิณ อณปุดายมาย เอะลโลม อริโยโม
จิถถะม อฬะกิยาร ปาดาโร นะมจิวะณาย
อิถถะณายยุม เวณดุม เอะมะกเกโลร เอะมปาวาย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုထ္ထန္န ေဝ့န္နကဲယာယ္ မုန္ဝန္ ေထ့ထိေရ့လုန္ေထ့န္
အထ္ထန္ အာနန္ထန္ အမုထန္ေအ့န္ ရလ္လူရိထ္
ထိထ္ထိက္ကပ္ ေပစုဝာယ္ ဝန္ထုန္ ကတဲထိရဝာယ္
ပထ္ထုတဲယီရ္ အီစန္ ပလဝတိယီရ္ ပာင္ကုတဲယီရ္
ပုထ္ထတိေယာမ္ ပုန္မဲထီရ္ထ္ ထာတ္ေကာ့န္တာရ္ ေပာ့လ္လာေထာ
ေအ့ထ္ေထာနိန္ အန္ပုတဲမဲ ေအ့လ္ေလာမ္ အရိေယာေမာ
စိထ္ထမ္ အလကိယာရ္ ပာတာေရာ နမ္စိဝနဲ
အိထ္ထနဲယုမ္ ေဝန္တုမ္ ေအ့မက္ေကေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
ムタ・タニ・ナ ヴェニ・ナカイヤーヤ・ ムニ・ヴァニ・ テティレルニ・テニ・
アタ・タニ・ アーナニ・タニ・ アムタニ・エニ・ ラリ・ルーリタ・
ティタ・ティク・カピ・ ペーチュヴァーヤ・ ヴァニ・トゥニ・ カタイティラヴァーヤ・
パタ・トゥタイヤーリ・ イーサニ・ パラヴァティヤーリ・ パーニ・クタイヤーリ・
プタ・タティョーミ・ プニ・マイティーリ・タ・ タータ・コニ・ターリ・ ポリ・ラートー
エタ・トーニニ・ アニ・プタイマイ エリ・ローミ・ アリョーモー
チタ・タミ・ アラキヤーリ・ パーターロー ナミ・チヴァニイ
イタ・タニイユミ・ ヴェーニ・トゥミ・ エマク・ケーローリ・ エミ・パーヴァーヤ・ 

Open the Japanese Section in a New Tab
muddanna fennahaiyay munfan dedirelunden
addan anandan amudanendrallurid
diddiggab besufay fandun gadaidirafay
baddudaiyir isan balafadiyir banggudaiyir
buddadiyoM bunmaidird dadgondar bollado
eddonin anbudaimai elloM ariyomo
siddaM alahiyar badaro namdifanai
iddanaiyuM fenduM emaggelor eMbafay 

Open the Pinyin Section in a New Tab
مُتَّنَّْ وٕنَّحَيْیایْ مُنْوَنْ ديَدِريَظُنْديَنْ
اَتَّنْ آنَنْدَنْ اَمُدَنْيَنْدْرَضُّورِتْ
تِتِّكَّبْ بيَۤسُوَایْ وَنْدُنْ كَدَيْدِرَوَایْ
بَتُّدَيْیِيرْ اِيسَنْ بَظَوَدِیِيرْ بانغْغُدَيْیِيرْ
بُتَّدِیُوۤن بُنْمَيْدِيرْتْ تاتْكُونْدارْ بُولّادُوۤ
يَتُّوۤنِنْ اَنْبُدَيْمَيْ يَلُّوۤن اَرِیُوۤمُوۤ
سِتَّن اَظَحِیارْ بادارُوۤ نَمْتشِوَنَيْ
اِتَّنَيْیُن وٕۤنْدُن يَمَكّيَۤلُوۤرْ يَنباوَایْ 



Open the Arabic Section in a New Tab
mʊt̪t̪ʌn̺n̺ə ʋɛ̝˞ɳɳʌxʌjɪ̯ɑ:ɪ̯ mʊn̺ʋʌn̺ t̪ɛ̝ðɪɾɛ̝˞ɻɨn̪d̪ɛ̝n̺
ˀʌt̪t̪ʌn̺ ˀɑ:n̺ʌn̪d̪ʌn̺ ˀʌmʉ̩ðʌn̺ɛ̝n̺ rʌ˞ɭɭu:ɾɪt̪
t̪ɪt̪t̪ɪkkʌp pe:sɨʋɑ:ɪ̯ ʋʌn̪d̪ɨn̺ kʌ˞ɽʌɪ̯ðɪɾʌʋɑ:ɪ̯
pʌt̪t̪ɨ˞ɽʌjɪ̯i:r ʲi:sʌn̺ pʌ˞ɻʌʋʌ˞ɽɪɪ̯i:r pɑ:ŋgɨ˞ɽʌjɪ̯i:r
pʊt̪t̪ʌ˞ɽɪɪ̯o:m pʊn̺mʌɪ̯ði:rt̪ t̪ɑ˞:ʈko̞˞ɳɖɑ:r po̞llɑ:ðo:
ʲɛ̝t̪t̪o:n̺ɪn̺ ˀʌn̺bʉ̩˞ɽʌɪ̯mʌɪ̯ ʲɛ̝llo:m ˀʌɾɪɪ̯o:mo:
sɪt̪t̪ʌm ˀʌ˞ɻʌçɪɪ̯ɑ:r pɑ˞:ɽɑ:ɾo· n̺ʌmʧɪʋʌn̺ʌɪ̯
ʲɪt̪t̪ʌn̺ʌjɪ̯ɨm ʋe˞:ɳɖɨm ʲɛ̝mʌkke:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 

Open the IPA Section in a New Tab
muttaṉṉa veṇṇakaiyāy muṉvan tetireḻunteṉ
attaṉ āṉantaṉ amutaṉeṉ ṟaḷḷūṟit
tittikkap pēcuvāy vantuṉ kaṭaitiṟavāy
pattuṭaiyīr īcaṉ paḻavaṭiyīr pāṅkuṭaiyīr
puttaṭiyōm puṉmaitīrt tāṭkoṇṭāṟ pollātō
ettōniṉ aṉpuṭaimai ellōm aṟiyōmō
cittam aḻakiyār pāṭārō namcivaṉai
ittaṉaiyum vēṇṭum emakkēlōr empāvāy 

Open the Diacritic Section in a New Tab
мюттaннa вэннaкaыяaй мюнвaн тэтырэлзюнтэн
аттaн аанaнтaн амютaнэн рaллурыт
тыттыккап пэaсюваай вaнтюн катaытырaваай
пaттютaыйир исaн пaлзaвaтыйир паангкютaыйир
пюттaтыйоом пюнмaытирт таатконтаат поллаатоо
эттоонын анпютaымaы эллоом арыйоомоо
сыттaм алзaкыяaр паатаароо нaмсывaнaы
ыттaнaыём вэaнтюм эмaккэaлоор эмпааваай 

Open the Russian Section in a New Tab
muththanna we'n'nakäjahj munwa:n thethi'reshu:nthen
aththan ahna:nthan amuthanen ra'l'luhrith
thiththikkap pehzuwahj wa:nthun kadäthirawahj
paththudäjih'r ihzan pashawadijih'r pahngkudäjih'r
puththadijohm punmäthih'rth thahdko'ndahr pollahthoh
eththoh:nin anpudämä ellohm arijohmoh
ziththam ashakijah'r pahdah'roh :namziwanä
iththanäjum weh'ndum emakkehloh'r empahwahj 

Open the German Section in a New Tab
mòththanna vènhnhakâiyaaiy mònvan thèthirèlzònthèn
aththan aananthan amòthanèn rhalhlhörhith
thiththikkap pèèçòvaaiy vanthòn katâithirhavaaiy
paththòtâiyiier iiçan palzavadiyiier paangkòtâiyiier
pòththadiyoom pònmâithiirth thaatkonhdaarh pollaathoo
èththoonin anpòtâimâi èlloom arhiyoomoo
çiththam alzakiyaar paadaaroo namçivanâi
iththanâiyòm vèènhdòm èmakkèèloor èmpaavaaiy 
muiththanna veinhnhakaiiyaayi munvain thethirelzuinthen
aiththan aanainthan amuthanen rhalhlhuurhiith
thiiththiiccap peesuvayi vainthun cataithirhavayi
paiththutaiyiir iicean palzavatiyiir paangcutaiyiir
puiththatiyoom punmaithiirith thaaitcoinhtaarh pollaathoo
eiththoonin anputaimai elloom arhiyoomoo
ceiiththam alzaciiyaar paataaroo namceivanai
iiththanaiyum veeinhtum emaickeeloor empaavayi 
muththanna ve'n'nakaiyaay munva:n thethirezhu:nthen
aththan aana:nthan amuthanen 'ra'l'loo'rith
thiththikkap paesuvaay va:nthun kadaithi'ravaay
paththudaiyeer eesan pazhavadiyeer paangkudaiyeer
puththadiyoam punmaitheerth thaadko'ndaa'r pollaathoa
eththoa:nin anpudaimai elloam a'riyoamoa
siththam azhakiyaar paadaaroa :namsivanai
iththanaiyum vae'ndum emakkaeloar empaavaay 

Open the English Section in a New Tab
মুত্তন্ন ৱেণ্ণকৈয়ায়্ মুন্ৱণ্ তেতিৰেলুণ্তেন্
অত্তন্ আনণ্তন্ অমুতন্এন্ ৰল্লূৰিত্
তিত্তিক্কপ্ পেচুৱায়্ ৱণ্তুন্ কটৈতিৰৱায়্
পত্তুটৈয়ীৰ্ পীচন্ পলৱটিয়ীৰ্ পাঙকুটৈয়ীৰ্
পুত্তটিয়োম্ পুন্মৈতীৰ্ত্ তাইটকোণ্টাৰ্ পোল্লাতো
এত্তোণিন্ অন্পুটৈমৈ এল্লোম্ অৰিয়োমো
চিত্তম্ অলকিয়াৰ্ পাটাৰো ণম্চিৱনৈ
ইত্তনৈয়ুম্ ৱেণ্টুম্ এমক্কেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.