எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
    போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
    போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
    போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
    போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

குறிப்புரை:

இத்திருப்பாட்டினுள், அன்ன மகளிர் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது.
முதல் இரண்டடிகளிலும் உள்ள, ``போற்றி அருளுக`` என்பவற்றை அவ்வவ்வடியின் இறுதிக்கண் கூட்டி இருதொடராக்குக. மேலைத் திருப்பாட்டில் உள்ள, ``எங்கள் பெருமான்`` என்னும் விளி, இதனுள்ளும் முதற்கண் வந்து இயையும். இதன்கண் திருவடியைக் குறிக்குமிடத்தெல்லாம் நான்காம் வேற்றுமை விரிக்கப்படும். போற்றி- வணக்கம். அருளுக - எமக்கு இரங்குவனவாகுக. இதற்கு `அவை` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. சத்தியே பாதமாகலின், அருளுதல் முதலியன பொருந்துமாறறிக. செந்தளிர், உவமையாகு பெயர். மூன்றாம் அடி முதலிய ஐந்தினும், முறையே, `உலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்` என்னும் ஐந்தொழிலும் கூறப்பட்டமை காண்க. திருமந்திரம் தவிர ஏனைய திருமுறைகளுள் ஐந்தொழிலையும் இனிது விளங்கக் கூறும் திருப்பாட்டு இஃதொன்றேயாம். அதனால், இது சிவாகமங்களுள், `பஞ்சப்பிரம மந்திரம்` எனக் கூறப்படும் மந்திரங்களோடு ஒருங் கொத்தது. ஐந்தொழிலும் சகலநிலைபற்றிக் கூறப்படுவனவாகலின், `ஆதி` எனவும், `அந்தம்` எனவும் வந்தவை. முறையே, கேவல நிலையையும், சுத்த நிலையையும் கூறியவாறாம். சகல நிலைக்கு வாராத உயிர்களும் உளவாதலின், `ஆம்` என்றார். ஆகவே, எஞ் ஞான்றும் உலகிற்கு நிலைக்களம் இறைவனது திருவடியே என்பதனை இனிது விளங்க அருளிச் செய்தமை காண்க. ``வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம் - அத்தன்தாள் நிற்றல்`` என்று அருளிச் செய்தார் மெய்கண்ட தேவரும் (சிவஞானபோதம் - சூ. 1. அதி 2). பொன்மலர்கள் பொன்னால் ஆகிய மலர். மலராவது, தாமரை மலரே. `செந்தளிர்கள், புண்டரிகம், பொன்மலர்கள், என்பன உவமை யாகுபெயர்கள். `ஆதி, அந்தம்` என அவ்வந் நிலைக்கண் நிற்பன வற்றை அவையேயாகவும், `தோற்றம் போகம், ஈறு` என, அவற் றிற்குக் காரணமாய் நிற்பவற்றைக் காரியமாகவும் பாற்படுத்து ஓதி யருளினார். ``பொன்மலர்`` என்றதன்பின், `என` என்பது தொகுத் தலாயிற்று. இறுதிக்கண் நின்ற, `போற்றி` என்பது வினையெச்சம். மார்கழி நீர் - மார்கழியில் ஆடப்படும் நீர். `மார்கழி` என்பது, அம்மாதத்திற்கேயன்றி, `மிருகசீரிடம்` என்னும் நாண்மீனுக்கும் பெயர். அதனால், இஃது ஆதிரை மீனையும் குறிக்கும்; என்னை? மிருகசீரிடத்தோடு தொடர்புடைய ஆதிரையையே சிறந்ததெனக் கொள்ப ஆதலின். ஈண்டும், `ஆட` என்னும் வியங்கோள் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பொய்கை, சுனை முதலிய பலவற்றினும் ஆடுவார் கூற்றுக்களாக அனைத்தையும் கூறியது அங்ஙனம் அவற்றிற் சென்று ஆடுவார் பலர்க்கும் அத்திருப்பாடல்கள் ஏற்ற பெற்றியாற் பயன் தருதற் பொருட்டென்க. எனவே, இப்பகுதி முழுவதும், எல்லார்க்கும் எல்லாநாளினும் ஒருபெற்றியே நிகழ்வனவற்றைக் கூறியதாகாது, பலர்க்கும் பலநாளினும் பலவாறாக நிகழ்வனவற்றைக் கூறியதே யாதல் பெறப்படும்.
தலைவாயில் முகப்பு பதிகத் தலைப்பு

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అన్నింటికినీ ఆదివైయుండు నీయొక్క దివ్య చరణారవిందములకు వందనములు! అన్నింటికినీ అంతమైయుండు తామరవంటి ఎర్రటి పాదపద్మములకు వందనములు! అన్నింటి ఉద్భవమునకూ కారణభూతమైన వాడివైన నీయొక్క స్వర్ణకమల పాదములకు వందనములు! అన్ని జీవరాశులకునూ రక్షకునిగనుండు దివ్యకంకణములనలంకరింపబడిన నీయొక్క చరణకమలములకు వందనములు! అన్ని ప్రాణులకూ అంతమొనరింపబడుటకు కారణభూతమైన నీయొక్క ఉభయపాదపద్మములకు వందనములు! విష్ణువు, బ్రహ్మకునూ కానరానటువంటి నీయొక్క తామరపుష్పమువంటి చరణములకు వందనములు! మేము వృద్ధిచెందునట్లు మమ్ములను అనునిత్యమూ అనుగ్రహించుచుండు నీయొక్క పద్మపాదములకు వందనములు! ఎళ్ళవేళలా మేమందరమూ నిన్నే గానము చేయుచు, స్తుతించు విధమున మార్గశీర్షమాసమందు ఉషోదయమునకు ముందుగనే నిద్రనుండి లేచి, స్నానమాడి, నీయొక్క కీర్తిని గానముజేయుచు ఆడెదముగాక!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಎಲ್ಲಾ ಚರಾಚರ ವಸ್ತುಗಳಿಗೂ ಆದಿಯಾದ ನಿನ್ನ ಪವಿತ್ರ ಅಡಿದಾವರೆಗಳಿಗೆ ನಮಸ್ಕಾರ. ಸರ್ವಕ್ಕೂ ಅಂತ್ಯವಾಗಿರುವ ನಿನ್ನ ಕೆಂದಳಿರಿನಂತಹ ಪವಿತ್ರ ಪಾದಗಳಿಗೆ ನಮಸ್ಕಾರ. ಎಲ್ಲಾ ಜೀವಿಗಳ ಸೃಷ್ಟಿಗೂ ಕಾರಣವಾಗಿರುವ ಹೊನ್ನಿನಂತಹ ಅಡಿದಾವರೆಗಳಿಗೆ ನಮಸ್ಕಾರ. ಎಲ್ಲಾ ಜೀವಿಗಳನ್ನೂ ಕಾಯುವಂತಹ ಸುಂದರ ಕಾಲ್ಗಡಗವ ತೊಟ್ಟ ಶ್ರೀಪಾದಗಳಿಗೆ ನಮಸ್ಕಾರ. ಎಲ್ಲಾ ಜೀವಿಗಳ ಮೋಕ್ಷಕ್ಕೂ ಕಾರಣವಾದ ಶ್ರೀಪಾದದ್ವಯಗಳಿಗೆ ನಮಸ್ಕಾರ. ವಿಷ್ಣು, ಬ್ರಹ್ಮರಿಂದಲೂ ಕಾಣಲಾಗದ ಪವಿತ್ರ ಅಡಿದಾವರೆಗಳಿಗೆ ನಮಸ್ಕಾರ. ನಮ್ಮನ್ನು ರಕ್ಷಿಸಲೆಂದೇ ಆಳ್ಗೊಂಡು ಕೃಪೆದೋರುವ ತಾವರೆ ಹೂವಿನಂತಹ ಪವಿತ್ರ ಪಾದಗಳಿಗೆ ನಮಸ್ಕಾರ. ಹೀಗೆಲ್ಲಾ ಸ್ತುತಿಸಿ, ದೇವನಿಗೆ ನಮಿಸಿ ಮಾರ್ಗಶಿರ ಮಾಸದಲ್ಲಿ ನೀರಿನಲ್ಲಿ ಮುಳುಗಿ ಆಡೋಣ. ನಮ್ಮ ಹೆಣ್ಣೇ ಮೇಲೇಳು ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പോറ്റി അരുളുക നിന്‍ ആദി മലര്‍ പാദമതാല്‍
പോറ്റി അരുളുക നിന്‍ അന്തമില്ലാ ചെന്തളിരുകളതാല്‍
പോറ്റി എല്ലാ ജീവന്റെയും തോറ്റമാം പൊര്‍പ്പദം
പോറ്റി എല്ലാം ജീവന്റെയും ഭോഗമതാം പൂങ്കഴല്‍കള്‍
പോറ്റി എല്ലാ ജീവന്റെയും അന്തമതാം ഇണയ ടികള്‍
പോറ്റി മാലൊടു നാന്‍ മുഖനും കാണാപ്പുണ്ഡരികം
പോറ്റി നാം ഉയ്തിട ആള്‍ക്കൊരുളും പൊന്‍ മലര്‍പ്പദങ്ങള്‍
പോറ്റി നാം മാര്‍കഴി നീരാടുവോം ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
සැරද, ආසිරිපතා, ඔබ ආදීම සිරි පා කමල්,
සැරද, සියල්ලෙහි අන්තය වන ඔබ, රන් දල්ලක් වන් පා කමල්,
සැරද, සියලු සත්ත්වයන් මැවීමට මූලය වන, රන් සිරි පා කමල්,
සැරද, සියලු සත්ත්වයන්ට සතුට සලසා දෙන සිරි පා කමල්,
සැරද, සියලු සත්ත්වයනට බව නිමාව සලසන සිරි පා දෙපතුල්,
සැරද, විෂ්ණු ද, මහ බඹා ද මෙතෙක් නුදුටු තඹර සිරි පා පියුම්,
සැරද, සැම සතුනටම පිළිසරණය වන ඔබ සිරි පා පියුම්,
සැරද, ඉල් දිය කෙළියට, සුරතලියේ 20

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Menyembah telapak-Mu ibarat bunga yang menjadi permulaan segala- galanya.
Menyembah telapak merah-Mu yang menjadi penghujung segala-galanya;
Menyembah telapak ibarat emas yang menjadi punca kewujudan segala-galanya,
Menyembah telapak berhias bunga yang menjaga/memastikan pengekalan semua kehidupan,
Menyembah kedua telapak yang menyebabkan kesudahan semua kehidupan.
Menyembah telapak ibarat teratai yang tidak dapat dilihat oleh Vishnu atau Brahma.
Menyembah telapak ibarat bunga emas yang memberkati kita hidup bahagia.
Marilah menyembah Tuhan dengan memuja sebegini,
Lalu menyelam dalam kolam dan bermain air di bulan Maarkazhi.
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
आदि स्वरूप! चरण कमलों को नमन्।
अंत स्वरूप! कोंपल सदृश श्रीचरणों को नमन्।
हमें कृपा प्रदान करो!
समस्त जीवधारियों के कारणी-भूत! स्वर्ण-श्रीचरणों की जय।
प्राणिमात्र के आधार-भूत व भोग्य रूप! चरण कमलों की जय।
समस्त जीवों के चरम ध्येय! तुम्हारे दोनों श्रीचरणों की जय।
नारायण, विरिंचि के अगोचर! पुण्डरीक चरण कमलों की जय।
हमारे उद्धारक! अनुग्रहशील के चरण-कमलों की जय।
तुम्हारी जय! जय!
हम मार्गशीर्ष स्नान करें, सखी आओ।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
नमस्तव पादपुष्पाय आदिभूताय। नमस्तवारुणपादाभ्यां अन्तभूताभ्याम्।
नमस् सर्वभूतानां प्रभवाय पादकनकाय। नमस् सर्वभोगप्रदायिभ्यां पुष्पपादाभ्याम्।
नमस्सर्वप्राणिनां अन्तिमाश्रयाय पादयुग्माय। नमः पादपुण्डरीकाय ब्रह्मविष्णुभ्यां अदृष्टाय।
नमोऽस्माकं उद्धर्त्रे स्वर्णपुष्पाय। नमो वयं मार्गशीर्षस्नानं कुर्मः।
तिरुचिट्ट्रम्बलम्


भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Gepriesen sei’n die Blumen deiner Füße,
Die der Urgrund alle Dinge!
Sei gnädig, Šiva!
Gepriesen seien deine zarten Füße,
Die das Ziel ja aller Dinge!
Sei gnädig, Šiva!
Gepriesen seien deine gold’nen Füße,
Aller Leberwesen Schoß und Wiege!
Gepriesen seien deine Blumenfüße,
Inbegriff der Freude
Allen Lebewesen!
Gepriesen seien deine beiden Füße,
In die eingeh’n müssen alle Lebewesen
Gepriesen seien deiner Füße Lotusblumen,
Die Visnu und der mit vier Köpfen,
Brahma,
Suchten - ach! - und niemals fanden!
Gepriesen seien deiner Füße gold’ne Blumen,
In deren Dienst du uns genommen Šiva,
Nur damit wir leben!
Gepriesen sei, o Šiva,
Das Badefest im Monat Markali!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
အလံုစံု၌ နက္နဲသေဘာရွိ၍ အရာတိုင္း၏ ေရွ႕၌ ဦးစြာပထမ ျဖစ္တည္ေလေသာ ရွင္ေတာ္ျမတ္ဘုရား ေျခေတာ္ရင္းကို ဦးတုိက္ပူေဇာ္ကန္ေတာ့ပါသည္။ ဤအက်ိဳးေက်းဇူးအားေၾကာင့္ အကၽြန္တို႔အဖို႔ ဗ်ာတိတ္အျဖစ္ အေစာင့္အေရွာက္ ျဖစ္ရေစသား…၊ အရာတိုင္း၏ အဆံုးစြန္၌ ျဖစ္တည္လ်က္ ညေရာင္ျခည္ နီယြန္း ရဲလြန္းသည့္ႏွယ့္ ျဖစ္ေတာ္မူေသာ ရွင္ေတာ္ျမတ္ဘုရား ဖဝါးျမတ္အား ဦးညႊတ္ကန္ေတာ့ပါသည္။ ဤကံ၏ ေစတနာအက်ိဳးသည္ အကၽြန္တို႔ေပၚသို႔ က်ေရာက္ပါေစသား…၊ သက္ရွိအလံုးစံု ေပါက္ဖြားေပၚထြန္းဖို႔ရာ အေၾကာင္းရင္းခံ ဘုရားရွင္၏ ေျခေတာ္အစံု ၾကည္ညိဳဖူးေျမာ္ကန္ေတာ့ပါ၏။
လံုးစံုမ်ားစြာသတၱဝါတို႔ ခ်မ္းသာကိုယ္စိတ္ၿမဲဖို႔ရန္ ေစာင့္ရွာက္ေနေတာ္မူသည့္ ရွင္ေတာ္ျမတ္ဘုရား ေျခေတာ္အစံု ဝပ္တြားရွိခိုး မာန္ေလ်ာ့ကန္ေတာ့ပါသည္။ အရွင္ဘုရား။
သီရုမားလ္ႏွင့္ ျဗဟၼာမင္းတို႔ ရွာ၍မေတြ႔ဘဲ လက္ေလွ်ာ့ျပန္ရ၊ ဖဝါးေတာ္ျမတ္ၾကာပန္း ေျခစံု လက္အုပ္မိုး၍ ရွိခိုးပါ၏ အရွင္ဘုရား၊ ထိုေျခဖဝါးေတာ္အား
အကၽြန္တို႔၌ ဗ်ာတိတ္ကြန္႔ျမဴး ဘုရားကၽြန္၌ အရွင့္ေျခေတာ္ရာကို အေလးအနက္ ၾကည္ညိဳ ဖူးေျမာ္ပါ၏ အရွင္ဘုရား၊ ဤသို႔အားျဖင့္ ရွင္ေတာ္ျမတ္ဘုရားကို ဝပ္ဆင္းေကာ္ေရာ္ ကန္ေတာ့ပန္းဆင္လ်က္ အကၽြန္တို႔အားလံုး စင္ၾကယ္သန္႔ရွင္း မာရ္ကလီ ေရခ်ိဳးမဂၤလာ က်င္းပေပ်ာ္ရႊင္ၾကပါစို႔။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
হে আদি স্বৰূপ! তোমাৰ চৰণ কমলক প্ৰণাম।
হে অন্ত স্বৰূপ! তোমাৰ পদুম সদৃশ শ্ৰীচৰণক প্ৰণাম।
আমাক কৃপা প্ৰদান কৰা।
সমষ্ট জীৱৰ কাৰণস্বৰূপ! সেই স্বৰ্ণ শ্ৰীচৰণৰ জয়।
প্ৰাণী মাত্ৰৰে আধাৰ তথা ভোগ্য স্বৰূপ! সেই চৰণ কমলৰ জয়।
সকলো জীৱৰে পৰম আৰাধ্য! তোমাৰ দুয়ো শ্ৰীচৰণৰ জয়।
নাৰায়ণ, বিৰিঞ্চিৰ অগোচৰ! তোমাৰ শ্ৰীচৰণৰ জয়।
হে আমাৰ উদ্ধাৰকৰ্তা! অনুগ্ৰহশীলৰ চৰণ কমলৰ জয়।
তোমাৰ জয়! জয়!
আমি মাৰ্গশীৰ্ষৰ স্নান কৰোঁ, হে সখী আহা।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Bestow Your flower feet – the Source of all,
praise be !
Bestow Your feet like ruddy shoots,
the End of all,
praise be !
Bestow Your auric feet,
the Genesis of all lives,
praise be !
Bestow Your feet that foster all lives,
praise be !
Bestow Your feet twain,
the ultimate Refuge of all lives,
praise be !
Bestow Your feet unbeheld by Vishnu and the Four-faced,
praise be !
Empaavaai,
we will thus hail the grace-abounding feet And have our ritual bath in Maarkazhi,
praise be !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Glory to your Lotus Feet`s grace, the origin of all!
Glory to thy sanguine Feet`s grace, the close of all!
Glory to the auric Feet, all beings` beginning!
Glory to the floral Feet, all beings` favor!
Glory to the Feet-pair ,ultima to all!
Glory to the Lotus hid to Maal and Brahma!
Glory to auric bloom of grace sustained to take us!Hark!
Glory for Markazhi immersion, o, frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


Salutations to the Gracing Holy Feet Lotuses of you, Lord, the Primordial Ens prior to all Entia whatever!
Salutations to the ruddy tendril soft Holy Feet of yours, the ultimate entelechy!
Praise be to the golden Holy Feet the Cause of all Beings and Becomings in life!
Praise be to the kazhal adorned Feet, the safe refuge for Beings to stay secure!
Praise be to the holy Feet Pair that help all Beings to reach the close of birthing!
Praise be to the Lotus Feet of Lord viewless to Maal and Ayan!
Salutations to the Lotus soft Holy Feet that foster us to live in Sivam!
May we praise and bow unto the Lord and plunge in the waters of Markazi`s sacred asterisms, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀅𑀭𑀼𑀴𑀼𑀓𑀦𑀺𑀷𑁆 𑀆𑀢𑀺𑀬𑀸𑀫𑁆 𑀧𑀸𑀢𑀫𑀮𑀭𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀅𑀭𑀼𑀴𑀼𑀓𑀦𑀺𑀷𑁆 𑀅𑀦𑁆𑀢𑀫𑀸𑀜𑁆 𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀴𑀺𑀭𑁆𑀓𑀴𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀏𑁆𑀮𑁆 𑀮𑀸𑀯𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑁄𑀶𑁆𑀶𑀫𑀸𑀫𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀸𑀢𑀫𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀏𑁆𑀮𑁆 𑀮𑀸𑀯𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑁄𑀓𑀫𑀸𑀫𑁆 𑀧𑀽𑀗𑁆𑀓𑀵𑀮𑁆𑀓𑀴𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀏𑁆𑀮𑁆 𑀮𑀸𑀯𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀈𑀶𑀸𑀫𑁆 𑀇𑀡𑁃𑀬𑀝𑀺𑀓𑀴𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀫𑀸𑀮𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀷𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑀸𑀢 𑀧𑀼𑀡𑁆𑀝𑀭𑀺𑀓𑀫𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀬𑀸𑀫𑁆 𑀉𑀬𑁆𑀬𑀆𑀝𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀫𑀮𑀭𑁆𑀓𑀴𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀬𑀸𑀫𑁆 𑀫𑀸𑀭𑁆𑀓𑀵𑀺𑀦𑀻 𑀭𑀸𑀝𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোট্রি অরুৰুহনিন়্‌ আদিযাম্ পাদমলর্
পোট্রি অরুৰুহনিন়্‌ অন্দমাঞ্ সেন্দৰির্গৰ‍্
পোট্রিএল্ লাৱুযির্ক্কুন্ দোট্রমাম্ পোর়্‌পাদম্
পোট্রিএল্ লাৱুযির্ক্কুম্ পোহমাম্ পূঙ্গৰ়ল্গৰ‍্
পোট্রিএল্ লাৱুযির্ক্কুম্ ঈর়াম্ ইণৈযডিহৰ‍্
পোট্রিমাল্ নান়্‌মুহন়ুঙ্ কাণাদ পুণ্ডরিহম্
পোট্রিযাম্ উয্যআট্ কোণ্ডরুৰুম্ পোন়্‌মলর্গৰ‍্
পোট্রিযাম্ মার্গৰ়িনী রাডেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
पोट्रि अरुळुहनिऩ् आदियाम् पादमलर्
पोट्रि अरुळुहनिऩ् अन्दमाञ् सॆन्दळिर्गळ्
पोट्रिऎल् लावुयिर्क्कुन् दोट्रमाम् पॊऱ्पादम्
पोट्रिऎल् लावुयिर्क्कुम् पोहमाम् पूङ्गऴल्गळ्
पोट्रिऎल् लावुयिर्क्कुम् ईऱाम् इणैयडिहळ्
पोट्रिमाल् नाऩ्मुहऩुङ् काणाद पुण्डरिहम्
पोट्रियाम् उय्यआट् कॊण्डरुळुम् पॊऩ्मलर्गळ्
पोट्रियाम् मार्गऴिनी राडेलोर् ऎम्बावाय् 

Open the Devanagari Section in a New Tab
ಪೋಟ್ರಿ ಅರುಳುಹನಿನ್ ಆದಿಯಾಂ ಪಾದಮಲರ್
ಪೋಟ್ರಿ ಅರುಳುಹನಿನ್ ಅಂದಮಾಞ್ ಸೆಂದಳಿರ್ಗಳ್
ಪೋಟ್ರಿಎಲ್ ಲಾವುಯಿರ್ಕ್ಕುನ್ ದೋಟ್ರಮಾಂ ಪೊಱ್ಪಾದಂ
ಪೋಟ್ರಿಎಲ್ ಲಾವುಯಿರ್ಕ್ಕುಂ ಪೋಹಮಾಂ ಪೂಂಗೞಲ್ಗಳ್
ಪೋಟ್ರಿಎಲ್ ಲಾವುಯಿರ್ಕ್ಕುಂ ಈಱಾಂ ಇಣೈಯಡಿಹಳ್
ಪೋಟ್ರಿಮಾಲ್ ನಾನ್ಮುಹನುಙ್ ಕಾಣಾದ ಪುಂಡರಿಹಂ
ಪೋಟ್ರಿಯಾಂ ಉಯ್ಯಆಟ್ ಕೊಂಡರುಳುಂ ಪೊನ್ಮಲರ್ಗಳ್
ಪೋಟ್ರಿಯಾಂ ಮಾರ್ಗೞಿನೀ ರಾಡೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 

Open the Kannada Section in a New Tab
పోట్రి అరుళుహనిన్ ఆదియాం పాదమలర్
పోట్రి అరుళుహనిన్ అందమాఞ్ సెందళిర్గళ్
పోట్రిఎల్ లావుయిర్క్కున్ దోట్రమాం పొఱ్పాదం
పోట్రిఎల్ లావుయిర్క్కుం పోహమాం పూంగళల్గళ్
పోట్రిఎల్ లావుయిర్క్కుం ఈఱాం ఇణైయడిహళ్
పోట్రిమాల్ నాన్ముహనుఙ్ కాణాద పుండరిహం
పోట్రియాం ఉయ్యఆట్ కొండరుళుం పొన్మలర్గళ్
పోట్రియాం మార్గళినీ రాడేలోర్ ఎంబావాయ్ 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෝට්‍රි අරුළුහනින් ආදියාම් පාදමලර්
පෝට්‍රි අරුළුහනින් අන්දමාඥ් සෙන්දළිර්හළ්
පෝට්‍රිඑල් ලාවුයිර්ක්කුන් දෝට්‍රමාම් පොර්පාදම්
පෝට්‍රිඑල් ලාවුයිර්ක්කුම් පෝහමාම් පූංගළල්හළ්
පෝට්‍රිඑල් ලාවුයිර්ක්කුම් ඊරාම් ඉණෛයඩිහළ්
පෝට්‍රිමාල් නාන්මුහනුඞ් කාණාද පුණ්ඩරිහම්
පෝට්‍රියාම් උය්‍යආට් කොණ්ඩරුළුම් පොන්මලර්හළ්
පෝට්‍රියාම් මාර්හළිනී රාඩේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
പോറ്റി അരുളുകനിന്‍ ആതിയാം പാതമലര്‍
പോറ്റി അരുളുകനിന്‍ അന്തമാഞ് ചെന്തളിര്‍കള്‍
പോറ്റിഎല്‍ ലാവുയിര്‍ക്കുന്‍ തോറ്റമാം പൊറ്പാതം
പോറ്റിഎല്‍ ലാവുയിര്‍ക്കും പോകമാം പൂങ്കഴല്‍കള്‍
പോറ്റിഎല്‍ ലാവുയിര്‍ക്കും ഈറാം ഇണൈയടികള്‍
പോറ്റിമാല്‍ നാന്‍മുകനുങ് കാണാത പുണ്ടരികം
പോറ്റിയാം ഉയ്യആട് കൊണ്ടരുളും പൊന്‍മലര്‍കള്‍
പോറ്റിയാം മാര്‍കഴിനീ രാടേലോര്‍ എംപാവായ് 

Open the Malayalam Section in a New Tab
โปรริ อรุลุกะนิณ อาถิยาม ปาถะมะละร
โปรริ อรุลุกะนิณ อนถะมาญ เจะนถะลิรกะล
โปรริเอะล ลาวุยิรกกุน โถรระมาม โปะรปาถะม
โปรริเอะล ลาวุยิรกกุม โปกะมาม ปูงกะฬะลกะล
โปรริเอะล ลาวุยิรกกุม อีราม อิณายยะดิกะล
โปรริมาล นาณมุกะณุง กาณาถะ ปุณดะริกะม
โปรริยาม อุยยะอาด โกะณดะรุลุม โปะณมะละรกะล
โปรริยาม มารกะฬินี ราเดโลร เอะมปาวาย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာရ္ရိ အရုလုကနိန္ အာထိယာမ္ ပာထမလရ္
ေပာရ္ရိ အရုလုကနိန္ အန္ထမာည္ ေစ့န္ထလိရ္ကလ္
ေပာရ္ရိေအ့လ္ လာဝုယိရ္က္ကုန္ ေထာရ္ရမာမ္ ေပာ့ရ္ပာထမ္
ေပာရ္ရိေအ့လ္ လာဝုယိရ္က္ကုမ္ ေပာကမာမ္ ပူင္ကလလ္ကလ္
ေပာရ္ရိေအ့လ္ လာဝုယိရ္က္ကုမ္ အီရာမ္ အိနဲယတိကလ္
ေပာရ္ရိမာလ္ နာန္မုကနုင္ ကာနာထ ပုန္တရိကမ္
ေပာရ္ရိယာမ္ အုယ္ယအာတ္ ေကာ့န္တရုလုမ္ ေပာ့န္မလရ္ကလ္
ေပာရ္ရိယာမ္ မာရ္ကလိနီ ရာေတေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
ポーリ・リ アルルカニニ・ アーティヤーミ・ パータマラリ・
ポーリ・リ アルルカニニ・ アニ・タマーニ・ セニ・タリリ・カリ・
ポーリ・リエリ・ ラーヴヤリ・ク・クニ・ トーリ・ラマーミ・ ポリ・パータミ・
ポーリ・リエリ・ ラーヴヤリ・ク・クミ・ ポーカマーミ・ プーニ・カラリ・カリ・
ポーリ・リエリ・ ラーヴヤリ・ク・クミ・ イーラーミ・ イナイヤティカリ・
ポーリ・リマーリ・ ナーニ・ムカヌニ・ カーナータ プニ・タリカミ・
ポーリ・リヤーミ・ ウヤ・ヤアータ・ コニ・タルルミ・ ポニ・マラリ・カリ・
ポーリ・リヤーミ・ マーリ・カリニー ラーテーローリ・ エミ・パーヴァーヤ・ 

Open the Japanese Section in a New Tab
bodri aruluhanin adiyaM badamalar
bodri aruluhanin andaman sendalirgal
bodriel lafuyirggun dodramaM borbadaM
bodriel lafuyirgguM bohamaM bunggalalgal
bodriel lafuyirgguM iraM inaiyadihal
bodrimal nanmuhanung ganada bundarihaM
bodriyaM uyyaad gondaruluM bonmalargal
bodriyaM margalini radelor eMbafay 

Open the Pinyin Section in a New Tab
بُوۤتْرِ اَرُضُحَنِنْ آدِیان بادَمَلَرْ
بُوۤتْرِ اَرُضُحَنِنْ اَنْدَمانعْ سيَنْدَضِرْغَضْ
بُوۤتْرِيَلْ لاوُیِرْكُّنْ دُوۤتْرَمان بُورْبادَن
بُوۤتْرِيَلْ لاوُیِرْكُّن بُوۤحَمان بُونغْغَظَلْغَضْ
بُوۤتْرِيَلْ لاوُیِرْكُّن اِيران اِنَيْیَدِحَضْ
بُوۤتْرِمالْ نانْمُحَنُنغْ كانادَ بُنْدَرِحَن
بُوۤتْرِیان اُیَّآتْ كُونْدَرُضُن بُونْمَلَرْغَضْ
بُوۤتْرِیان مارْغَظِنِي راديَۤلُوۤرْ يَنباوَایْ 



Open the Arabic Section in a New Tab
po:t̺t̺ʳɪ· ˀʌɾɨ˞ɭʼɨxʌn̺ɪn̺ ˀɑ:ðɪɪ̯ɑ:m pɑ:ðʌmʌlʌr
po:t̺t̺ʳɪ· ˀʌɾɨ˞ɭʼɨxʌn̺ɪn̺ ˀʌn̪d̪ʌmɑ:ɲ sɛ̝n̪d̪ʌ˞ɭʼɪrɣʌ˞ɭ
po:t̺t̺ʳɪʲɛ̝l lɑ:ʋʉ̩ɪ̯ɪrkkɨn̺ t̪o:t̺t̺ʳʌmɑ:m po̞rpɑ:ðʌm
po:t̺t̺ʳɪʲɛ̝l lɑ:ʋʉ̩ɪ̯ɪrkkɨm po:xʌmɑ:m pu:ŋgʌ˞ɻʌlxʌ˞ɭ
po:t̺t̺ʳɪʲɛ̝l lɑ:ʋʉ̩ɪ̯ɪrkkɨm ʲi:ɾɑ:m ʲɪ˞ɳʼʌjɪ̯ʌ˞ɽɪxʌ˞ɭ
po:t̺t̺ʳɪmɑ:l n̺ɑ:n̺mʉ̩xʌn̺ɨŋ kɑ˞:ɳʼɑ:ðə pʊ˞ɳɖʌɾɪxʌm
po:t̺t̺ʳɪɪ̯ɑ:m ʷʊjɪ̯ʌˀɑ˞:ʈ ko̞˞ɳɖʌɾɨ˞ɭʼɨm po̞n̺mʌlʌrɣʌ˞ɭ
po:t̺t̺ʳɪɪ̯ɑ:m mɑ:rɣʌ˞ɻɪn̺i· rɑ˞:ɽe:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 

Open the IPA Section in a New Tab
pōṟṟi aruḷukaniṉ ātiyām pātamalar
pōṟṟi aruḷukaniṉ antamāñ centaḷirkaḷ
pōṟṟiel lāvuyirkkun tōṟṟamām poṟpātam
pōṟṟiel lāvuyirkkum pōkamām pūṅkaḻalkaḷ
pōṟṟiel lāvuyirkkum īṟām iṇaiyaṭikaḷ
pōṟṟimāl nāṉmukaṉuṅ kāṇāta puṇṭarikam
pōṟṟiyām uyyaāṭ koṇṭaruḷum poṉmalarkaḷ
pōṟṟiyām mārkaḻinī rāṭēlōr empāvāy 

Open the Diacritic Section in a New Tab
поотры арюлюканын аатыяaм паатaмaлaр
поотры арюлюканын антaмаагн сэнтaлыркал
поотрыэл лаавюйырккюн тоотрaмаам потпаатaм
поотрыэл лаавюйырккюм поокамаам пунгкалзaлкал
поотрыэл лаавюйырккюм ираам ынaыятыкал
поотрымаал наанмюканюнг кaнаатa пюнтaрыкам
поотрыяaм юйяаат контaрюлюм понмaлaркал
поотрыяaм мааркалзыни раатэaлоор эмпааваай 

Open the Russian Section in a New Tab
pohrri a'ru'luka:nin ahthijahm pahthamala'r
pohrri a'ru'luka:nin a:nthamahng ze:ntha'li'rka'l
pohrriel lahwuji'rkku:n thohrramahm porpahtham
pohrriel lahwuji'rkkum pohkamahm puhngkashalka'l
pohrriel lahwuji'rkkum ihrahm i'näjadika'l
pohrrimahl :nahnmukanung kah'nahtha pu'nda'rikam
pohrrijahm ujjaahd ko'nda'ru'lum ponmala'rka'l
pohrrijahm mah'rkashi:nih 'rahdehloh'r empahwahj 

Open the German Section in a New Tab
poorhrhi aròlhòkanin aathiyaam paathamalar
poorhrhi aròlhòkanin anthamaagn çènthalhirkalh
poorhrhièl laavòyeirkkòn thoorhrhamaam porhpaatham
poorhrhièl laavòyeirkkòm pookamaam pöngkalzalkalh
poorhrhièl laavòyeirkkòm iirhaam inhâiyadikalh
poorhrhimaal naanmòkanòng kaanhaatha pònhdarikam
poorhrhiyaam òiyyaaat konhdaròlhòm ponmalarkalh
poorhrhiyaam maarka1zinii raadèèloor èmpaavaaiy 
poorhrhi arulhucanin aathiiyaam paathamalar
poorhrhi arulhucanin ainthamaaign ceinthalhircalh
poorhrhiel laavuyiiriccuin thoorhrhamaam porhpaatham
poorhrhiel laavuyiiriccum poocamaam puungcalzalcalh
poorhrhiel laavuyiiriccum iirhaam inhaiyaticalh
poorhrhimaal naanmucanung caanhaatha puinhtaricam
poorhrhiiyaam uyiyaaait coinhtarulhum ponmalarcalh
poorhrhiiyaam maarcalzinii raateeloor empaavayi 
poa'r'ri aru'luka:nin aathiyaam paathamalar
poa'r'ri aru'luka:nin a:nthamaanj se:ntha'lirka'l
poa'r'riel laavuyirkku:n thoa'r'ramaam po'rpaatham
poa'r'riel laavuyirkkum poakamaam poongkazhalka'l
poa'r'riel laavuyirkkum ee'raam i'naiyadika'l
poa'r'rimaal :naanmukanung kaa'naatha pu'ndarikam
poa'r'riyaam uyyaaad ko'ndaru'lum ponmalarka'l
poa'r'riyaam maarkazhi:nee raadaeloar empaavaay 

Open the English Section in a New Tab
পোৰ্ৰি অৰুলুকণিন্ আতিয়াম্ পাতমলৰ্
পোৰ্ৰি অৰুলুকণিন্ অণ্তমাঞ্ চেণ্তলিৰ্কল্
পোৰ্ৰিএল্ লাৱুয়িৰ্ক্কুণ্ তোৰ্ৰমাম্ পোৰ্পাতম্
পোৰ্ৰিএল্ লাৱুয়িৰ্ক্কুম্ পোকমাম্ পূঙকলল্কল্
পোৰ্ৰিএল্ লাৱুয়িৰ্ক্কুম্ পীৰাম্ ইণৈয়টিকল্
পোৰ্ৰিমাল্ ণান্মুকনূঙ কানাত পুণ্তৰিকম্
পোৰ্ৰিয়াম্ উয়্য়আইট কোণ্তৰুলুম্ পোন্মলৰ্কল্
পোৰ্ৰিয়াম্ মাৰ্কলীণী ৰাটেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.