ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
092 திருப்புக்கொளியூர் அவினாசி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு : பண் : குறிஞ்சி

சுவாமிகள் , ஆரூரிலிருக்கும் நாளில் மலைநாடணை வதற்கு விருப்புக் கொண்டு , ஆரூர்ப் பெருமானிடம் விடை கொண்டு , பல பதிகளையும் வணங்கிக்கொண்டு , கொங்கு நாட்டில் , திருப்புக்கொளியூர் அவினாசி சென்று , நெடுநாள் களுக்கு முன்னர் , முதலை விழுங்கிய மகனை , இறையன்பு மிகுந்த அவனது பெற்றோர்களது துயரத்தை நீக்குதற்பொருட்டு , முதலை வாயினின்றும் அழைத்துத் தருதற்கு அக்குளக் கரைக்கண் சென்று பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 வெள்ளானைச் . சருக் . 10-11.) இதன் நான்காவது பாடல் முடிவதற்குள் , பெருமான் அருளான் முதலை , மகனைக் கரையில் சேர்த்தது . குறிப்பு : இத் திருப்பதிகம் நுதலிய பொருள் , இதன் வரலாற்றானே விளங்கும் , இதன்கண் பலவிடங்களில் பாடங்கள் பலபட ஓதப்படுகின்றன .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.