ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு : பண் : தக்கேசி

சுவாமிகள் , திருவொற்றியூரில் சங்கிலியார் பொருட்டுச் செய்த சூளுறவைப் பிழைத்துத் திருவாரூருக்குச் செல்லப் புறப் பட்டுத் திருவொற்றியூர் எல்லையைக் கடந்தபொழுது மறைந்த கண்களைத் தரவேண்டிப் பல தலங்களிலும் வணங்கிப் பாடி , திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங் காடு திருவூறல்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து , காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திரு வேகம்பத்தை அடைந்து , ` கச்சி ஏகம்பனே , கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய் ` என்று வேண்டிப் பெருமான் , இடக்கண் கொடுக்கப்பெற்று மகிழ்ந்து பாடியருளியது இத் திருப் பதிகம் . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . 288) குறிப்பு : இத்திருப்பதிகம் , தமக்குக் கண் அளித்த இறைவரது திரு வருளை வியந்து அருளிச்செய்தது .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.