ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
036 திருப்பைஞ்ஞீலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு : பண் : கொல்லி

தம்பிரான் தோழர் திருப்பாச்சிலாச்சிராமத்தில் பெருமானைத் தொழுது பொருள் பெற்றுச் சின்னாள் தங்கி அருகிலுள்ள பதிகளை வணங்கிய பின்னர் காவிரியின் இரு மருங்கிலுமுள்ள தலங்களை வணங்கிக்கொண்டு திருப் பைஞ்ஞீலி சென்று , திருக்கோபுரம் இறைஞ்சி வலங்கொண்டு கங்காளமூர்த்தியைத் தரிசித்து , பெருமான் பலிக்கு எழுந்தருளும் திருவடிவைக்கண்ட மகளிர் மையல் கொண்டு வினவிய கூற்றாக அமைத்துப் பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . 84) குறிப்பு : இத் திருப்பதிகம் , இறைவர் பிச்சைக்கோலம் உடையவராய்ப் பிச்சைக்குச் சென்றபொழுது , அவரது பேரழகினால் கவரப்பட்டுக் காதல் மீக்கூர்ந்த மகளிர் அவரைத் தாம் தீண்டுதற்கு அஞ்சுதலைக் குறிப்பிற் கூறியவாறாக அருளிச்செய்தது . மகளிர் அஞ்சுதற்குக் காரண மாயினவை , பிறரைத் தீங்குசெய்யும் குறிப்பினவாகாது , இறைவரது பெருமிதத்தையே குறித்தலின் , அவ்வச்சமும் , காதல் மிகுதிக்கே காரணமாயிற்றென உணர்க .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.