ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
010 திருக்கச்சியனேகதங்காவதம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1 பண் : இந்தளம்

தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
    மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
    வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
    மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேனாகிய நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையையுடைய எம்பெருமானும், அழகு விளங்கும், ஐங்கணையை உடைய அத்தலைவனாகிய மன்மதனை எரித்தவனும், தீயில் நின்று ஆடுபவனும், மேலானவனும், மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும், மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி உறையும் இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, ` திருவனேகதங் காவதம் ` என்னும் திருக்கோயிலே.

குறிப்புரை:

குலவான் - மேலானவன். மறை - மறு ; புள்ளி. ` ஆன் நெய், எண்ணெய் ` முதலாக நெய் பலவாகலின் ` தேன்நெய் ` என்றது இரு பெயரொட்டு. ` சிவபிரான் சடையில் கொன்றை முதலிய மலர்கள் பலவற்றை அணிதல், அவற்றில் உள்ள தேனாகிய பயன் பற்றி ` என்று, தற்குறிப்பேற்றமாக அருளினார். புரிதல், விரும்புதல். இறைவனது விருப்பம், அவனது சடைமேல் ஏற்றப்பட்டது. இனி, ` தேனால் புரிக்கப் பட்டு உழல்கின்ற சடை ` என்றலுமாம். ` உழல் சடை ` என இயையாது, ` உழல் எம்பெருமான் ` என்று இயைத்து, ` தேனால் ஆட்டப்படுதலை விரும்புகின்றவன் ` என்று உரைப்பினும் அமையும். இவ்வாறன்றி, ` தேனாவது வண்டு ` என்றும், ` நெய் ` என்றது ` தேனை ` என்றும் உரைப் பாரும் உளர். ` எரித்து ` என்னும் எச்சம், எண்ணுப் பொருளது. ` மானை ` என்னும் இரண்டனுருபு, ` கையன் ` என்னும் ஏழாவதன் பொருட்கண் வந்த வினைக் குறிப்பொடு முடிந்தது. ` மாறுபட ` என்றது. ` ஆறுபட ` எனப் பிரித்துரைத்தலும் ஆம். ` அனேகதங் காவதமே, என வரையறுத்தருளியது, புகழ்ச்சி கருதியென்க. ` அனேகதங்காபதம் ` என்பதும் பாடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తేనెను, నెయ్యిని ఇష్టపడుతూ తిరిగే ఎర్రని ‘జటాజూటం’ గల మన దేవుడు సందడి గల కచ్చిలో అనేకదంగావదంలో ఉన్నాడు. శ్రేష్టమైన పంచ బాణుని దహించిన; అగ్ని యందు నాట్యమాడే; శ్రేష్టమైన స్వభావము గల;ఎన్నలేని మచ్చలు గల జింక పిల్లను ఎడమచేతిలో పట్టుకొన్న; మద జలం కారే ప్రతికూల స్వభావం గల కొండంత ఏనుగును తోలు వొలిచిన యజమానుని (శివుని) నివాసమైన---- కచ్చిలోని అనేకదంగావదం అనే --- స్థలమిది.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මී ලොල් බිඟුන් සරනා රන් කෙස්වැටි සමිඳුන්
පස් අවි දරාගත් මල්සර රදුන්
දවාලූයේ අනලේ රඟනා
මාහැඟියන් නොමියෙන මුවා
වමතෙහි රඳවා සිටිනුයේ තෙවලා දහම්
එකිනෙක වෙනස් වුවද ගිරි කුලක් බඳු
ගජිඳුන් සම ගලවා දැමූ සමිඳුන් වැඩ සිටින
පුද බිම තිරුක්කච්චි අනේක තංගාවදම යැ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
10. तिरुक्कच्चि अनेकदंगावदम

(सुन्दरर् कांचीपुरम् में कुछ दिन ठहरे, तब उन्होंने अनेकदंगावदम मेें आकर भगवान के दर्शन किए। प्रस्तुत दशक भगवान की स्तुति मेें रचित है।)

मधु, घृत से पूजित, रक्तिम जटाधारी प्रभु!
सुन्दर, पंचपुष्प बाणधारी मन्मथ को भस्म करनेवाले हैं।
अग्नि में नृत्य करनेवाले हैं।
चीतल को दाहिने हाथ में धारण करनेवाले हैं।
मद भरे हाथी के चर्म को उघाड़नेवाले हैं।
उस प्रभु का निवास स्थान है-
कलरव युक्त कच्चिमा नगर में स्थित अनेकदंगावदम का मन्दिर।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Aṉēkataṅkāpatam in Kacci of bustle.
is the place of our god who has a red caṭai and wanders desiring the honey.
the place of Civaṉ who dances in fire, burning that chief who has eminent five arrows.
the place of Civaṉ of superior nature.
the place of the god who holds in his left hand a deer which has spots not decreasing in numbers;
and the place of the master who flayed an elephant which had the appearance of a hill and which was inimical and from which fluid of must flowed.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Our Lord excellency wills to sport his ruddy plaits
soused in the honey of ghee;He burns up
the five-darted fair potent Manmatha, the mind churner;
dances ever as flame of flames in the midst of flames;
up holds a spotted deer in arm of His on the left;
peels off a mountainous mammoth\\\\\\\'s hide
with three-fold ichor exuding; He longs to lounge long
in the pomp and hub of Kacci Anekatangaavatam!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀷𑁂𑁆𑀬𑁆 𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀼𑀵𑀮𑁆 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃 𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼
𑀫𑀸𑀷𑀢𑀺 𑀝𑀦𑁆𑀢𑀺𑀓𑀵𑁆 𑀐𑀗𑁆𑀓𑀡𑁃𑀬𑀓𑁆
𑀓𑁄𑀷𑁃 𑀏𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑁂𑁆𑀭𑀺 𑀬𑀸𑀝𑀺 𑀇𑀝𑀫𑁆𑀓𑀼𑀮
𑀯𑀸𑀷 𑀢𑀺𑀝𑀗𑁆𑀓𑀼𑀶𑁃 𑀬𑀸𑀫𑀶𑁃𑀬𑀸
𑀫𑀸𑀷𑁃 𑀇𑀝𑀢𑁆𑀢𑀢𑁄𑁆𑀭𑁆 𑀓𑁃𑀬𑀷𑁆 𑀇𑀝𑀫𑁆𑀫𑀢
𑀫𑀸𑀶𑀼 𑀧𑀝𑀧𑁆𑀧𑁄𑁆𑀵𑀺 𑀬𑀼𑀫𑁆𑀫𑀮𑁃𑀧𑁄𑀮𑁆
𑀆𑀷𑁃 𑀬𑀼𑀭𑀺𑀢𑁆𑀢 𑀧𑀺𑀭𑀸𑀷 𑀢𑀺𑀝𑀗𑁆𑀓𑀮𑀺𑀓𑁆
𑀓𑀘𑁆𑀘𑀺 𑀅𑀷𑁂𑀓𑀢𑀗𑁆 𑀓𑀸𑀯𑀢𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেন়েয্ পুরিন্দুৰ়ল্ সেঞ্জডৈ এম্বেরু
মান়দি টন্দিহৰ়্‌ ঐঙ্গণৈযক্
কোন়ৈ এরিত্তেরি যাডি ইডম্কুল
ৱান় তিডঙ্গুর়ৈ যামর়ৈযা
মান়ৈ ইডত্তদোর্ কৈযন়্‌ ইডম্মদ
মার়ু পডপ্পোৰ়ি যুম্মলৈবোল্
আন়ৈ যুরিত্ত পিরান় তিডঙ্গলিক্
কচ্চি অন়েহদঙ্ কাৱদমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே


Open the Thamizhi Section in a New Tab
தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே

Open the Reformed Script Section in a New Tab
तेऩॆय् पुरिन्दुऴल् सॆञ्जडै ऎम्बॆरु
माऩदि टन्दिहऴ् ऐङ्गणैयक्
कोऩै ऎरित्तॆरि याडि इडम्कुल
वाऩ तिडङ्गुऱै यामऱैया
माऩै इडत्तदॊर् कैयऩ् इडम्मद
माऱु पडप्पॊऴि युम्मलैबोल्
आऩै युरित्त पिराऩ तिडङ्गलिक्
कच्चि अऩेहदङ् कावदमे
Open the Devanagari Section in a New Tab
ತೇನೆಯ್ ಪುರಿಂದುೞಲ್ ಸೆಂಜಡೈ ಎಂಬೆರು
ಮಾನದಿ ಟಂದಿಹೞ್ ಐಂಗಣೈಯಕ್
ಕೋನೈ ಎರಿತ್ತೆರಿ ಯಾಡಿ ಇಡಮ್ಕುಲ
ವಾನ ತಿಡಂಗುಱೈ ಯಾಮಱೈಯಾ
ಮಾನೈ ಇಡತ್ತದೊರ್ ಕೈಯನ್ ಇಡಮ್ಮದ
ಮಾಱು ಪಡಪ್ಪೊೞಿ ಯುಮ್ಮಲೈಬೋಲ್
ಆನೈ ಯುರಿತ್ತ ಪಿರಾನ ತಿಡಂಗಲಿಕ್
ಕಚ್ಚಿ ಅನೇಹದಙ್ ಕಾವದಮೇ
Open the Kannada Section in a New Tab
తేనెయ్ పురిందుళల్ సెంజడై ఎంబెరు
మానది టందిహళ్ ఐంగణైయక్
కోనై ఎరిత్తెరి యాడి ఇడమ్కుల
వాన తిడంగుఱై యామఱైయా
మానై ఇడత్తదొర్ కైయన్ ఇడమ్మద
మాఱు పడప్పొళి యుమ్మలైబోల్
ఆనై యురిత్త పిరాన తిడంగలిక్
కచ్చి అనేహదఙ్ కావదమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේනෙය් පුරින්දුළල් සෙඥ්ජඩෛ එම්බෙරු
මානදි ටන්දිහළ් ඓංගණෛයක්
කෝනෛ එරිත්තෙරි යාඩි ඉඩම්කුල
වාන තිඩංගුරෛ යාමරෛයා
මානෛ ඉඩත්තදොර් කෛයන් ඉඩම්මද
මාරු පඩප්පොළි යුම්මලෛබෝල්
ආනෛ යුරිත්ත පිරාන තිඩංගලික්
කච්චි අනේහදඞ් කාවදමේ


Open the Sinhala Section in a New Tab
തേനെയ് പുരിന്തുഴല്‍ ചെഞ്ചടൈ എംപെരു
മാനതി ടന്തികഴ് ഐങ്കണൈയക്
കോനൈ എരിത്തെരി യാടി ഇടമ്കുല
വാന തിടങ്കുറൈ യാമറൈയാ
മാനൈ ഇടത്തതൊര്‍ കൈയന്‍ ഇടമ്മത
മാറു പടപ്പൊഴി യുമ്മലൈപോല്‍
ആനൈ യുരിത്ത പിരാന തിടങ്കലിക്
കച്ചി അനേകതങ് കാവതമേ
Open the Malayalam Section in a New Tab
เถเณะย ปุรินถุฬะล เจะญจะดาย เอะมเปะรุ
มาณะถิ ดะนถิกะฬ อายงกะณายยะก
โกณาย เอะริถเถะริ ยาดิ อิดะมกุละ
วาณะ ถิดะงกุราย ยามะรายยา
มาณาย อิดะถถะโถะร กายยะณ อิดะมมะถะ
มารุ ปะดะปโปะฬิ ยุมมะลายโปล
อาณาย ยุริถถะ ปิราณะ ถิดะงกะลิก
กะจจิ อเณกะถะง กาวะถะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထေန့ယ္ ပုရိန္ထုလလ္ ေစ့ည္စတဲ ေအ့မ္ေပ့ရု
မာနထိ တန္ထိကလ္ အဲင္ကနဲယက္
ေကာနဲ ေအ့ရိထ္ေထ့ရိ ယာတိ အိတမ္ကုလ
ဝာန ထိတင္ကုရဲ ယာမရဲယာ
မာနဲ အိတထ္ထေထာ့ရ္ ကဲယန္ အိတမ္မထ
မာရု ပတပ္ေပာ့လိ ယုမ္မလဲေပာလ္
အာနဲ ယုရိထ္ထ ပိရာန ထိတင္ကလိက္
ကစ္စိ အေနကထင္ ကာဝထေမ


Open the Burmese Section in a New Tab
テーネヤ・ プリニ・トゥラリ・ セニ・サタイ エミ・ペル
マーナティ タニ・ティカリ・ アヤ・ニ・カナイヤク・
コーニイ エリタ・テリ ヤーティ イタミ・クラ
ヴァーナ ティタニ・クリイ ヤーマリイヤー
マーニイ イタタ・タトリ・ カイヤニ・ イタミ・マタ
マール パタピ・ポリ ユミ・マリイポーリ・
アーニイ ユリタ・タ ピラーナ ティタニ・カリク・
カシ・チ アネーカタニ・ カーヴァタメー
Open the Japanese Section in a New Tab
deney burindulal sendadai eMberu
manadi dandihal aingganaiyag
gonai eridderi yadi idamgula
fana didanggurai yamaraiya
manai idaddador gaiyan idammada
maru badabboli yummalaibol
anai yuridda birana didanggalig
gaddi anehadang gafadame
Open the Pinyin Section in a New Tab
تيَۤنيَیْ بُرِنْدُظَلْ سيَنعْجَدَيْ يَنبيَرُ
مانَدِ تَنْدِحَظْ اَيْنغْغَنَيْیَكْ
كُوۤنَيْ يَرِتّيَرِ یادِ اِدَمْكُلَ
وَانَ تِدَنغْغُرَيْ یامَرَيْیا
مانَيْ اِدَتَّدُورْ كَيْیَنْ اِدَمَّدَ
مارُ بَدَبُّوظِ یُمَّلَيْبُوۤلْ
آنَيْ یُرِتَّ بِرانَ تِدَنغْغَلِكْ
كَتشِّ اَنيَۤحَدَنغْ كاوَدَميَۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:n̺ɛ̝ɪ̯ pʊɾɪn̪d̪ɨ˞ɻʌl sɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯ ʲɛ̝mbɛ̝ɾɨ
mɑ:n̺ʌðɪ· ʈʌn̪d̪ɪxʌ˞ɻ ˀʌɪ̯ŋgʌ˞ɳʼʌjɪ̯ʌk
ko:n̺ʌɪ̯ ʲɛ̝ɾɪt̪t̪ɛ̝ɾɪ· ɪ̯ɑ˞:ɽɪ· ʲɪ˞ɽʌmgɨlʌ
ʋɑ:n̺ə t̪ɪ˞ɽʌŋgɨɾʌɪ̯ ɪ̯ɑ:mʌɾʌjɪ̯ɑ:
mɑ:n̺ʌɪ̯ ʲɪ˞ɽʌt̪t̪ʌðo̞r kʌjɪ̯ʌn̺ ʲɪ˞ɽʌmmʌðʌ
mɑ:ɾɨ pʌ˞ɽʌppo̞˞ɻɪ· ɪ̯ɨmmʌlʌɪ̯βo:l
ˀɑ:n̺ʌɪ̯ ɪ̯ɨɾɪt̪t̪ə pɪɾɑ:n̺ə t̪ɪ˞ɽʌŋgʌlɪk
kʌʧʧɪ· ˀʌn̺e:xʌðʌŋ kɑ:ʋʌðʌme·
Open the IPA Section in a New Tab
tēṉey purintuḻal ceñcaṭai emperu
māṉati ṭantikaḻ aiṅkaṇaiyak
kōṉai eritteri yāṭi iṭamkula
vāṉa tiṭaṅkuṟai yāmaṟaiyā
māṉai iṭattator kaiyaṉ iṭammata
māṟu paṭappoḻi yummalaipōl
āṉai yuritta pirāṉa tiṭaṅkalik
kacci aṉēkataṅ kāvatamē
Open the Diacritic Section in a New Tab
тэaнэй пюрынтюлзaл сэгнсaтaы эмпэрю
маанaты тaнтыкалз aынгканaыяк
коонaы эрыттэры яaты ытaмкюлa
ваанa тытaнгкюрaы яaмaрaыяa
маанaы ытaттaтор кaыян ытaммaтa
маарю пaтaпползы ёммaлaыпоол
аанaы ёрыттa пыраанa тытaнгкалык
качсы анэaкатaнг кaвaтaмэa
Open the Russian Section in a New Tab
thehnej pu'ri:nthushal zengzadä empe'ru
mahnathi da:nthikash ängka'näjak
kohnä e'riththe'ri jahdi idamkula
wahna thidangkurä jahmaräjah
mahnä idaththatho'r käjan idammatha
mahru padapposhi jummaläpohl
ahnä ju'riththa pi'rahna thidangkalik
kachzi anehkathang kahwathameh
Open the German Section in a New Tab
thèènèiy pòrinthòlzal çègnçatâi èmpèrò
maanathi danthikalz âingkanhâiyak
koonâi èriththèri yaadi idamkòla
vaana thidangkòrhâi yaamarhâiyaa
maanâi idaththathor kâiyan idammatha
maarhò padappo1zi yòmmalâipool
aanâi yòriththa piraana thidangkalik
kaçhçi anèèkathang kaavathamèè
theeneyi puriinthulzal ceignceatai emperu
maanathi tainthicalz aingcanhaiyaic
coonai eriiththeri iyaati itamcula
vana thitangcurhai iyaamarhaiiyaa
maanai itaiththathor kaiyan itammatha
maarhu patappolzi yummalaipool
aanai yuriiththa piraana thitangcaliic
caccei aneecathang caavathamee
thaeney puri:nthuzhal senjsadai emperu
maanathi da:nthikazh aingka'naiyak
koanai eriththeri yaadi idamkula
vaana thidangku'rai yaama'raiyaa
maanai idaththathor kaiyan idammatha
maa'ru padappozhi yummalaipoal
aanai yuriththa piraana thidangkalik
kachchi anaekathang kaavathamae
Open the English Section in a New Tab
তেনেয়্ পুৰিণ্তুলল্ চেঞ্চটৈ এম্পেৰু
মানতি তণ্তিকইল ঈঙকণৈয়ক্
কোনৈ এৰিত্তেৰি য়াটি ইতম্কুল
ৱান তিতঙকুৰৈ য়ামৰৈয়া
মানৈ ইতত্ততোৰ্ কৈয়ন্ ইতম্মত
মাৰূ পতপ্পোলী য়ুম্মলৈপোল্
আনৈ য়ুৰিত্ত পিৰান তিতঙকলিক্
কচ্চি অনেকতঙ কাৱতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.