ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
001 திருவெண்ணெய்நல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு : பண் : இந்தளம்

திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்துவந்த ஆலாலசுந்தரர் திருத்தொண்டத் தொகை வெளிப் படுதற்கேதுவாக, பூக்கொய்யவந்த சேடியர் இருவர்பால் சிறிது மனத்தைச் செலுத்த, பெருமான் கட்டளைப்படி திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதிசைவ அந்தணர் குலத்தில் சடை யனாருக்கும் இசைஞானியாருக்கும் மகவாகத்தோன்றி நம்பி யாரூரர் என்னும் திருநாமம் பெற்று வளர்ந்தார். மணப்பருவம் அடைந்த அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாசாரியாருடைய மகளை மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தனர். மணப்பந்தரில் சிவ பெருமான் தாம் முன்பு கயிலையில் அளித்த வாக்கின்படி கிழ வேதியராக வந்து ஓலைகாட்டி, ஆரூரரைத் தமக்கு அடிமை என்று திருவெண்ணெய்நல்லூரில் வழக்கிட்டு ஆட்கொண்டு `நம்மைச் சொற்றமிழ் பாடுக` என்று கட்டளையிட்டருளினார். அதுபோழ்து வன்றொண்டர் முன்பு இறைவனைப் `பித்தன்` என்று பேசிய சொல்லையே முதலாகக்கொண்டு பாடும்படி அருளிய இறைவன் அருளாணையின் வண்ணம், பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 தடுத்தாட்கொண்ட புராணம். 70 - 74) குறிப்பு :இத்திருப்பதிகம், சிவபிரானை நோக்கி, `அடியேன் உனக்கு முன்பே ஆளாகி, இப்பொழுது நீ வந்து என்னை உனக்கு அடியான் என்று சொல்லியபொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது தகுமோ` என இரங்கி அருளிச்செய்தது.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.