ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
094 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
    வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
    கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
    பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
    யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மண் ஆகியும், விண் ஆகியும், மலையாகியும் வயிரமாகியும், மாணிக்கமாகியும், கண்ணாகியும், கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும், நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும், பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும், எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.

குறிப்புரை:

` கண்ணுக்கு, பெண்ணுக்கு, எண்ணுக்கு ` என்னும் நான்கனுருபுகள், ` அவட்குக் கொள்ளும் இவ்வணிகலம் ` என்பது போல ஏற்புடைப் பொருட்கண் வந்தன. கலை - நூல், கலைஞானம் - நூலறிவு. ` ஒடுக்கம் ` எனப் பொருள்தரும். ` லயம் ` என்னும் வடசொல், ` பிர ` என்னும் இடைச்சொல்லோடு கூடி, ` பிரளயம் ` எனவரும். தோற்ற ஒடுக்கங்கள் கால தத்துவத்திற்கு உட்பட்டு நிகழ்வன. சுத்தமாயா புவனங்கள் கால தத்துவத்திற்கு அப்பாற்பட்டவை ; ஆகவே, ` பிரளயத்துக்கு அப்பால் உள்ள அண்டம் ` என்றது, சுத்தமாயா புவனத்தை என்பது பெறப்பட்டது. அவை பலவாயினும், சுத்த மாயையின் விளைவாக நோக்குமிடத்து ஒன்றாதல் பற்றி, ` ஓர் அண்டம் ` என்றார். சுத்தமாயா தத்துவங்களும், புவனங்களும் கால தத்துவத்திற்கு அப்பாற்பட்டமை பற்றி, ` நித்தம் ` எனப்படும் என்பது, ` சுத்த தத் துவம் சிவன்றன் சுதந்திர வடிவமாகும் - நித்தம் என்றுரைப்பர் காலம் நீங்கிய நிலைமை யாலே ` என்பதனால் ( சிவஞானசித்தியார். சூ. 1-66) உணரப்படும். எண் - எண்ணுதல் ; ஆராய்தல் ; அஃது ஆராய்ச்சிக்குப் புலனாம் பொருள்மேல் நின்றது ; அதனை உயிர் அறிவின்கண் பதிவிப்பது எழுத்தோசை ( நாதம் ) ஆதலின் ` எண்ணுக்கு ஓர் எழுத்து ` என்று அருளினார். எழும் சுடர் - தோன்றி விளங்கும் ஒளி ; என்றது, சிவபிரானது தடத்த நிலையை. அந்நிலை படைப்புக் காலத்து விரிந்தும், ஒடுக்கக் காலத்துக் குவிந்தும் வருதல் பற்றி, ` எழுஞ்சுடர் ` எனப்பட்டது ; ` விரிந்தனை குவிந்தனை ` ( தி.2. ப.30. பா.3) எனத் திருஞானசம்பந்தரும், ` விரிந்தானைக் குவிந்தானை ` ( ப.86. பா.6) என சுவாமிகளும் அருளிச்செய்ததும் இது நோக்கி என்க. வருகின்ற திருத்தாண்டகங்களில், ` பரஞ்சுடராய் ` என்பது தவிர்த்துப் பிறவாறு வரும் சுடர்கள் யாவும் இந்நிலையையே குறிக்கும் என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव पृथ्वी व देवलोक स्वरूप हैं। वे पर्वत की साकार मूर्ति हैं। वे वज्र (रत्न) माणिक्य स्वरूप हैं। प्रभु चक्षु व चक्षु की ज्योति स्वरूप हैं। वे सभी पदार्थों के कला मर्मज्ञ हैं। कला के दिव्य रूप हैं। वे स्त्री भी हैं, स्त्री के भोग्य स्वरूप पुरुष भी हैं। प्रलय से परे ब्रह्माण्ड स्वरूप हैं। वे वर्णाक्षर व अंक स्वरूप हैं, प्रभु ज्योति स्वरूप हैं। प्रभु सर्वगुण सम्पन्न षाष्वत मूर्ति हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As earth,
heaven and mountain,
As diamond and ruby itself,
As eye and pupil of eye,
As Sastras and the Sastraic Wisdom itself,
As woman,
and man for the woman,
As the universe beyond Dissolution,
As Thought and as letters therefore,
As rising radiance,
our God abides for ever.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀡𑁆𑀡𑀸𑀓𑀺 𑀯𑀺𑀡𑁆𑀡𑀸𑀓𑀺 𑀫𑀮𑁃𑀬𑀼 𑀫𑀸𑀓𑀺
𑀯𑀬𑀺𑀭𑀫𑀼𑀫𑀸𑀬𑁆 𑀫𑀸𑀡𑀺𑀓𑁆𑀓𑀦𑁆 𑀢𑀸𑀷𑁂 𑀬𑀸𑀓𑀺𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀓𑀺𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀓𑁆𑀓𑁄𑀭𑁆 𑀫𑀡𑀺𑀬𑀼 𑀫𑀸𑀓𑀺𑀓𑁆
𑀓𑀮𑁃𑀬𑀸𑀓𑀺𑀓𑁆 𑀓𑀮𑁃𑀜𑀸𑀷𑀦𑁆 𑀢𑀸𑀷𑁂 𑀬𑀸𑀓𑀺𑀧𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀸𑀓𑀺𑀧𑁆 𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀼𑀓𑁆𑀓𑁄 𑀭𑀸𑀡𑀼 𑀫𑀸𑀓𑀺𑀧𑁆
𑀧𑀺𑀭𑀴𑀬𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀧𑁆𑀧𑀸𑀮𑁄 𑀭𑀡𑁆𑀝 𑀫𑀸𑀓𑀺
𑀏𑁆𑀡𑁆𑀡𑀸𑀓𑀺 𑀬𑁂𑁆𑀡𑁆𑀡𑀼𑀓𑁆𑀓𑁄 𑀭𑁂𑁆𑀵𑀼𑀢𑁆𑀢𑀼 𑀫𑀸𑀓𑀺
𑀬𑁂𑁆𑀵𑀼𑀜𑁆𑀘𑀼𑀝𑀭𑀸 𑀬𑁂𑁆𑀫𑁆𑀫𑀝𑀺𑀓𑀴𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মণ্ণাহি ৱিণ্ণাহি মলৈযু মাহি
ৱযিরমুমায্ মাণিক্কন্ দান়ে যাহিক্
কণ্ণাহিক্ কণ্ণুক্কোর্ মণিযু মাহিক্
কলৈযাহিক্ কলৈঞান়ন্ দান়ে যাহিপ্
পেণ্ণাহিপ্ পেণ্ণুক্কো রাণু মাহিপ্
পিরৰযত্তুক্ কপ্পালো রণ্ড মাহি
এণ্ণাহি যেণ্ণুক্কো রেৰ়ুত্তু মাহি
যেৰ়ুঞ্জুডরা যেম্মডিহৰ‍্ নিণ্ড্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
मण्णाहि विण्णाहि मलैयु माहि
वयिरमुमाय् माणिक्कन् दाऩे याहिक्
कण्णाहिक् कण्णुक्कोर् मणियु माहिक्
कलैयाहिक् कलैञाऩन् दाऩे याहिप्
पॆण्णाहिप् पॆण्णुक्को राणु माहिप्
पिरळयत्तुक् कप्पालो रण्ड माहि
ऎण्णाहि यॆण्णुक्को रॆऴुत्तु माहि
यॆऴुञ्जुडरा यॆम्मडिहळ् निण्ड्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಮಣ್ಣಾಹಿ ವಿಣ್ಣಾಹಿ ಮಲೈಯು ಮಾಹಿ
ವಯಿರಮುಮಾಯ್ ಮಾಣಿಕ್ಕನ್ ದಾನೇ ಯಾಹಿಕ್
ಕಣ್ಣಾಹಿಕ್ ಕಣ್ಣುಕ್ಕೋರ್ ಮಣಿಯು ಮಾಹಿಕ್
ಕಲೈಯಾಹಿಕ್ ಕಲೈಞಾನನ್ ದಾನೇ ಯಾಹಿಪ್
ಪೆಣ್ಣಾಹಿಪ್ ಪೆಣ್ಣುಕ್ಕೋ ರಾಣು ಮಾಹಿಪ್
ಪಿರಳಯತ್ತುಕ್ ಕಪ್ಪಾಲೋ ರಂಡ ಮಾಹಿ
ಎಣ್ಣಾಹಿ ಯೆಣ್ಣುಕ್ಕೋ ರೆೞುತ್ತು ಮಾಹಿ
ಯೆೞುಂಜುಡರಾ ಯೆಮ್ಮಡಿಹಳ್ ನಿಂಡ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
మణ్ణాహి విణ్ణాహి మలైయు మాహి
వయిరముమాయ్ మాణిక్కన్ దానే యాహిక్
కణ్ణాహిక్ కణ్ణుక్కోర్ మణియు మాహిక్
కలైయాహిక్ కలైఞానన్ దానే యాహిప్
పెణ్ణాహిప్ పెణ్ణుక్కో రాణు మాహిప్
పిరళయత్తుక్ కప్పాలో రండ మాహి
ఎణ్ణాహి యెణ్ణుక్కో రెళుత్తు మాహి
యెళుంజుడరా యెమ్మడిహళ్ నిండ్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මණ්ණාහි විණ්ණාහි මලෛයු මාහි
වයිරමුමාය් මාණික්කන් දානේ යාහික්
කණ්ණාහික් කණ්ණුක්කෝර් මණියු මාහික්
කලෛයාහික් කලෛඥානන් දානේ යාහිප්
පෙණ්ණාහිප් පෙණ්ණුක්කෝ රාණු මාහිප්
පිරළයත්තුක් කප්පාලෝ රණ්ඩ මාහි
එණ්ණාහි යෙණ්ණුක්කෝ රෙළුත්තු මාහි
යෙළුඥ්ජුඩරා යෙම්මඩිහළ් නින්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
മണ്ണാകി വിണ്ണാകി മലൈയു മാകി
വയിരമുമായ് മാണിക്കന്‍ താനേ യാകിക്
കണ്ണാകിക് കണ്ണുക്കോര്‍ മണിയു മാകിക്
കലൈയാകിക് കലൈഞാനന്‍ താനേ യാകിപ്
പെണ്ണാകിപ് പെണ്ണുക്കോ രാണു മാകിപ്
പിരളയത്തുക് കപ്പാലോ രണ്ട മാകി
എണ്ണാകി യെണ്ണുക്കോ രെഴുത്തു മാകി
യെഴുഞ്ചുടരാ യെമ്മടികള്‍ നിന്‍റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
มะณณากิ วิณณากิ มะลายยุ มากิ
วะยิระมุมาย มาณิกกะน ถาเณ ยากิก
กะณณากิก กะณณุกโกร มะณิยุ มากิก
กะลายยากิก กะลายญาณะน ถาเณ ยากิป
เปะณณากิป เปะณณุกโก ราณุ มากิป
ปิระละยะถถุก กะปปาโล ระณดะ มากิ
เอะณณากิ เยะณณุกโก เระฬุถถุ มากิ
เยะฬุญจุดะรา เยะมมะดิกะล นิณระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မန္နာကိ ဝိန္နာကိ မလဲယု မာကိ
ဝယိရမုမာယ္ မာနိက္ကန္ ထာေန ယာကိက္
ကန္နာကိက္ ကန္နုက္ေကာရ္ မနိယု မာကိက္
ကလဲယာကိက္ ကလဲညာနန္ ထာေန ယာကိပ္
ေပ့န္နာကိပ္ ေပ့န္နုက္ေကာ ရာနု မာကိပ္
ပိရလယထ္ထုက္ ကပ္ပာေလာ ရန္တ မာကိ
ေအ့န္နာကိ ေယ့န္နုက္ေကာ ေရ့လုထ္ထု မာကိ
ေယ့လုည္စုတရာ ေယ့မ္မတိကလ္ နိန္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
マニ・ナーキ ヴィニ・ナーキ マリイユ マーキ
ヴァヤラムマーヤ・ マーニク・カニ・ ターネー ヤーキク・
カニ・ナーキク・ カニ・ヌク・コーリ・ マニユ マーキク・
カリイヤーキク・ カリイニャーナニ・ ターネー ヤーキピ・
ペニ・ナーキピ・ ペニ・ヌク・コー ラーヌ マーキピ・
ピララヤタ・トゥク・ カピ・パーロー ラニ・タ マーキ
エニ・ナーキ イェニ・ヌク・コー レルタ・トゥ マーキ
イェルニ・チュタラー イェミ・マティカリ・ ニニ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
mannahi finnahi malaiyu mahi
fayiramumay maniggan dane yahig
gannahig gannuggor maniyu mahig
galaiyahig galainanan dane yahib
bennahib bennuggo ranu mahib
biralayaddug gabbalo randa mahi
ennahi yennuggo reluddu mahi
yelundudara yemmadihal nindra fare
Open the Pinyin Section in a New Tab
مَنّاحِ وِنّاحِ مَلَيْیُ ماحِ
وَیِرَمُمایْ مانِكَّنْ دانيَۤ یاحِكْ
كَنّاحِكْ كَنُّكُّوۤرْ مَنِیُ ماحِكْ
كَلَيْیاحِكْ كَلَيْنعانَنْ دانيَۤ یاحِبْ
بيَنّاحِبْ بيَنُّكُّوۤ رانُ ماحِبْ
بِرَضَیَتُّكْ كَبّالُوۤ رَنْدَ ماحِ
يَنّاحِ یيَنُّكُّوۤ ريَظُتُّ ماحِ
یيَظُنعْجُدَرا یيَمَّدِحَضْ نِنْدْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɳɳɑ:çɪ· ʋɪ˞ɳɳɑ:çɪ· mʌlʌjɪ̯ɨ mɑ:çɪ
ʋʌɪ̯ɪɾʌmʉ̩mɑ:ɪ̯ mɑ˞:ɳʼɪkkʌn̺ t̪ɑ:n̺e· ɪ̯ɑ:çɪk
kʌ˞ɳɳɑ:çɪk kʌ˞ɳɳɨkko:r mʌ˞ɳʼɪɪ̯ɨ mɑ:çɪk
kʌlʌjɪ̯ɑ:çɪk kʌlʌɪ̯ɲɑ:n̺ʌn̺ t̪ɑ:n̺e· ɪ̯ɑ:çɪp
pɛ̝˞ɳɳɑ:çɪp pɛ̝˞ɳɳɨkko· rɑ˞:ɳʼɨ mɑ:çɪp
pɪɾʌ˞ɭʼʌɪ̯ʌt̪t̪ɨk kʌppɑ:lo· rʌ˞ɳɖə mɑ:çɪ
ʲɛ̝˞ɳɳɑ:çɪ· ɪ̯ɛ̝˞ɳɳɨkko· rɛ̝˞ɻɨt̪t̪ɨ mɑ:çɪ
ɪ̯ɛ̝˞ɻɨɲʤɨ˞ɽʌɾɑ: ɪ̯ɛ̝mmʌ˞ɽɪxʌ˞ɭ n̺ɪn̺d̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
maṇṇāki viṇṇāki malaiyu māki
vayiramumāy māṇikkan tāṉē yākik
kaṇṇākik kaṇṇukkōr maṇiyu mākik
kalaiyākik kalaiñāṉan tāṉē yākip
peṇṇākip peṇṇukkō rāṇu mākip
piraḷayattuk kappālō raṇṭa māki
eṇṇāki yeṇṇukkō reḻuttu māki
yeḻuñcuṭarā yemmaṭikaḷ niṉṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
мaннаакы выннаакы мaлaыё маакы
вaйырaмюмаай мааныккан таанэa яaкык
каннаакык каннюккоор мaныё маакык
калaыяaкык калaыгнaaнaн таанэa яaкып
пэннаакып пэннюккоо рааню маакып
пырaлaяттюк каппаалоо рaнтa маакы
эннаакы еннюккоо рэлзюттю маакы
елзюгнсютaраа еммaтыкал нынрa ваарэa
Open the Russian Section in a New Tab
ma'n'nahki wi'n'nahki maläju mahki
waji'ramumahj mah'nikka:n thahneh jahkik
ka'n'nahkik ka'n'nukkoh'r ma'niju mahkik
kaläjahkik kalägnahna:n thahneh jahkip
pe'n'nahkip pe'n'nukkoh 'rah'nu mahkip
pi'ra'lajaththuk kappahloh 'ra'nda mahki
e'n'nahki je'n'nukkoh 'reshuththu mahki
jeshungzuda'rah jemmadika'l :ninra wahreh
Open the German Section in a New Tab
manhnhaaki vinhnhaaki malâiyò maaki
vayeiramòmaaiy maanhikkan thaanèè yaakik
kanhnhaakik kanhnhòkkoor manhiyò maakik
kalâiyaakik kalâignaanan thaanèè yaakip
pènhnhaakip pènhnhòkkoo raanhò maakip
piralhayaththòk kappaaloo ranhda maaki
ènhnhaaki yènhnhòkkoo rèlzòththò maaki
yèlzògnçòdaraa yèmmadikalh ninrha vaarhèè
mainhnhaaci viinhnhaaci malaiyu maaci
vayiiramumaayi maanhiiccain thaanee iyaaciic
cainhnhaaciic cainhṇhuiccoor manhiyu maaciic
calaiiyaaciic calaignaanain thaanee iyaacip
peinhnhaacip peinhṇhuiccoo raaṇhu maacip
piralhayaiththuic cappaaloo rainhta maaci
einhnhaaci yieinhṇhuiccoo relzuiththu maaci
yielzuignsutaraa yiemmaticalh ninrha varhee
ma'n'naaki vi'n'naaki malaiyu maaki
vayiramumaay maa'nikka:n thaanae yaakik
ka'n'naakik ka'n'nukkoar ma'niyu maakik
kalaiyaakik kalaignaana:n thaanae yaakip
pe'n'naakip pe'n'nukkoa raa'nu maakip
pira'layaththuk kappaaloa ra'nda maaki
e'n'naaki ye'n'nukkoa rezhuththu maaki
yezhunjsudaraa yemmadika'l :nin'ra vaa'rae
Open the English Section in a New Tab
মণ্নাকি ৱিণ্নাকি মলৈয়ু মাকি
ৱয়িৰমুমায়্ মাণাক্কণ্ তানে য়াকিক্
কণ্নাকিক্ কণ্ণুক্কোৰ্ মণায়ু মাকিক্
কলৈয়াকিক্ কলৈঞানণ্ তানে য়াকিপ্
পেণ্নাকিপ্ পেণ্ণুক্কো ৰাণু মাকিপ্
পিৰলয়ত্তুক্ কপ্পালো ৰণ্ত মাকি
এণ্নাকি য়েণ্ণুক্কো ৰেলুত্তু মাকি
য়েলুঞ্চুতৰা য়েম্মটিকল্ ণিন্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.