ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
094 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

இத்திருப்பதிகம் முதல் 310 ஆம் திருப்பதிகம் முடிய உள்ள வரலாற்றினை , 283 ஆம் திருப்பதிக வரலாற்றிற் காண்க . குறிப்பு : இத்திருப்பதிகத்தில் உள்ள திருத்தாண்டகங்கள் அனைத்தும் , இறைவன் உலகமாய் நின்ற நிலையினை வகுத்துக் கூறுதலின் , இத்திருத்தாண்டகத் திருப்பதிகம் , ` நின்ற திருத்தாண்டகம் ` எனப் பெயர்பெற்றது . ` நின்ற திருத்தாண்டகம் ` என்பதன் சொல்லியல்பு . மேலே , ` புக்க திருத்தாண்டகம் ` ( ப .2.) என்னுமிடத்திற் குறித்தாம் . தன்னியல்பில் ஒருவனாய் நிற்கின்ற இறைவன் , உலகை நோக்கி நிற்கும் பொதுவியல்பில் , ` தானும் தனது சத்தியும் ` என இருதிறப்பட்டு உலகெலாமாகி நிற்குங்கால் , அவ்வுலகத்தொடு கலப்பினால் அவையேயாய் , பொருட்டன்மையால் அவையாகாது தானேயாய் , யாண்டும் அவைகளோடு உடனாய் இயங்கிவருதலால் அவையும் தானுமாய் நிற்பன் . இவை முறையே . ` ஒன்றாய் , வேறாய் , உடனாய் நிற்றல் ` எனப்படும் . அஃதாவது இறைவன் பொருளால் உலகத்தின் வேறேயாயினும் உடலில் உயிர்போல அவற்றொடு சிறிதும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கும் கலப்பினால் உலகமே யாகியும் , அங்ஙனம் சிறிதும் வேற்றுமையின்றி ஒன்றாய்க் கலந்து நிற்பினும் பொருளால் தான் அவ்வுலகத்தின் வேறேயாகியும் , இயங்குந்தன்மையுடைய அவ்வுலகத்தை இயக்குதலோடு அமையாது இயங்கியும் வருதலின் உடனாகியும் நிற்றலாம் . இங்ஙனம் ஒன்றும் வேறும் உடனும் என்னும் மூன்றற்கும் பொதுவாய் நிற்கும் நிலையே . ` அத்துவித நிலை ` எனப்படுகின்றது . அத்துவிதநிலை மூன்றனுள் ஒன்றாதல் உலகத்தின் இயக்கத்திற்கு முதலாவதாகலின் , அதனையே ஆசிரியன்மார் பலவாற்றாற் பலவிடத்தும் சிறந்தெடுத்தோதுவர் . அவற்றுள் ஒன்றாய் நிற்கும் நிலையை விளக்குதலையே நுதலி எழுந்தது இத்திருப்பதிகம் . வேதத்துள் திருவுருத்திரம் இவ்வாறு அமைந்துள்ளது .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.