ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
016 திருஇடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
    பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
    விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
    பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
    இடைமருது மேவிய ஈச னாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இடைமருது மேவிய ஈசனார் உயிர்களை விட்டு நீங்காத பத்து இயற்கைப் பண்புகளாகவும், உயிர்களுக்கு மலச் சார்பினால் வரும் பதினொரு செயற்கைப் பண்புகளாகவும், பரம் பொருளுக்கு என்று ஒருகால் தொகுத்துச் சொல்லப்படும் நான்கு பண்புகளாகவும், பிறிதொருகால் சொல்லப்படும் ஆறு பண்புகளாகவும் உள்ளனவற்றையும் மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்து உணரப்படும் பொதுவான ஐம்பண்புகளையும் ஐவகை சமித்துக்களையும், திருவைந்தெழுத்தையும் உயிர்கள் சென்று சேரக்கூடிய வழிகள் ஐந்தையும் குறிப்பிட்டு ஞானப்பிரகாசமாகிய ஒளியை உடைய அடியவர்களின் உள்ளத்தாமரையில் உலவிவருபவராவார்.

குறிப்புரை:

` உயிர்கட்குப் பிரியாத (நீங்காத) குணம் என்றது, அதன் இயற்கைத் தன்மையை. அத்தன்மை பத்தாவன இவையென்பது அஞ்ஞான்று வழக்கின்கண் இருந்ததாகல் வேண்டும். ஆயினும் இக்காலத்து அறியப்படாமையால் பின்வருமாறு கூறலாம். இறைவனது எண்குணங்கட்கு மறுதலையான தன்வயமின்மை, சார்ந்ததன் வண்ணமாதல், அறிவிக்கவே அறிதல், ஒவ்வொன்றையே உணர்தல், படிமுறையான் உணர்தல், பெரிதும் சிறிதுமின்றி இடைநிகர்த்ததாதல், இன்னாதது வெறுத்தல், இனியது உவத்தல் என்னும் எட்டும், தனித்துநில்லாமை, தனித்துணரப்படாமை என்னும் இரண்டுமாம். உயிர்கட்குப் பிரிவுடைய (நீங்கத்தக்க) குணம் என்றது மலச்சார்பினால் வரும் செயற்கைத் தன்மையை. அவை பதினொன்றாவன, `பேதைமை, புல்லறிவாண்மை, அமைதி, வெகுளி, மடி, இன்ப நுகர்ச்சி, துன்பநுகர்ச்சி, நுகர்ச்சியின்மை, நன்முயற்சி, தீமுயற்சி, ஊக்கமின்மை என்பன. பேதைமையை, `கேவலநிலை` என்றும், புல்லறிவாண்மையை, `சகலநிலை` என்றும், அமைதி முதலிய மூன்றை, `சத்துவம், இராசதம், தாமதம்` என்றும் மெய்ந் நூல்கள் கூறும். சத்துவம் முதலிய முக்குணங்கள் காரணமாக, இன்ப நுகர்ச்சி முதலிய மூன்றும் உளவாகும். பின்னர் அவற்றால், நன்முயற்சி முதலிய மூன்றும் உளவாகும். மலச்சார்பு நீங்கிய விடத்து இவை அனைத்தும் நீங்குமென்க. பிரியாத குணம், பிரிவுடைய குணம்` என்பவற்றை, முன்னர், `உயிர்கட்கு` என விதந்தருளிச் செய்தமையால், பின்னர், ``விரியாத குணம்`` என்றருளியது, இறைவர்க்கென்பது பெறப்படும். விரியாத குணம் - தொகுத்துக் கொள்ளப்படும் குணம். அவை நான்காவன, `உண்மை, அறிவு, இன்பம் (சத்து, சித்து, ஆனந்தம்), அருள்` என்பன. பிற நெறிகள் அருள் ஒழிந்த மூன்றையே கூறுமாயினும், சிவநெறியுள் `அருள்` என்பதும் இன்றியமையாததென்க. `அருள்உண்டாம் ஈசற்கு அது சத்தி அன்றே`` (சிவஞானபோதம். சூ.5. அதி. 2) என்றதும் நோக்குக. `ஒருகால்` என்றமையால்; `மற்றொரு கால்` என்பது வருவிக்கப்படும். `விரிவிலா என்றது. `விரியாத` என மேற்போந்ததனைச் சுட்டும் சுட்டளவாய் நின்றது. எனவே, அவரது குணங்களைத் தொகுத்துக் கூறுமிடத்து நான்காகக் கூறுதல் ஒருமுறை எனவும், அவைகளை ஆராயுமிடத்து ஆறாகக் கூறுதல் மற்றொரு முறை எனவும் அருளியவாறாம். அறுகுணங்களாவன `முற்றுணர்வு, வரம்பிலின்பம், இயற்கையுணர்வு. தன்வயம், முடிவிலாற்றல், பேரருள்` என்பன. இவை முறையே, `சருவஞ்ஞதை, திருத்தி, அநாதிபோதம், சுவதந்திரதை, அனந்தசத்தி, அலுத்த சத்தி, எனவும் கூறப்படும். இவற்றோடு `தூய உடம்பு அல்லது விசுத்த தேகம், இயல்பாகவே பாசமின்மை அல்லது நிராமயம்` என்னும் இரண்டுங்கூட்டி எட்டுக்குணம்` என்றலே விரித்துக் கூறலாகலின், `நான்கு` என்றும் `ஆறு` என்றும் கூறுவன தொகுத்துக் கூறலாமாறு உணர்க. தெரிவாய குணம் - மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்துணரப் படுவனவாய குணம். அவை அஞ்சாவன `ஓசை, ஒளி, ஊறு, சுவை நாற்றம்` (சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம்) என்பன. ஐம்பெரும் பூதங்களே உலகிற்கு முதலென்பது யாவர்க்கும் எளிதின் அறியப் படுவதாகலின், அவற்றின் குணங்களாகிய இவற்றை மட்டுமே அருளிச் செய்தார். சமிதை - ஓம விறகு; அதனை ஒன்பது என்றும் பிறவாறுங் கூறுபவாயினும், `ஆல், அரசு, அத்தி, மா, வன்னி, என்பன சிறப்புடையனவாதல் நோக்கி, `அஞ்சு` என்றருளினார். எழுத்தை, `பதம்` என்றருளினார். ``வகரக்கிளவி`` (தொல்.எழுத்து. 81.) என்றாற்போல. அஞ்செழுத்து - திருவைந்தெழுத்து மந்திரம், `அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி`` (தி.7. ப.83. பா.1.) என்றருளியதுங் காண்க. கதி ஐந்தாவன. `மக்கள்கதி. விலங்கு கதி, நரக கதி, தேவ கதி` என்னும் நான்கனோடு, `பரகதி` என்னும் வீட்டு நிலையுங்கூடியன. `இவைகளை எல்லாம் வேதாகமங்களில் சொல்லி யருளினார்` என்க. எரி - சுடர் வடிவம். `எரியாய` என்பதன் ஈற்றில் உள்ள அகரம் விரித்தல். ``தாமரை`` என்றது. அன்பர்களது நெஞ்சத் தாமரையை, உள்ளமாகிய தாமரை மலரின்மேல் இறைவனைச் சுடர் உருவில் தியானிக்கும் தியானமுறையை, `தகர வித்தை` என. உபநிடதங்கள் சிறந்தெடுத்துக்கூறும் (அத யதிதமஸ்மிந் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம்... சாந்தோக்யம், பத்மகோச ப்ரதீகாசம் தஸ்யமத்யே வஹ்நிசிகா, தஸ்யாஸ் ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித - மகாநாராயணோபநிடதம்) திருவள்ளுவ நாயனாரும் இறைவனை ``மலர்மிசையேகினான்`` (குறள். 3.) என்று அருளிச் செய்தமை காண்க. `எரியையே தாமரை மலராகிய இருக்கையாக உருவகித்தருளினார்` என்றலுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव आत्म तत्व चैबीस तथा प्राण स्वरूप हैं। षुद्ध तत्व, विद्या तत्व से छŸाीस स्वरूप हैं। धर्म, अर्थ, काम, मोक्ष ये चार तत्व स्वरूप हैं। वे सम्पत्ति, सुख, दुःख, रोग, जटा, मृत्यु, ये छः गुण स्वरूप हैं। वे ब्रह्म ज्ञान, श्रवण ज्ञान, षिक्षा ज्ञान, अध्ययन, दीक्षा ज्ञान, चिन्तन ये पंच तŸव स्वरूप हैं। समित से अर्क, ष्वान पुष्प पीपल पŸाा, वह्नि, कुष ये पंच स्वरूप हैं। देव सुख, सन्तान सुख, जानवर गुण, नरक व मोक्ष ये पंच तŸव स्वरूप हैं। वे ज्योतिर्मय हृदय कमल में विराजनेवाले हैं। वे प्रभु इडैमरुदूर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Five plus five are the traits inseparable from souls;
Truly speaking,
ten plus one are the separable traits;
They say that four are numbered as His traits;
It is also said that they are six in number;
The pentad of well-known properties,
the pentad Of Samita,
the pentad of Padaa As well as Gati were graced by Him;
It is He who abides in the blazing lotus.
It is He who presides over Idaimarutu.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀭𑀺𑀬𑀸𑀢 𑀓𑀼𑀡𑀫𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑀜𑁆𑀘𑁄 𑀝𑀜𑁆𑀘𑀸𑀬𑁆𑀧𑁆
𑀧𑀺𑀭𑀺𑀯𑀼𑀝𑁃𑀬 𑀓𑀼𑀡𑀫𑁆𑀧𑁂𑀘𑀺𑀶𑁆 𑀧𑀢𑁆𑀢𑁄 𑀝𑁄𑁆𑀷𑁆𑀶𑀸𑀬𑁆
𑀯𑀺𑀭𑀺𑀬𑀸𑀢 𑀓𑀼𑀡𑀫𑁄𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑁆 𑀦𑀸𑀷𑁆𑀓𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀧𑀭𑁆
𑀯𑀺𑀭𑀺𑀯𑀺𑀮𑀸𑀓𑁆 𑀓𑀼𑀡𑀦𑀸𑀝𑁆𑀝𑀢𑁆 𑀢𑀸𑀶𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀧𑀭𑁆
𑀢𑁂𑁆𑀭𑀺𑀯𑀸𑀬 𑀓𑀼𑀡𑀫𑀜𑁆𑀘𑀼𑀜𑁆 𑀘𑀫𑀺𑀢𑁃 𑀬𑀜𑁆𑀘𑀼𑀫𑁆
𑀧𑀢𑀫𑀜𑁆𑀘𑀼𑀗𑁆 𑀓𑀢𑀺𑀬𑀜𑁆𑀘𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀧𑁆𑀧𑀺 𑀷𑀸𑀭𑀼𑀫𑁆
𑀏𑁆𑀭𑀺𑀬𑀸𑀬 𑀢𑀸𑀫𑀭𑁃𑀫𑁂 𑀮𑀺𑀬𑀗𑁆𑀓𑀺 𑀷𑀸𑀭𑀼𑀫𑁆
𑀇𑀝𑁃𑀫𑀭𑀼𑀢𑀼 𑀫𑁂𑀯𑀺𑀬 𑀈𑀘 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পিরিযাদ কুণমুযির্গট্ কঞ্জো টঞ্জায্প্
পিরিৱুডৈয কুণম্বেসির়্‌ পত্তো টোণ্ড্রায্
ৱিরিযাদ কুণমোরুহাল্ নান়্‌গে যেন়্‌বর্
ৱিরিৱিলাক্ কুণনাট্টত্ তার়ে যেন়্‌বর্
তেরিৱায কুণমঞ্জুঞ্ সমিদৈ যঞ্জুম্
পদমঞ্জুঙ্ কদিযঞ্জুঞ্ সেপ্পি ন়ারুম্
এরিযায তামরৈমে লিযঙ্গি ন়ারুম্
ইডৈমরুদু মেৱিয ঈস ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே


Open the Thamizhi Section in a New Tab
பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே

Open the Reformed Script Section in a New Tab
पिरियाद कुणमुयिर्गट् कञ्जो टञ्जाय्प्
पिरिवुडैय कुणम्बेसिऱ् पत्तो टॊण्ड्राय्
विरियाद कुणमॊरुहाल् नाऩ्गे यॆऩ्बर्
विरिविलाक् कुणनाट्टत् ताऱे यॆऩ्बर्
तॆरिवाय कुणमञ्जुञ् समिदै यञ्जुम्
पदमञ्जुङ् कदियञ्जुञ् सॆप्पि ऩारुम्
ऎरियाय तामरैमे लियङ्गि ऩारुम्
इडैमरुदु मेविय ईस ऩारे

Open the Devanagari Section in a New Tab
ಪಿರಿಯಾದ ಕುಣಮುಯಿರ್ಗಟ್ ಕಂಜೋ ಟಂಜಾಯ್ಪ್
ಪಿರಿವುಡೈಯ ಕುಣಂಬೇಸಿಱ್ ಪತ್ತೋ ಟೊಂಡ್ರಾಯ್
ವಿರಿಯಾದ ಕುಣಮೊರುಹಾಲ್ ನಾನ್ಗೇ ಯೆನ್ಬರ್
ವಿರಿವಿಲಾಕ್ ಕುಣನಾಟ್ಟತ್ ತಾಱೇ ಯೆನ್ಬರ್
ತೆರಿವಾಯ ಕುಣಮಂಜುಞ್ ಸಮಿದೈ ಯಂಜುಂ
ಪದಮಂಜುಙ್ ಕದಿಯಂಜುಞ್ ಸೆಪ್ಪಿ ನಾರುಂ
ಎರಿಯಾಯ ತಾಮರೈಮೇ ಲಿಯಂಗಿ ನಾರುಂ
ಇಡೈಮರುದು ಮೇವಿಯ ಈಸ ನಾರೇ

Open the Kannada Section in a New Tab
పిరియాద కుణముయిర్గట్ కంజో టంజాయ్ప్
పిరివుడైయ కుణంబేసిఱ్ పత్తో టొండ్రాయ్
విరియాద కుణమొరుహాల్ నాన్గే యెన్బర్
విరివిలాక్ కుణనాట్టత్ తాఱే యెన్బర్
తెరివాయ కుణమంజుఞ్ సమిదై యంజుం
పదమంజుఙ్ కదియంజుఞ్ సెప్పి నారుం
ఎరియాయ తామరైమే లియంగి నారుం
ఇడైమరుదు మేవియ ఈస నారే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පිරියාද කුණමුයිර්හට් කඥ්ජෝ ටඥ්ජාය්ප්
පිරිවුඩෛය කුණම්බේසිර් පත්තෝ ටොන්‍රාය්
විරියාද කුණමොරුහාල් නාන්හේ යෙන්බර්
විරිවිලාක් කුණනාට්ටත් තාරේ යෙන්බර්
තෙරිවාය කුණමඥ්ජුඥ් සමිදෛ යඥ්ජුම්
පදමඥ්ජුඞ් කදියඥ්ජුඥ් සෙප්පි නාරුම්
එරියාය තාමරෛමේ ලියංගි නාරුම්
ඉඩෛමරුදු මේවිය ඊස නාරේ


Open the Sinhala Section in a New Tab
പിരിയാത കുണമുയിര്‍കട് കഞ്ചോ ടഞ്ചായ്പ്
പിരിവുടൈയ കുണംപേചിറ് പത്തോ ടൊന്‍റായ്
വിരിയാത കുണമൊരുകാല്‍ നാന്‍കേ യെന്‍പര്‍
വിരിവിലാക് കുണനാട്ടത് താറേ യെന്‍പര്‍
തെരിവായ കുണമഞ്ചുഞ് ചമിതൈ യഞ്ചും
പതമഞ്ചുങ് കതിയഞ്ചുഞ് ചെപ്പി നാരും
എരിയായ താമരൈമേ ലിയങ്കി നാരും
ഇടൈമരുതു മേവിയ ഈച നാരേ

Open the Malayalam Section in a New Tab
ปิริยาถะ กุณะมุยิรกะด กะญโจ ดะญจายป
ปิริวุดายยะ กุณะมเปจิร ปะถโถ โดะณราย
วิริยาถะ กุณะโมะรุกาล นาณเก เยะณปะร
วิริวิลาก กุณะนาดดะถ ถาเร เยะณปะร
เถะริวายะ กุณะมะญจุญ จะมิถาย ยะญจุม
ปะถะมะญจุง กะถิยะญจุญ เจะปปิ ณารุม
เอะริยายะ ถามะรายเม ลิยะงกิ ณารุม
อิดายมะรุถุ เมวิยะ อีจะ ณาเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိရိယာထ ကုနမုယိရ္ကတ္ ကည္ေစာ တည္စာယ္ပ္
ပိရိဝုတဲယ ကုနမ္ေပစိရ္ ပထ္ေထာ ေတာ့န္ရာယ္
ဝိရိယာထ ကုနေမာ့ရုကာလ္ နာန္ေက ေယ့န္ပရ္
ဝိရိဝိလာက္ ကုနနာတ္တထ္ ထာေရ ေယ့န္ပရ္
ေထ့ရိဝာယ ကုနမည္စုည္ စမိထဲ ယည္စုမ္
ပထမည္စုင္ ကထိယည္စုည္ ေစ့ပ္ပိ နာရုမ္
ေအ့ရိယာယ ထာမရဲေမ လိယင္ကိ နာရုမ္
အိတဲမရုထု ေမဝိယ အီစ နာေရ


Open the Burmese Section in a New Tab
ピリヤータ クナムヤリ・カタ・ カニ・チョー タニ・チャヤ・ピ・
ピリヴタイヤ クナミ・ペーチリ・ パタ・トー トニ・ラーヤ・
ヴィリヤータ クナモルカーリ・ ナーニ・ケー イェニ・パリ・
ヴィリヴィラーク・ クナナータ・タタ・ ターレー イェニ・パリ・
テリヴァーヤ クナマニ・チュニ・ サミタイ ヤニ・チュミ・
パタマニ・チュニ・ カティヤニ・チュニ・ セピ・ピ ナールミ・
エリヤーヤ ターマリイメー リヤニ・キ ナールミ・
イタイマルトゥ メーヴィヤ イーサ ナーレー

Open the Japanese Section in a New Tab
biriyada gunamuyirgad gando dandayb
birifudaiya gunaMbesir baddo dondray
firiyada gunamoruhal nange yenbar
firifilag gunanaddad dare yenbar
derifaya gunamandun samidai yanduM
badamandung gadiyandun sebbi naruM
eriyaya damaraime liyanggi naruM
idaimarudu mefiya isa nare

Open the Pinyin Section in a New Tab
بِرِیادَ كُنَمُیِرْغَتْ كَنعْجُوۤ تَنعْجایْبْ
بِرِوُدَيْیَ كُنَنبيَۤسِرْ بَتُّوۤ تُونْدْرایْ
وِرِیادَ كُنَمُورُحالْ نانْغيَۤ یيَنْبَرْ
وِرِوِلاكْ كُنَناتَّتْ تاريَۤ یيَنْبَرْ
تيَرِوَایَ كُنَمَنعْجُنعْ سَمِدَيْ یَنعْجُن
بَدَمَنعْجُنغْ كَدِیَنعْجُنعْ سيَبِّ نارُن
يَرِیایَ تامَرَيْميَۤ لِیَنغْغِ نارُن
اِدَيْمَرُدُ ميَۤوِیَ اِيسَ ناريَۤ



Open the Arabic Section in a New Tab
pɪɾɪɪ̯ɑ:ðə kʊ˞ɳʼʌmʉ̩ɪ̯ɪrɣʌ˞ʈ kʌɲʤo· ʈʌɲʤɑ:ɪ̯β
pɪɾɪʋʉ̩˞ɽʌjɪ̯ə kʊ˞ɳʼʌmbe:sɪr pʌt̪t̪o· ʈo̞n̺d̺ʳɑ:ɪ̯
ʋɪɾɪɪ̯ɑ:ðə kʊ˞ɳʼʌmo̞ɾɨxɑ:l n̺ɑ:n̺ge· ɪ̯ɛ̝n̺bʌr
ʋɪɾɪʋɪlɑ:k kʊ˞ɳʼʌn̺ɑ˞:ʈʈʌt̪ t̪ɑ:ɾe· ɪ̯ɛ̝n̺bʌr
t̪ɛ̝ɾɪʋɑ:ɪ̯ə kʊ˞ɳʼʌmʌɲʤɨɲ sʌmɪðʌɪ̯ ɪ̯ʌɲʤɨm
pʌðʌmʌɲʤɨŋ kʌðɪɪ̯ʌɲʤɨɲ sɛ̝ppɪ· n̺ɑ:ɾɨm
ʲɛ̝ɾɪɪ̯ɑ:ɪ̯ə t̪ɑ:mʌɾʌɪ̯me· lɪɪ̯ʌŋʲgʲɪ· n̺ɑ:ɾɨm
ʲɪ˞ɽʌɪ̯mʌɾɨðɨ me:ʋɪɪ̯ə ʲi:sə n̺ɑ:ɾe·

Open the IPA Section in a New Tab
piriyāta kuṇamuyirkaṭ kañcō ṭañcāyp
pirivuṭaiya kuṇampēciṟ pattō ṭoṉṟāy
viriyāta kuṇamorukāl nāṉkē yeṉpar
virivilāk kuṇanāṭṭat tāṟē yeṉpar
terivāya kuṇamañcuñ camitai yañcum
patamañcuṅ katiyañcuñ ceppi ṉārum
eriyāya tāmaraimē liyaṅki ṉārum
iṭaimarutu mēviya īca ṉārē

Open the Diacritic Section in a New Tab
пырыяaтa кюнaмюйыркат кагнсоо тaгнсaaйп
пырывютaыя кюнaмпэaсыт пaттоо тонраай
вырыяaтa кюнaморюкaл наанкэa енпaр
вырывылаак кюнaнааттaт таарэa енпaр
тэрываая кюнaмaгнсюгн сaмытaы ягнсюм
пaтaмaгнсюнг катыягнсюгн сэппы наарюм
эрыяaя таамaрaымэa лыянгкы наарюм
ытaымaрютю мэaвыя исa наарэa

Open the Russian Section in a New Tab
pi'rijahtha ku'namuji'rkad kangzoh dangzahjp
pi'riwudäja ku'nampehzir paththoh donrahj
wi'rijahtha ku'namo'rukahl :nahnkeh jenpa'r
wi'riwilahk ku'na:nahddath thahreh jenpa'r
the'riwahja ku'namangzung zamithä jangzum
pathamangzung kathijangzung zeppi nah'rum
e'rijahja thahma'rämeh lijangki nah'rum
idäma'ruthu mehwija ihza nah'reh

Open the German Section in a New Tab
piriyaatha kònhamòyeirkat kagnçoo dagnçhaiyp
pirivòtâiya kònhampèèçirh paththoo donrhaaiy
viriyaatha kònhamoròkaal naankèè yènpar
virivilaak kònhanaatdath thaarhèè yènpar
thèrivaaya kònhamagnçògn çamithâi yagnçòm
pathamagnçòng kathiyagnçògn çèppi naaròm
èriyaaya thaamarâimèè liyangki naaròm
itâimaròthò mèèviya iiça naarèè
piriiyaatha cunhamuyiircait caigncioo taignsaayip
pirivutaiya cunhampeeceirh paiththoo tonrhaayi
viriiyaatha cunhamorucaal naankee yienpar
virivilaaic cunhanaaittaith thaarhee yienpar
therivaya cunhamaignsuign ceamithai yaignsum
pathamaignsung cathiyaignsuign ceppi naarum
eriiyaaya thaamaraimee liyangci naarum
itaimaruthu meeviya iicea naaree
piriyaatha ku'namuyirkad kanjsoa danjsaayp
pirivudaiya ku'nampaesi'r paththoa don'raay
viriyaatha ku'namorukaal :naankae yenpar
virivilaak ku'na:naaddath thaa'rae yenpar
therivaaya ku'namanjsunj samithai yanjsum
pathamanjsung kathiyanjsunj seppi naarum
eriyaaya thaamaraimae liyangki naarum
idaimaruthu maeviya eesa naarae

Open the English Section in a New Tab
পিৰিয়াত কুণমুয়িৰ্কইট কঞ্চো তঞ্চায়্প্
পিৰিৱুটৈয় কুণম্পেচিৰ্ পত্তো টোন্ৰায়্
ৱিৰিয়াত কুণমোৰুকাল্ ণান্কে য়েন্পৰ্
ৱিৰিৱিলাক্ কুণণাইটতত্ তাৰে য়েন্পৰ্
তেৰিৱায় কুণমঞ্চুঞ্ চমিতৈ য়ঞ্চুম্
পতমঞ্চুঙ কতিয়ঞ্চুঞ্ চেপ্পি নাৰুম্
এৰিয়ায় তামৰৈমে লিয়ঙকি নাৰুম্
ইটৈমৰুতু মেৱিয় পীচ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.