ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு :

திருமுதுகுன்றம் பணிந்து தில்லைத்திருநகர்க் குடதிசை மணிவாயிற்புறம் உற்றார் திருநாவுக்கரசர் எதிர்கொண்ட அடியா ரொடும் சென்றார். நஞ்சுண்ட சுவாமிகள் நடமாடும் பொன் மன்றினைக்கண்ணெதிர் கண்டார்.சென்றடையாத திருவுடன் திகழும் ஒளிநிறை அம்பலம் நினைவுற, நேரே கூடும்படி வரும் அன்பால் இன்புறுகுணமும் பெறவரும் நிலைகூட, ஆடும் கழல் புரி அமுதத் திருநடம் ஆராவகை தொழுது ஆர்கின்றார். தலை மேல் அஞ்சலிசெய் கையும், ஒழியாதே மழைபொழி கண்ணும் பரிவின் உருகுங் கரணமும், நிலமிசை விழுமெய்யும் திருநடம் கும்பிடலில் அளவிலாது பெருகும் ஆர்வத்தைப் பிறர்க்குணர்த் தின. பலமுறை தொழுதார் பாவேந்தர். "என்று எய்தினை" என்றது மன்றாடும் மன்னன் திருவருட்கருணை. ஆநந்தம் பாட லாக வெளிவந்தது. ஒன்றியிருந்து நினைந்து திருக்குறிப் புணர்ந்து "பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்னும் இன்தமிழ் மாலைபாடி, தொண்டுசெய்யுங் காதலிற் பணிந்து போந்து, மணியின் சோதி நிறை திருமுன்றின் மாடும் பொற்றேர் அணிதிரு வீதியுள்ளும் பணிகள் செய்து கும்பிடுந் தொழிலராகிப் புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார். அருட்பெரு மகிழ்ச்சி பொங்கப் பாடியருளியது இத் திருப்பதிகம், (தி.12 திருநா. புரா. 161- 171.)

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.