நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
039 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

குருந்தம தொசித்த மாலும் குலமலர் மேவி னானும்
திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இடைக்குலச் சிறுமியர் மரக்கிளைகளில் தொங்க விடப்பட்ட தம் ஆடைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு உடுத்துமாறு குருந்தமரத்தைக் கண்ணனாக அவதரித்த காலத்தில் வளைத்துக் கொடுத்த திருமாலும், மேம்பட்ட தாமரையில் விரும்பித் தங்கிய பிரமனும் மேம்பட்ட பெரிய திருவடிகளையும் திருமுடியையும் காண இயலாதவர்களாக, மேம்பட்ட முனிவர்கள் உயர்த்திப் புகழும் திருவையாறு அமர்ந்த தேனை உன்னுள் பொருத்தித் தியானிக்கும் மனமே! அச்செயலால் நம் பொய்யான உடலிலிருந்து நுகரும் வினைப்பயன்கள் யாவும் அழிந்து விடுதல் தெளிவு.

குறிப்புரை:

குருந்தமது - குருந்த மரத்தை, ` அவமது ` ( தி.4 ப.24 பா.6.) என்றதன் குறிப்புணர்க. ஒசித்த - ஒடித்த. இது மால் குருந்த மரம் ஒடித்த வரலாற்றுக் குறிப்பு. குலமலர் - தாமரை, ` பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை `, ` பூவிற்குத் தாமரையே ` ` பூவெனப்படுவது பொறி வாழ் பூவே ` எனப்படும் மேன்மைக் குலமாகும். மேவினான் பிரமன், திருந்து நற்றிருவடி :- ஆன்மாக்கள் தம்மைத் திருத்திக்கொண்டே சென்றெய்தும் இயல்பிற்கேற்பத் திருவடி திருந்த விளங்கும். ` திருந்து தொண்டர்கள் செப்புமின் மிகச்செல்வன்றன்னது திறமெலாம் ` ( தி.3 ப. 38 பா.7). ` அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்டசிவலோகா ` ( தி.8 திருவாசகம் 491) என்னும் உண்மையால் திருந்திய அருளே திருந்தாச் சிந்தையைத் திருத்தவல்லதாதல் விளங்கும். திருத்தல் - இச்சா ஞானக் கிரியை ஆகிய மூன்றனையும் தன் கரணமாக்கிப் பசுகரணமாகத் தொழிற்படாது செய்தல், திருவடியும் திருமுடியும் அருளுருவத் திருமேனி குறித்தவை. அருவம், அருவுருவம், உருவம் மூன்றனையுங் கடந்த நிலையில், ` பரை உயிரில் யான் எனது அற நின்றது அடியாம். பார்ப்பிடம் எங்கும் சிவமாய்த் தோன்றலது முகமாம். உரையிறந்த சுகமதுவே முடியாகும் ` ( உண்மைநெறி விளக்கம் 4 ) என்று தெளிக. நிரல் நிறையாகக் கொண்டு, மால் திருவடிகாணமாட்டான். மலர் மேவினான் திருமுடி காணமாட்டான் என்றுரைக்க. அருந்தவ முனிவர் :- அப்ப மூர்த்திகள் திருக்கண்ணாற் காணப்பெற்ற அக் காலத்து மாதவர்கள். ` ஏத்தும் ` என்று நிகழ்காலத்தாற் கூறியதுணர்க. பொருந்தி நின்றுன்னுதல் - ஒன்றியிருந்து நினைத்தல். பொய்வினை :- மூலகன்மத்தின் காரியமாய்த் தோன்றியழியும் ஆகாமியம் சஞ்சிதம் பிராரத்தம் என்பன. வினை ஈட்டப்படுங்கால் மந்திரம் முதலிய அத்துவாக்களிடமாக முறையானே மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றான் ஈட்டப்பட்டுத் தூலகன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும். பின்னர்ப் பக்குவம் ஆங்காறும் சூக்குமகன்மமாய்ப் புத்தி தத்துவத்தினிடமாக மாயையிற்கிடந்து, சாதி ஆயுப் போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம் தாரகம் போக்கியம் என மூவகைத்தாய், அபூர்வம், சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர்பெறும். அது பின்னர்ப் பயன்படுங்கால் ஆதி தைவிகம், ஆத்தியான்மிகம், ஆதி பௌதிகம் என்னும் முத்திறத்தாற் பலதிறப்பட்டுப் பிராரத்தம் எனப்பெறும் என்றுணர்க. ( சிவ ஞானமாபாடியம். சூ 2. அதி. 2 ). ` வேறாகப் பார்த்திருப்பதன்றியே பாழான கன்மத்தை நீத்திருக்கலாமோ நிலத்து ` ( தி.4 ப.9 பா.10.) ` முன்னை வினைக்கு ஈடா முதல்வன் அருள் நமைக் கொண்டு என்ன வினை செய்ய இயற்றுமோ ? இன்னவினை செய்வோம் தவிர்வோம் திரிவோம் இருப்போம் இங்கு உய்வோம் எனும் வகை ஏது ?` ( தி.4 ப.9 பா.6.) ` எடுத்த உடற்கேய்ந்த கன்மம் எப்போதும் ஊட்டும் ` ( தி.4 ப.8 பா.6) மனவாக்குக் காயம் மன்னியசைப்பானும் அனமாதிபோகம் அளிப்பானும் நனவாதி கூட்டிவிடுவானும் முத்தி கூட்டிடுவானும் பிறப்பில் ஆட்டி விடுவானும் அரன் ` ( தி.4 ப.9 பா.5.) என்று தருமைக் குருமுதல்வர் அருளிய சிவபோகசாரம் ஈண்டுணரத்தக்கது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గోపకన్నెలు తమ వస్త్రముల తామె కైకొన కొమ్మవంచి
ఆపదల కాచిన నల్లకలువకన్నుల గోపీవల్లభుడైన వెన్నుడును
తోపక తలయు పాదములు నలువయు తిరుగ మునులు పొగడు
పాపగ చెడుకర్మల తిరువైయ్యారు తేనెను మది నిలుపు ఇకనైన

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
विष्णु, ब्रह्मा इन दोनों के लिए प्रभु अगोचर रहे। वे प्रभु मुनिगणों से स्तुत्य पंचनद में प्रियतम केे रूप में प्रतिष्ठित हैं। हे मन! उस प्रभु के श्रीचरण को मन में अंकित कर उनका स्मरण करो। त्रिमलों को, दोनों कर्मबन्धनों को प्रभु विनष्ट करेंगे।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Māl who broke the wild-lime tree and Piramaṉ who is on a superior lotus flower were unable to have a view of the holy flawless feet and head of Civaṉ.
my mind!
think of the honey in tiruvaiyāṟu who is praised by sages who have done severe penances, by going near him.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀭𑀼𑀦𑁆𑀢𑀫 𑀢𑁄𑁆𑀘𑀺𑀢𑁆𑀢 𑀫𑀸𑀮𑀼𑀫𑁆 𑀓𑀼𑀮𑀫𑀮𑀭𑁆 𑀫𑁂𑀯𑀺 𑀷𑀸𑀷𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀦𑀶𑁆 𑀶𑀺𑀭𑀼𑀯 𑀝𑀺𑀬𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑀼𑀝𑀺 𑀓𑀸𑀡 𑀫𑀸𑀝𑁆𑀝𑀸𑀭𑁆
𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀯 𑀫𑀼𑀷𑀺𑀯 𑀭𑁂𑀢𑁆𑀢𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀫𑀭𑁆𑀦𑁆𑀢 𑀢𑁂𑀷𑁃𑀧𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀦𑀺𑀷𑁆 𑀶𑀼𑀷𑁆𑀷𑀼 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑁂 𑀧𑁄𑁆𑀬𑁆𑀯𑀺𑀷𑁃 𑀫𑀸𑀬𑀼 𑀫𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুরুন্দম তোসিত্ত মালুম্ কুলমলর্ মেৱি ন়ান়ুম্
তিরুন্দুনট্রিরুৱ টিযুন্ দিরুমুডি কাণ মাট্টার্
অরুন্দৱ মুন়িৱ রেত্তুন্ দিরুৱৈযা র়মর্ন্দ তেন়ৈপ্
পোরুন্দিনিণ্ড্রুন়্‌ন়ু নেঞ্জে পোয্ৱিন়ৈ মাযু মণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குருந்தம தொசித்த மாலும் குலமலர் மேவி னானும்
திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே


Open the Thamizhi Section in a New Tab
குருந்தம தொசித்த மாலும் குலமலர் மேவி னானும்
திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே

Open the Reformed Script Section in a New Tab
कुरुन्दम तॊसित्त मालुम् कुलमलर् मेवि ऩाऩुम्
तिरुन्दुनट्रिरुव टियुन् दिरुमुडि काण माट्टार्
अरुन्दव मुऩिव रेत्तुन् दिरुवैया ऱमर्न्द तेऩैप्
पॊरुन्दिनिण्ड्रुऩ्ऩु नॆञ्जे पॊय्विऩै मायु मण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಕುರುಂದಮ ತೊಸಿತ್ತ ಮಾಲುಂ ಕುಲಮಲರ್ ಮೇವಿ ನಾನುಂ
ತಿರುಂದುನಟ್ರಿರುವ ಟಿಯುನ್ ದಿರುಮುಡಿ ಕಾಣ ಮಾಟ್ಟಾರ್
ಅರುಂದವ ಮುನಿವ ರೇತ್ತುನ್ ದಿರುವೈಯಾ ಱಮರ್ಂದ ತೇನೈಪ್
ಪೊರುಂದಿನಿಂಡ್ರುನ್ನು ನೆಂಜೇ ಪೊಯ್ವಿನೈ ಮಾಯು ಮಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
కురుందమ తొసిత్త మాలుం కులమలర్ మేవి నానుం
తిరుందునట్రిరువ టియున్ దిరుముడి కాణ మాట్టార్
అరుందవ మునివ రేత్తున్ దిరువైయా ఱమర్ంద తేనైప్
పొరుందినిండ్రున్ను నెంజే పొయ్వినై మాయు మండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුරුන්දම තොසිත්ත මාලුම් කුලමලර් මේවි නානුම්
තිරුන්දුනට්‍රිරුව ටියුන් දිරුමුඩි කාණ මාට්ටාර්
අරුන්දව මුනිව රේත්තුන් දිරුවෛයා රමර්න්ද තේනෛප්
පොරුන්දිනින්‍රුන්නු නෙඥ්ජේ පොය්විනෛ මායු මන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
കുരുന്തമ തൊചിത്ത മാലും കുലമലര്‍ മേവി നാനും
തിരുന്തുനറ് റിരുവ ടിയുന്‍ തിരുമുടി കാണ മാട്ടാര്‍
അരുന്തവ മുനിവ രേത്തുന്‍ തിരുവൈയാ റമര്‍ന്ത തേനൈപ്
പൊരുന്തിനിന്‍ റുന്‍നു നെഞ്ചേ പൊയ്വിനൈ മായു മന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
กุรุนถะมะ โถะจิถถะ มาลุม กุละมะละร เมวิ ณาณุม
ถิรุนถุนะร ริรุวะ ดิยุน ถิรุมุดิ กาณะ มาดดาร
อรุนถะวะ มุณิวะ เรถถุน ถิรุวายยา ระมะรนถะ เถณายป
โปะรุนถินิณ รุณณุ เนะญเจ โปะยวิณาย มายุ มะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုရုန္ထမ ေထာ့စိထ္ထ မာလုမ္ ကုလမလရ္ ေမဝိ နာနုမ္
ထိရုန္ထုနရ္ ရိရုဝ တိယုန္ ထိရုမုတိ ကာန မာတ္တာရ္
အရုန္ထဝ မုနိဝ ေရထ္ထုန္ ထိရုဝဲယာ ရမရ္န္ထ ေထနဲပ္
ေပာ့ရုန္ထိနိန္ ရုန္နု ေန့ည္ေစ ေပာ့ယ္ဝိနဲ မာယု မန္ေရ


Open the Burmese Section in a New Tab
クルニ・タマ トチタ・タ マールミ・ クラマラリ・ メーヴィ ナーヌミ・
ティルニ・トゥナリ・ リルヴァ ティユニ・ ティルムティ カーナ マータ・ターリ・
アルニ・タヴァ ムニヴァ レータ・トゥニ・ ティルヴイヤー ラマリ・ニ・タ テーニイピ・
ポルニ・ティニニ・ ルニ・ヌ ネニ・セー ポヤ・ヴィニイ マーユ マニ・レー
Open the Japanese Section in a New Tab
gurundama dosidda maluM gulamalar mefi nanuM
dirundunadrirufa diyun dirumudi gana maddar
arundafa munifa reddun dirufaiya ramarnda denaib
borundinindrunnu nende boyfinai mayu mandre
Open the Pinyin Section in a New Tab
كُرُنْدَمَ تُوسِتَّ مالُن كُلَمَلَرْ ميَۤوِ نانُن
تِرُنْدُنَتْرِرُوَ تِیُنْ دِرُمُدِ كانَ ماتّارْ
اَرُنْدَوَ مُنِوَ ريَۤتُّنْ دِرُوَيْیا رَمَرْنْدَ تيَۤنَيْبْ
بُورُنْدِنِنْدْرُنُّْ نيَنعْجيَۤ بُویْوِنَيْ مایُ مَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
kʊɾʊn̪d̪ʌmə t̪o̞sɪt̪t̪ə mɑ:lɨm kʊlʌmʌlʌr me:ʋɪ· n̺ɑ:n̺ɨm
t̪ɪɾɨn̪d̪ɨn̺ʌr rɪɾɨʋə ʈɪɪ̯ɨn̺ t̪ɪɾɨmʉ̩˞ɽɪ· kɑ˞:ɳʼə mɑ˞:ʈʈɑ:r
ˀʌɾɨn̪d̪ʌʋə mʊn̺ɪʋə re:t̪t̪ɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌmʌrn̪d̪ə t̪e:n̺ʌɪ̯β
po̞ɾɨn̪d̪ɪn̺ɪn̺ rʊn̺n̺ɨ n̺ɛ̝ɲʤe· po̞ɪ̯ʋɪn̺ʌɪ̯ mɑ:ɪ̯ɨ mʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
kuruntama tocitta mālum kulamalar mēvi ṉāṉum
tiruntunaṟ ṟiruva ṭiyun tirumuṭi kāṇa māṭṭār
aruntava muṉiva rēttun tiruvaiyā ṟamarnta tēṉaip
poruntiniṉ ṟuṉṉu neñcē poyviṉai māyu maṉṟē
Open the Diacritic Section in a New Tab
кюрюнтaмa тосыттa маалюм кюлaмaлaр мэaвы наанюм
тырюнтюнaт рырювa тыён тырюмюты кaнa мааттаар
арюнтaвa мюнывa рэaттюн тырювaыяa рaмaрнтa тэaнaып
порюнтынын рюнню нэгнсэa пойвынaы мааё мaнрэa
Open the Russian Section in a New Tab
ku'ru:nthama thoziththa mahlum kulamala'r mehwi nahnum
thi'ru:nthu:nar ri'ruwa diju:n thi'rumudi kah'na mahddah'r
a'ru:nthawa muniwa 'rehththu:n thi'ruwäjah rama'r:ntha thehnäp
po'ru:nthi:nin runnu :nengzeh pojwinä mahju manreh
Open the German Section in a New Tab
kòrònthama thoçiththa maalòm kòlamalar mèèvi naanòm
thirònthònarh rhiròva diyòn thiròmòdi kaanha maatdaar
arònthava mòniva rèèththòn thiròvâiyaa rhamarntha thèènâip
porònthinin rhònnò nègnçèè poiyvinâi maayò manrhèè
curuinthama thoceiiththa maalum culamalar meevi naanum
thiruinthunarh rhiruva tiyuin thirumuti caanha maaittaar
aruinthava muniva reeiththuin thiruvaiiyaa rhamarintha theenaip
poruinthinin rhunnu neigncee poyivinai maayu manrhee
kuru:nthama thosiththa maalum kulamalar maevi naanum
thiru:nthu:na'r 'riruva diyu:n thirumudi kaa'na maaddaar
aru:nthava muniva raeththu:n thiruvaiyaa 'ramar:ntha thaenaip
poru:nthi:nin 'runnu :nenjsae poyvinai maayu man'rae
Open the English Section in a New Tab
কুৰুণ্তম তোচিত্ত মালুম্ কুলমলৰ্ মেৱি নানূম্
তিৰুণ্তুণৰ্ ৰিৰুৱ টিয়ুণ্ তিৰুমুটি কাণ মাইটটাৰ্
অৰুণ্তৱ মুনিৱ ৰেত্তুণ্ তিৰুৱৈয়া ৰমৰ্ণ্ত তেনৈপ্
পোৰুণ্তিণিন্ ৰূন্নূ ণেঞ্চে পোয়্ৱিনৈ মায়ু মন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.