நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
008 பொது - சிவனெனுமோசை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1 பண் : பியந்தைக் காந்தாரம்

சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே
அவனுமொ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம்
கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உலகிலே சிவன் என்னும் ஓசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செஞ்சொல் வேறு இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன். எம்பெருமான் பிச்சை எடுத்து உண்பவன். தோலையே ஆடையாக உடையவன். அத்தோல்மேல் ஆடும்பாம்பை இறுகக்கட்டியவன். கவண் கல் அளவு சிறிதே உண்பவன். சுடுகாடே இருப்பிடம். அவனுடைய உண்கலன் மண்டையோடு. ஆராய்ந்து பார்த்தால் அவன் உடைமைகளைக் கண்டும் அவன் தன்மையைக் கண்டும் தேவர்கள் தம் உள்ளத்தை அப்பெருமானுக்கு அர்ப்பணம் செய்வர்.

குறிப்புரை:

உலகில் சிவன் எனும் ஓசை அல்லது திருநின்ற செம்மை உளதோ ? அறையோ. ` நேர்பட நின்று அறை கூவும் திருப்பதிகம் ` என்று சேக்கிழார்பெருமான் அருளியதால், ` வஞ்சினம் கூறவோ ` ( சிந்தாமணி.12.137 ) எனல் பொருத்தம். சித்தியார் சூ.8:- 14 ` உத்தரம் `. அது ஈண்டுப் பொருந்தாது. ( தி.10 திருமந். 884. 2988) கையறைதலும் வரையறையும்பற்றி ` அறையோ ` என்று ஆணைக்கு வழங்கலாயிற்று. சிவநாமமே முழக்கத்திற்கு உரியது. செம்மையானது. ஏனைய அன்ன அல்ல. ஓசை, அறை முதலியன ஒலிப்பொருளாம். ஒலிசெய் என்பது ஓசை என மருவிற்று. நன்செய் - நஞ்சை. புன்செய் - புஞ்சை. தண்செய் - தஞ்சை. ` ஓசை யொலியெலாம் ஆனாய் நீயே ` என்பது ஐயாற்றிற் சென்றுணரற்பாற்று. உலகில் திருநின்ற செம்மை உளதே - சிவமேபெறும் திருவானது நிலைபெறக் காரணமான செம்மை ( வேறு ) உளதோ ? ` உலகில் `:- எல்லாவுலகிலும். உளதே என்பது தேற்றம் உணர்த்தியதுமாம். அவனும் - அச்சிவனும், ஓர் ஐயம் உண்ணி - பிச்சைபுக்குண்ணும் ஒருவன். ஆடை ஆவது, அதள் (- தோல் ). அதன்மேல் - அத்தோலாடை மேல். ஓர் ஆடல் அரவம் - ஆடுதலை ஒழியாத ஒரு பாம்பு. கவண் அளவு உள்ள ( உண்கு ) - கவணதுகல் முதலியவற்றினளவுடைய உட்கொள்ளும் உணவு. சிறிதளவு என்றவாறு. கவளம் கவண் என மருவிற்று எனின், அது சிறிதன்று. ` குன்றாமுது குன்றுடையான் இலாத வெண் கோவணத்தான் நன்றாக இத்தனை பிச்சையுண்டோ சொல் நறுநுதலாய் என்றான் ` ( பிட்சாடன நவமணிமாலை.2 .) என்பதில் உணர்த்திய பிச்சையுணவினளவு சிறிதாதல் அறிக. பழிப்பதுபோலப் புகழ்தலாய்ப் பிச்சையுணவைக் குறிக்கின்ற ஈண்டுச் சிறுமையே கொள்ளற்பாலது. கோயில் கரி ( ந்த ) காடு. ( உண் ) கலன் ஆவது ஓடு ; ( பிரமகபாலம் ). கருதில் அவனும் ஓர் ஐயம் உண்ணி...... ஓடு என்றியைக்க. பெற்றி - பெற்றிருக்கும் பேறு. நீர்மை எனப்பின்வருதலின், பெற்றியைத் தன்மை எனல் பொருந்தாது. தேவர் கண்டும் தம் அகத்தில் அச் சிவனைத் தேர்வர் என்றவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శివుడను సవ్వడి తక్క లోకాన శుభములిచ్చునది లేదని ఆన
భవములేని వాడు తిరిపెమెత్తు చర్మపువలువపై పాముల గట్టిగ కట్టు
శవములుండు శ్మశానమే ఇల్లు పునుక పాత్రలో ఉండేలురాయంత తిను
దేవతలు ఆతని గుణముల వస్తువుల కని ఉల్లములలో పూజింతురు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
8. पोदु

राग: पिन्दैळ् गान्धारम्

षिव-षिव नामोच्चारण की अपेक्षा दुनिया में दूसरा श्रेष्ठ नाद कौन सा है? वे प्रभु भिक्षा लेकर भोजन करते हैं। चर्म-वस्त्र धारण करते हैं। उस पर सर्प सुषोभित है। वे एक कौल भिक्षा लेते हैं। मषान-मंदिर में निवास करते हैं। कपाल में भिक्षा स्वीकारते हैं। इस महिमा-मंडित प्रभु की सभी देवगण स्तोत्रों से यषोगाथा गाते हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Is there any thing other than the sound Civaṉ, for wealth to the permanent and spotless?
I challenge though he is great he eats getting alms.
his dress is a skin upon that there is a dancing cobra.
he eats his food which is just like the size of the stone in a sling.
his temple in the scorched cremation ground.
his eating vessel is the skull;
if we think about him.
though they have understood his nature and his affability.
the celestials offer him their hearts as his seat.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀺𑀯𑀷𑁂𑁆𑀷𑀼 𑀫𑁄𑀘𑁃 𑀬𑀮𑁆𑀮 𑀢𑀶𑁃𑀬𑁄 𑀯𑀼𑀮𑀓𑀺𑀶𑁆 𑀶𑀺𑀭𑀼𑀦𑀺𑀷𑁆𑀶 𑀘𑁂𑁆𑀫𑁆𑀫𑁃 𑀬𑀼𑀴𑀢𑁂
𑀅𑀯𑀷𑀼𑀫𑁄𑁆 𑀭𑁃𑀬 𑀫𑀼𑀡𑁆𑀡𑀺 𑀬𑀢𑀴𑀸𑀝𑁃 𑀬𑀸𑀯 𑀢𑀢𑀷𑁆𑀫𑁂𑀮𑁄𑁆 𑀭𑀸𑀝 𑀮𑀭𑀯𑀫𑁆
𑀓𑀯𑀡𑀴 𑀯𑀼𑀴𑁆𑀴 𑀯𑀼𑀡𑁆𑀓𑀼 𑀓𑀭𑀺𑀓𑀸𑀝𑀼 𑀓𑁄𑀬𑀺𑀮𑁆 𑀓𑀮𑀷𑀸𑀯 𑀢𑁄𑀝𑀼 𑀓𑀭𑀼𑀢𑀺𑀮𑁆
𑀅𑀯𑀷𑀢𑀼 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀺 𑀓𑀡𑁆𑀝𑀼 𑀫𑀯𑀷𑀻𑀭𑁆𑀫𑁃 𑀓𑀡𑁆𑀝𑀼 𑀫𑀓𑀦𑁂𑀭𑁆𑀯𑀭𑁆 𑀢𑁂𑀯 𑀭𑀯𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সিৱন়েন়ু মোসৈ যল্ল তর়ৈযো ৱুলহিট্রিরুনিণ্ড্র সেম্মৈ যুৰদে
অৱন়ুমো রৈয মুণ্ণি যদৰাডৈ যাৱ তদন়্‌মেলো রাড লরৱম্
কৱণৰ ৱুৰ‍্ৰ ৱুণ্গু করিহাডু কোযিল্ কলন়াৱ তোডু করুদিল্
অৱন়দু পেট্রি কণ্ডু মৱন়ীর্মৈ কণ্ডু মহনের্ৱর্ তেৱ রৱরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே
அவனுமொ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம்
கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே


Open the Thamizhi Section in a New Tab
சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே
அவனுமொ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம்
கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே

Open the Reformed Script Section in a New Tab
सिवऩॆऩु मोसै यल्ल तऱैयो वुलहिट्रिरुनिण्ड्र सॆम्मै युळदे
अवऩुमॊ रैय मुण्णि यदळाडै याव तदऩ्मेलॊ राड लरवम्
कवणळ वुळ्ळ वुण्गु करिहाडु कोयिल् कलऩाव तोडु करुदिल्
अवऩदु पॆट्रि कण्डु मवऩीर्मै कण्डु महनेर्वर् तेव रवरे
Open the Devanagari Section in a New Tab
ಸಿವನೆನು ಮೋಸೈ ಯಲ್ಲ ತಱೈಯೋ ವುಲಹಿಟ್ರಿರುನಿಂಡ್ರ ಸೆಮ್ಮೈ ಯುಳದೇ
ಅವನುಮೊ ರೈಯ ಮುಣ್ಣಿ ಯದಳಾಡೈ ಯಾವ ತದನ್ಮೇಲೊ ರಾಡ ಲರವಂ
ಕವಣಳ ವುಳ್ಳ ವುಣ್ಗು ಕರಿಹಾಡು ಕೋಯಿಲ್ ಕಲನಾವ ತೋಡು ಕರುದಿಲ್
ಅವನದು ಪೆಟ್ರಿ ಕಂಡು ಮವನೀರ್ಮೈ ಕಂಡು ಮಹನೇರ್ವರ್ ತೇವ ರವರೇ
Open the Kannada Section in a New Tab
సివనెను మోసై యల్ల తఱైయో వులహిట్రిరునిండ్ర సెమ్మై యుళదే
అవనుమొ రైయ ముణ్ణి యదళాడై యావ తదన్మేలొ రాడ లరవం
కవణళ వుళ్ళ వుణ్గు కరిహాడు కోయిల్ కలనావ తోడు కరుదిల్
అవనదు పెట్రి కండు మవనీర్మై కండు మహనేర్వర్ తేవ రవరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සිවනෙනු මෝසෛ යල්ල තරෛයෝ වුලහිට්‍රිරුනින්‍ර සෙම්මෛ යුළදේ
අවනුමො රෛය මුණ්ණි යදළාඩෛ යාව තදන්මේලො රාඩ ලරවම්
කවණළ වුළ්ළ වුණ්හු කරිහාඩු කෝයිල් කලනාව තෝඩු කරුදිල්
අවනදු පෙට්‍රි කණ්ඩු මවනීර්මෛ කණ්ඩු මහනේර්වර් තේව රවරේ


Open the Sinhala Section in a New Tab
ചിവനെനു മോചൈ യല്ല തറൈയോ വുലകിറ് റിരുനിന്‍റ ചെമ്മൈ യുളതേ
അവനുമൊ രൈയ മുണ്ണി യതളാടൈ യാവ തതന്‍മേലൊ രാട ലരവം
കവണള വുള്ള വുണ്‍കു കരികാടു കോയില്‍ കലനാവ തോടു കരുതില്‍
അവനതു പെറ്റി കണ്ടു മവനീര്‍മൈ കണ്ടു മകനേര്‍വര്‍ തേവ രവരേ
Open the Malayalam Section in a New Tab
จิวะเณะณุ โมจาย ยะลละ ถะรายโย วุละกิร ริรุนิณระ เจะมมาย ยุละเถ
อวะณุโมะ รายยะ มุณณิ ยะถะลาดาย ยาวะ ถะถะณเมโละ ราดะ ละระวะม
กะวะณะละ วุลละ วุณกุ กะริกาดุ โกยิล กะละณาวะ โถดุ กะรุถิล
อวะณะถุ เปะรริ กะณดุ มะวะณีรมาย กะณดุ มะกะเนรวะร เถวะ ระวะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိဝေန့နု ေမာစဲ ယလ္လ ထရဲေယာ ဝုလကိရ္ ရိရုနိန္ရ ေစ့မ္မဲ ယုလေထ
အဝနုေမာ့ ရဲယ မုန္နိ ယထလာတဲ ယာဝ ထထန္ေမေလာ့ ရာတ လရဝမ္
ကဝနလ ဝုလ္လ ဝုန္ကု ကရိကာတု ေကာယိလ္ ကလနာဝ ေထာတု ကရုထိလ္
အဝနထု ေပ့ရ္ရိ ကန္တု မဝနီရ္မဲ ကန္တု မကေနရ္ဝရ္ ေထဝ ရဝေရ


Open the Burmese Section in a New Tab
チヴァネヌ モーサイ ヤリ・ラ タリイョー ヴラキリ・ リルニニ・ラ セミ・マイ ユラテー
アヴァヌモ リイヤ ムニ・ニ ヤタラアタイ ヤーヴァ タタニ・メーロ ラータ ララヴァミ・
カヴァナラ ヴリ・ラ ヴニ・ク カリカートゥ コーヤリ・ カラナーヴァ トートゥ カルティリ・
アヴァナトゥ ペリ・リ カニ・トゥ マヴァニーリ・マイ カニ・トゥ マカネーリ・ヴァリ・ テーヴァ ラヴァレー
Open the Japanese Section in a New Tab
sifanenu mosai yalla daraiyo fulahidrirunindra semmai yulade
afanumo raiya munni yadaladai yafa dadanmelo rada larafaM
gafanala fulla fungu garihadu goyil galanafa dodu garudil
afanadu bedri gandu mafanirmai gandu mahanerfar defa rafare
Open the Pinyin Section in a New Tab
سِوَنيَنُ مُوۤسَيْ یَلَّ تَرَيْیُوۤ وُلَحِتْرِرُنِنْدْرَ سيَمَّيْ یُضَديَۤ
اَوَنُمُو رَيْیَ مُنِّ یَدَضادَيْ یاوَ تَدَنْميَۤلُو رادَ لَرَوَن
كَوَنَضَ وُضَّ وُنْغُ كَرِحادُ كُوۤیِلْ كَلَناوَ تُوۤدُ كَرُدِلْ
اَوَنَدُ بيَتْرِ كَنْدُ مَوَنِيرْمَيْ كَنْدُ مَحَنيَۤرْوَرْ تيَۤوَ رَوَريَۤ


Open the Arabic Section in a New Tab
sɪʋʌn̺ɛ̝n̺ɨ mo:sʌɪ̯ ɪ̯ʌllə t̪ʌɾʌjɪ̯o· ʋʉ̩lʌçɪr rɪɾɨn̺ɪn̺d̺ʳə sɛ̝mmʌɪ̯ ɪ̯ɨ˞ɭʼʌðe:
ˀʌʋʌn̺ɨmo̞ rʌjɪ̯ə mʊ˞ɳɳɪ· ɪ̯ʌðʌ˞ɭʼɑ˞:ɽʌɪ̯ ɪ̯ɑ:ʋə t̪ʌðʌn̺me:lo̞ rɑ˞:ɽə lʌɾʌʋʌm
kʌʋʌ˞ɳʼʌ˞ɭʼə ʋʉ̩˞ɭɭə ʋʉ̩˞ɳgɨ kʌɾɪxɑ˞:ɽɨ ko:ɪ̯ɪl kʌlʌn̺ɑ:ʋə t̪o˞:ɽɨ kʌɾɨðɪl
ˀʌʋʌn̺ʌðɨ pɛ̝t̺t̺ʳɪ· kʌ˞ɳɖɨ mʌʋʌn̺i:rmʌɪ̯ kʌ˞ɳɖɨ mʌxʌn̺e:rʋʌr t̪e:ʋə rʌʋʌɾe·
Open the IPA Section in a New Tab
civaṉeṉu mōcai yalla taṟaiyō vulakiṟ ṟiruniṉṟa cemmai yuḷatē
avaṉumo raiya muṇṇi yataḷāṭai yāva tataṉmēlo rāṭa laravam
kavaṇaḷa vuḷḷa vuṇku karikāṭu kōyil kalaṉāva tōṭu karutil
avaṉatu peṟṟi kaṇṭu mavaṉīrmai kaṇṭu makanērvar tēva ravarē
Open the Diacritic Section in a New Tab
сывaнэню моосaы яллa тaрaыйоо вюлaкыт рырюнынрa сэммaы ёлaтэa
авaнюмо рaыя мюнны ятaлаатaы яaвa тaтaнмэaло раатa лaрaвaм
кавaнaлa вюллa вюнкю карыкaтю коойыл калaнаавa тоотю карютыл
авaнaтю пэтры кантю мaвaнирмaы кантю мaканэaрвaр тэaвa рaвaрэa
Open the Russian Section in a New Tab
ziwanenu mohzä jalla tharäjoh wulakir ri'ru:ninra zemmä ju'latheh
awanumo 'räja mu'n'ni jatha'lahdä jahwa thathanmehlo 'rahda la'rawam
kawa'na'la wu'l'la wu'nku ka'rikahdu kohjil kalanahwa thohdu ka'ruthil
awanathu perri ka'ndu mawanih'rmä ka'ndu maka:neh'rwa'r thehwa 'rawa'reh
Open the German Section in a New Tab
çivanènò mooçâi yalla tharhâiyoo vòlakirh rhiròninrha çèmmâi yòlhathèè
avanòmo râiya mònhnhi yathalhaatâi yaava thathanmèèlo raada laravam
kavanhalha vòlhlha vònhkò karikaadò kooyeil kalanaava thoodò karòthil
avanathò pèrhrhi kanhdò mavaniirmâi kanhdò makanèèrvar thèèva ravarèè
ceivanenu mooceai yalla tharhaiyoo vulacirh rhiruninrha cemmai yulhathee
avanumo raiya muinhnhi yathalhaatai iyaava thathanmeelo raata laravam
cavanhalha vulhlha vuinhcu caricaatu cooyiil calanaava thootu caruthil
avanathu perhrhi cainhtu mavaniirmai cainhtu macaneervar theeva ravaree
sivanenu moasai yalla tha'raiyoa vulaki'r 'riru:nin'ra semmai yu'lathae
avanumo raiya mu'n'ni yatha'laadai yaava thathanmaelo raada laravam
kava'na'la vu'l'la vu'nku karikaadu koayil kalanaava thoadu karuthil
avanathu pe'r'ri ka'ndu mavaneermai ka'ndu maka:naervar thaeva ravarae
Open the English Section in a New Tab
চিৱনেনূ মোচৈ য়ল্ল তৰৈয়ো ৱুলকিৰ্ ৰিৰুণিন্ৰ চেম্মৈ য়ুলতে
অৱনূমো ৰৈয় মুণ্ণা য়তলাটৈ য়াৱ ততন্মেলো ৰাত লৰৱম্
কৱণল ৱুল্ল ৱুণ্কু কৰিকাটু কোয়িল্ কলনাৱ তোটু কৰুতিল্
অৱনতু পেৰ্ৰি কণ্টু মৱনীৰ্মৈ কণ্টু মকনেৰ্ৱৰ্ তেৱ ৰৱৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.