நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
002 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு : பண் : காந்தாரம்

பசுபதியார்அடியார்க்கு நஞ்சும் அமுதாயிற்று . அவ்வற் புதத்தைக் கண்டனர் அமணர் . அஞ்சினர் ; ஓடினர் ; காவலனை மேவினர் . ` நஞ்சு கலந்து ஊட்டிடவும் துஞ்சுதல் இலன் . நமது சமயத்து நஞ்சுதீர் மந்திரவலிமையே அதற்குத் துணையாயிற்று . அவன் துஞ்சிலனேல் , எம் உயிரும் நின்முறையும் துஞ்சுவது திடம் ` என்றுரைத்தனர் . மதிகெட்ட மன்னவனும் அக் கதி கெட்டார் பேச்சைக் கேட்டான் . ` அவனைக் கடியும் திறம் எவ்வாறு ?` இது மன்னன் வினா . ` நின்கொற்ற வயக்களிற் றெதிரே விடுவதுதான் இனிச் செய்யத் தக்கது `. இது அமணர் விடை . காபாலி அடியவராம் வாகீசத் திருவடிமேல் கோபாதி சயமான கொலைக் களிற்றைவிடச் சொன்னான் , பூபாலர் செயலை மேற்கொண்ட புலைத்தொழிலோன் , கூற்றினும் மிக்க தாய்க் களிற்று வடிவில் வரும் மதவெற்பு ஊழிமுடிவில் எழும் தீயைப்போல் சினந்து விரைந்து ஓடிப்போந்தது . போந்தால் என்ன ? அப்பரோ அஞ்சுவார் ? அப்பர் உள்ளத்துள் அப்பர் பொற் கழல் இருக்கின்ற தெளிவு , மதகரியை அஞ்சும் மயக்கம் தோன்றாதவாறு தடுத்துப் பாடுவித்தது . அதுவே மண்ணுலகு உய்ய எடுத்து மகிழ்வுடனே பாடியருளிய இத்திருப்பதிகம் . இதில் , வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் அடியோம் நாம் அஞ்சுவது இல்லை என்று மகுடம் அறைந்திருப்பது காண்க .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.