மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு : பண் : காந்தார பஞ்சமம்

திருஞானசம்பந்தசுவாமிகள் திருச்சிற்றம்பலத்தைப் பரவினார், அங்கு உறைதலை அஞ்சித் திருவேட்களத்தை அடைந்தார்; வணங்கினார். திருநெல்வாயிலையும் திருக்கழிப் பாலையையும் வழிபட்டு மீண்டு, திருவேட்களத்தைச் சேர்ந்தார். திருவுடை அந்தணர் மூவாயிரவர் இறைவரது திருவடிகட்கு அணுக்கராயிருக்கும் பெருவாய்ப்பினை எண்ணி வியந்து மீண்டும் தில்லைக்கு எழுந்தருளினார். தில்லைவாழந்தணர் எதிரே வந்து சண்பையந்தணரை வணங்கினர். அவர் வணங்கு முன் அவர்களை ஆளுடைய பிள்ளையார் வணங்கினார். சிவ பிரானருளால், அந்தணர் பலரும் சிவகணநாதராய்த் திகழ்ந்த னர். நாயனார் அத்திருவருட்காட்சியை நோக்கி உடனிருந்த திருப்பெரும் பாணர்க்கும் அப்பரிசு காட்டியருளினார். பின்னர், திருக்கோயிலுக்கு ஏகினார். திருமுடிமேற் குவித்த செங்கையுடன் திருவாயிலுள் புகுந்து, வழிபட்டுப் போற்றிப் பாடியது, `ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்` என்று தொடங்கும் இத் திருப்பதிகம்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.