3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 2

கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் றானென
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ
காரார் கிரகக் கலியாழ் வேனைநின்
பேரா வின்பத் திருத்திய பெரும

5 வினவ லானா துடையேன் எனதுளம்
நீங்கா நிலைமை யூங்கு முளையால்
அறிவின் மைமலம் பிறிவின் மையெனின்
ஓராலினை யுணர்த்தும் விராய்நின் றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை யாகாய்

10 சுத்தன் அமலன் சோதி நாயகன்
முத்தன் பரம்பர னெனும்பெயர் முடியா
வேறுநின் றுணர்த்தின் வியாபக மின்றாய்ப்
பேறுமின் றாகும் எமக்கெம் பெரும
இருநிலந் தீநீர் இயமானன் காலெனும்

15 பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின்
வேறோ வுடனோ விளம்பல் வேண்டுஞ்
சீறி யருளல் சிறுமை யுடைத்தால்
அறியாது கூறினை யபக்குவ பக்குவக்
குறிபார்த் தருளினங் குருமுத லாயெனின்

20 அபக்குவ மருளினும் அறியேன் மிகத்தகும்
பக்குவம் வேண்டிற் பயனிலை நின்னாற்
பக்குவ மதனாற் பயன்நீ வரினே
நின்னைப் பருவம் நிகழ்த்தா தன்னோ
தன்னொப் பாரிலி யென்பதுந் தகுமே

25 மும்மலஞ் சடமணு மூப்பிள மையின்நீ
நின்மலன் பருவம் நிகழ்த்திய தியார்க்கோ
உணர்வெழு நீக்கத்தை ஓதிய தெனினே
இணையிலி யாயினை யென்பதை யறியேன்
யானே நீக்கினுந் தானே நீக்கினுங்

30 கோனே வேண்டா கூறல் வேண்டுங்
காண்பார் யார்கொல் காட்டாக் காலெனும்
மாண்புரை யுணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞா னத்தின்
ஆட்பா லவர்க்கருள் என்பதை யறியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் றானென இடமகன்ற புடவியில் ஆதித்தனையொக்க (இதன்றிக் கண்ணை விட்டு இருள் மறைப்பு நீங்கிய உலகத்தை இரவி கிரணத்தாலே இருளோட்டி அந்த ஞாலத்தைக் காட்டிய முறைமைபோல என்பாரு முளர்); வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ ஆணவமலத்தாலே மறைப்புண்டுகிடந்த என்னைக் காட்டுதற்குத் திருவெண்ணெய் நல்லூரிலே தோன்றியருளும் மெய்கண்டதேவனே; காரார் கிரகக் கலி யாழ்வேனை நின் பேரா இன்பத்து இருத்திய பெரும கலியாகிய அஞ்ஞானச் சிறையிலே யகப்பட்டுத் துக்கமுற்றழுந்தும் என்னை உனது நீங்காத ஆனந்தத்திலே யிருத்திவைத்த தலைவனே; வினவ லானா துடையேன் அடியேன் தேவரீரை யொருவினாவுத லுடையேனாகின்றேன் அமையாதவனாதலால், அவ்வினாவாவது; என துளம் நீங்கா நிலைமை யூங்கும் உளையால் என்னிடத்து விட்டு நீங்காமல் நிற்குமுறைமை அனாதியிலுமுண்டாவையாகையால்; அறிவின்மை அப்பொழுது தேவரீரை யறியாதிருப்பானேனென்ன; மலம் பிறிவின்மை யெனின் மலம் நீங்காமையால் தெரிந்திலையெனின்; ஒராலினை யுணர்த்தும் ஆனால் இப்பொழுது தேவரீர் இந்த அறியாமல் (=அறியாமை) போமளவும் ஓரிடத்தொதுங்கி நின்றீரோவென வினாவில்; விராய் நின்றனையேல் எவ்விடத்தும் நிறைந்து நிற்பேனென்று சொல்லுகின்றீராயின்; திப்பியம் அந்தோ பொய்ப்பகை யாகாய் ஈதொரு தெய்வீகமானதோர் ஆச்சரியம், அப்படி யிருளோடு கூடி நிற்கிலும் இருட்குப் பகையாவனென்பது மில்லையாம், அதுவுமின்றி; சுத்தன் அமலன் சோதி நாயகன் முத்தன் பரம்பர னெனும்பெயர் முடியா அனாதிசுத்தன் நின்மலன் ஓங்கொளி பாசப்பகைவன் ஆன்ம நாயகன் முத்தசித்து மேலாகிய பரன் என்னும் பெயர் உமக்குண்டாகாது; வேறுநின் றுணர்த்தின் வியாபக மின்றாய்ப் பேறு மின்றாகும் எமக்கு எம் பெரும அத்தன்மை கூடிநிற்றலின்றி வேற்றுமையாக நின்று அறிவிப்பே னென்னின் வியாத்தனென்பது மில்லையாய்ச் சாயுச்சியப் பேறும் எமக்கில்லையாம், எங்கோவே; (வியாத்தமின்றாய் என்பதற்கு ஆன்மாவை நீங்கி நின்றறிவிப்பேனென்னின் ஆன்மாவுக் கறிவில்லை யென்று சொல்லுவாருமுளர்.) இருநிலந்தீநீர் இயமானன் காலெனும் பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின் ‘இருநிலனாய்த் தீயாகி’(அப்பர் 6 : 94 :1) என்னுந் திருப்பாட்டின்படி நின்றவையுடையே னென்கிறதுந் தலைவனே யுனக்கில்லை யாதலால்; வேறோவுடனோ விளம்பல்வேண்டுஞ் சீறியருளல் சிறுமையுடைத்தால் தேவரீர் நிலைமை வேற்றுமையாயோ வேறறக்கூடியோ நிற்பதென்று அருளல் வேண்டும், ஆன்மாவுக்கு அஞ்ஞானமே குணம் ஆதலில் தேவரீர் திருவுள்ளங் கோபமுண்டாவதல்ல; அறியாது கூறினை அபக்குவ அபக்குவனாகையாலே இரவியுங் கண்ணும் இருளும்போல நின்ற நிலைமையறியாது கூறினை; பக்குவக்குறி பார்த்தருளினம் குருமுதலாய் எனின் பக்குவமாகியவனைப் பார்த்து நாம் குருவாய் வந்து தோன்றுவோமென்று அருளினையாயின்; அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும் பக்குவம் வேண்டிற் பயனிலை நின்னால் தேவரீல் குருவாயெழுந்தருளி யுபதேசிக்கிலும் அபக்குவனாதலாலறியேன், மிக்க பக்குவம் வேணுமாயின் தேவரீரை வழிபட வேண்டாம், அந்தப் பக்குவத்தையே வழிபட வேண்டுமத்தனை; பக்குவ மதனாற் பயன் நீ வரினே அப்படியன்று, பக்குவமுண்டாவதுந் தேவரீர் எழுந்தருளுகின்றதென் றருளினீராகில்; நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ தன்னொப்பாரிலி என்பதுந் தகுமே தேவரீரைப் பக்குவம் அறிவிக்க மாட்டாது, அறிவிக்குமாகில் அந்தப் பக்குவம் முதலியாம், அதனால் தேவரீர் இணையிலியென்பதும் நன்றாமே; மும்மலஞ் சடமணு மூப்பிளமையில் நீ நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ அந்தப் பக்குவம் மலங்கட்கென்னில் அவை சடமாதலால் அதற்கு வேண்டாம், ஆன்மாவுக் கென்னின் மூப்பிளமை யில்லையாதலால் ஆன்மாவுக்கும் வேண்டாம், தேவரீர்க்கென்னின் தேவரீர் நின்மலனாதலால் தேவரீர்க்கும் வேண்டாம், இப்பக்குவம் யார்க்கு நிகழ்த்தியதோ வென்னின்; உணர்வெழும் நீக்கத்தை ™ஓதியதெனினே இருவினை யொப்புஞ் சத்திநிபாதமுண்டாய் ஞானம் பிரகாசிக்குமிடத்து மறைப்பு நீங்கு மவதரத்தைக் காணப் பக்குவ மென்றீராயின்; இணையிலி யாயினை யென்பதை யறியேன் தேவரீர்க்கும் இணையிலி யென்பதில்லையாமது யாதெனின்; யானே நீக்கினுந் தானே நீங்கினுங் கோனே வேண்டா கூறல் வேண்டும் அவ்விருள் பக்குவத்திலே தானே நீங்குமாயினும் நானே நீக்குவேனாயினுந் தேவரீர்வேண்டாவாம், இத்தன்மை யருளவேண்டும் அது வருமுறைமை; காண்பார் யார்கொல் காட்டாக்கால் எனும் மாண்புரை யுணர்ந்திலை மன்ற பாண்டியன் கேட்பக் கிளர்த்த மெய்ஞ்ஞானத்தின் ஆட்பாலவர்க்கருள் என்பதை யறியே ‘ஆட்டு வித்தாலாரொருவ ராடாதாரே’ (அப்பர் 6 :95:3) என்னுந் திருப்பாட்டிலே ‘காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாடக்கலே’ யென்றதை நிச்சயமாக அறிந்தாயில்லை, அதுவுமன்றிப் பாண்டியன் காண எழுதி வைகையிலிட்ட மெய்ம்மைப் பொருளில் ‘ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும்’ (சம்பந்தர் 3 : 54 : 4) என்னுந் திருப்பாட்டின்படிக் கொள்வதுமே அறிவேனென்றவாறு.

குறிப்புரை:

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Nature of God

O Lord Meikandan who made Your avatar
In Vennainallur and who is like the sun
That chases away the murk of the wide
And extensive earth!
O you, the divine One, who retrieved me
From the prison of murky nescience which is Kali
And steeped me in Your endless Bliss!
Permit me to place before You a question.
You are one with me beginninglessly.
Yet how is it that I did not cognize You then?
If you say it is because I am mala-ridden,
It would mean you dwelt apart from me
Till Aanavamala’s disappearance from me.
Your pervasion is ubiquitous.
So, it is to be deemed as a wonder indeed,
As nescience is still clinging to me
Notwithstanding Your universal pervasion.
So, the dictum that You are the Foe unto Murk
Stands falsified.
Again Your absolute purity, eternal freedom
From malas, Your lordship of Light, Liberation
And supreme Godhead disbecome You.
If You, my Lord, say that You stand apart
Whilst You enlighten me, alas,
Your cosmic pervasion stands jeopardized.
Again Your confrment of deliverance
Ceases to be true.
How can I accept as true the great
Taandaka Hymn which hails you as totally
Pervading the great earth, fire, water, soul and air?
So, do tell me if You are one with me
Or distanced from me?
Do not feel enraged at my parviscience.
If You say that I speak out of ignorance
Lacking mellowness, and that as guru
You grace me when I gain mellowness,
I still maintain that your enlightenment
As guru, will be of no avail to me
Who continue to be raw and incompetent.
If maturity alone counts then I should
Adore that and not You. If however You aver
That Your advent synchronises with my gain
Of mellowness, I will yet contend
That my mellowness cannot force Your advent.
If it does, it is mellowness that becomes primal
And your unrivalled primacy is at shake.
If it is said maturity has reference
To the three malas, it cannot be so,
As the three malas are jada (inanimate);
The soul too needs no mellowness, as it is
Free from infancy, youth and dotage.
As you are ever free from malas, you too do not
Need it. So, I ask; “Who or what is in need
Of mellowness?” if you say that the hour
Of mellowness is marked by the soul’s liberation
From nescience thanks to it iruvinai-oppu
And the advent of Satthinipaatam which
Nullifies the power of Aanavamala,
Can it, I ask you, bespeak your peerlessness?
If you asseverate that the removal
Of Aanavamala is indeed mellowness, then
I ask: “Does that mala by itself move away
From me? Or is it the soul that discards it?”
In either case, your help, O Ruler, is superfluous.
I know nothing happens but for you.
So, what indeed is the role of mellowness?
What indeed is its meaning? Please clarify.

The guru answers:
Alas, you, the soul, know not the message
Of the hymn that affirms thus:
“Who can behold at all if the brow-eyed Lord
Does not choose to reveal?”
So, learn of the truth taught to the Paandya
Which says: “Limit there is none for Siva’s
Primal majesty and the ways through which
He graces the souls; cease questioning”.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀡𑁆𑀡𑀓𑀷𑁆 𑀜𑀸𑀮𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀢𑀺𑀭𑀯𑀷𑁆 𑀶𑀸𑀷𑁂𑁆𑀷
𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺𑀬 𑀫𑁂𑁆𑀬𑁆𑀓𑀡𑁆𑀝 𑀢𑁂𑀯
𑀓𑀸𑀭𑀸𑀭𑁆 𑀓𑀺𑀭𑀓𑀓𑁆 𑀓𑀮𑀺𑀬𑀸𑀵𑁆 𑀯𑁂𑀷𑁃𑀦𑀺𑀷𑁆
𑀧𑁂𑀭𑀸 𑀯𑀺𑀷𑁆𑀧𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫

5 𑀯𑀺𑀷𑀯 𑀮𑀸𑀷𑀸 𑀢𑀼𑀝𑁃𑀬𑁂𑀷𑁆 𑀏𑁆𑀷𑀢𑀼𑀴𑀫𑁆
𑀦𑀻𑀗𑁆𑀓𑀸 𑀦𑀺𑀮𑁃𑀫𑁃 𑀬𑀽𑀗𑁆𑀓𑀼 𑀫𑀼𑀴𑁃𑀬𑀸𑀮𑁆
𑀅𑀶𑀺𑀯𑀺𑀷𑁆 𑀫𑁃𑀫𑀮𑀫𑁆 𑀧𑀺𑀶𑀺𑀯𑀺𑀷𑁆 𑀫𑁃𑀬𑁂𑁆𑀷𑀺𑀷𑁆
𑀑𑀭𑀸𑀮𑀺𑀷𑁃 𑀬𑀼𑀡𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀯𑀺𑀭𑀸𑀬𑁆𑀦𑀺𑀷𑁆 𑀶𑀷𑁃𑀬𑁂𑀮𑁆
𑀢𑀺𑀧𑁆𑀧𑀺𑀬𑀫𑁆 𑀅𑀦𑁆𑀢𑁄 𑀧𑁄𑁆𑀬𑁆𑀧𑁆𑀧𑀓𑁃 𑀬𑀸𑀓𑀸𑀬𑁆

10 𑀘𑀼𑀢𑁆𑀢𑀷𑁆 𑀅𑀫𑀮𑀷𑁆 𑀘𑁄𑀢𑀺 𑀦𑀸𑀬𑀓𑀷𑁆
𑀫𑀼𑀢𑁆𑀢𑀷𑁆 𑀧𑀭𑀫𑁆𑀧𑀭 𑀷𑁂𑁆𑀷𑀼𑀫𑁆𑀧𑁂𑁆𑀬𑀭𑁆 𑀫𑀼𑀝𑀺𑀬𑀸
𑀯𑁂𑀶𑀼𑀦𑀺𑀷𑁆 𑀶𑀼𑀡𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀯𑀺𑀬𑀸𑀧𑀓 𑀫𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆𑀧𑁆
𑀧𑁂𑀶𑀼𑀫𑀺𑀷𑁆 𑀶𑀸𑀓𑀼𑀫𑁆 𑀏𑁆𑀫𑀓𑁆𑀓𑁂𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫
𑀇𑀭𑀼𑀦𑀺𑀮𑀦𑁆 𑀢𑀻𑀦𑀻𑀭𑁆 𑀇𑀬𑀫𑀸𑀷𑀷𑁆 𑀓𑀸𑀮𑁂𑁆𑀷𑀼𑀫𑁆

15 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑀺𑀮𑁃𑀢𑁆 𑀢𑀸𑀡𑁆𑀝𑀯𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀶𑁆 𑀓𑀺𑀮𑀸𑀢𑀮𑀺𑀷𑁆
𑀯𑁂𑀶𑁄 𑀯𑀼𑀝𑀷𑁄 𑀯𑀺𑀴𑀫𑁆𑀧𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀜𑁆
𑀘𑀻𑀶𑀺 𑀬𑀭𑀼𑀴𑀮𑁆 𑀘𑀺𑀶𑀼𑀫𑁃 𑀬𑀼𑀝𑁃𑀢𑁆𑀢𑀸𑀮𑁆
𑀅𑀶𑀺𑀬𑀸𑀢𑀼 𑀓𑀽𑀶𑀺𑀷𑁃 𑀬𑀧𑀓𑁆𑀓𑀼𑀯 𑀧𑀓𑁆𑀓𑀼𑀯𑀓𑁆
𑀓𑀼𑀶𑀺𑀧𑀸𑀭𑁆𑀢𑁆 𑀢𑀭𑀼𑀴𑀺𑀷𑀗𑁆 𑀓𑀼𑀭𑀼𑀫𑀼𑀢 𑀮𑀸𑀬𑁂𑁆𑀷𑀺𑀷𑁆

20 𑀅𑀧𑀓𑁆𑀓𑀼𑀯 𑀫𑀭𑀼𑀴𑀺𑀷𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀬𑁂𑀷𑁆 𑀫𑀺𑀓𑀢𑁆𑀢𑀓𑀼𑀫𑁆
𑀧𑀓𑁆𑀓𑀼𑀯𑀫𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀶𑁆 𑀧𑀬𑀷𑀺𑀮𑁃 𑀦𑀺𑀷𑁆𑀷𑀸𑀶𑁆
𑀧𑀓𑁆𑀓𑀼𑀯 𑀫𑀢𑀷𑀸𑀶𑁆 𑀧𑀬𑀷𑁆𑀦𑀻 𑀯𑀭𑀺𑀷𑁂
𑀦𑀺𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀭𑀼𑀯𑀫𑁆 𑀦𑀺𑀓𑀵𑁆𑀢𑁆𑀢𑀸 𑀢𑀷𑁆𑀷𑁄
𑀢𑀷𑁆𑀷𑁄𑁆𑀧𑁆 𑀧𑀸𑀭𑀺𑀮𑀺 𑀬𑁂𑁆𑀷𑁆𑀧𑀢𑀼𑀦𑁆 𑀢𑀓𑀼𑀫𑁂

25 𑀫𑀼𑀫𑁆𑀫𑀮𑀜𑁆 𑀘𑀝𑀫𑀡𑀼 𑀫𑀽𑀧𑁆𑀧𑀺𑀴 𑀫𑁃𑀬𑀺𑀷𑁆𑀦𑀻
𑀦𑀺𑀷𑁆𑀫𑀮𑀷𑁆 𑀧𑀭𑀼𑀯𑀫𑁆 𑀦𑀺𑀓𑀵𑁆𑀢𑁆𑀢𑀺𑀬 𑀢𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁄
𑀉𑀡𑀭𑁆𑀯𑁂𑁆𑀵𑀼 𑀦𑀻𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑁃 𑀑𑀢𑀺𑀬 𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑁂
𑀇𑀡𑁃𑀬𑀺𑀮𑀺 𑀬𑀸𑀬𑀺𑀷𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀧𑀢𑁃 𑀬𑀶𑀺𑀬𑁂𑀷𑁆
𑀬𑀸𑀷𑁂 𑀦𑀻𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀦𑁆 𑀢𑀸𑀷𑁂 𑀦𑀻𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀗𑁆

30 𑀓𑁄𑀷𑁂 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀓𑀽𑀶𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀗𑁆
𑀓𑀸𑀡𑁆𑀧𑀸𑀭𑁆 𑀬𑀸𑀭𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀸𑀓𑁆 𑀓𑀸𑀮𑁂𑁆𑀷𑀼𑀫𑁆
𑀫𑀸𑀡𑁆𑀧𑀼𑀭𑁃 𑀬𑀼𑀡𑀭𑁆𑀦𑁆𑀢𑀺𑀮𑁃 𑀫𑀷𑁆𑀶 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀬𑀷𑁆
𑀓𑁂𑀝𑁆𑀧𑀓𑁆 𑀓𑀺𑀴𑀓𑁆𑀓𑀼 𑀫𑁂𑁆𑀬𑁆𑀜𑁆𑀜𑀸 𑀷𑀢𑁆𑀢𑀺𑀷𑁆
𑀆𑀝𑁆𑀧𑀸 𑀮𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀭𑀼𑀴𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀢𑁃 𑀬𑀶𑀺𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কণ্ণহন়্‌ ঞালত্তুক্ কদিরৱণ্ড্রান়েন়
ৱেণ্ণেয্ত্ তোণ্ড্রিয মেয্গণ্ড তেৱ
কারার্ কিরহক্ কলিযাৰ়্‌ ৱেন়ৈনিন়্‌
পেরা ৱিন়্‌বত্ তিরুত্তিয পেরুম

৫ ৱিন়ৱ লান়া তুডৈযেন়্‌ এন়দুৰম্
নীঙ্গা নিলৈমৈ যূঙ্গু মুৰৈযাল্
অর়িৱিন়্‌ মৈমলম্ পির়িৱিন়্‌ মৈযেন়িন়্‌
ওরালিন়ৈ যুণর্ত্তুম্ ৱিরায্নিণ্ড্রন়ৈযেল্
তিপ্পিযম্ অন্দো পোয্প্পহৈ যাহায্

১০ সুত্তন়্‌ অমলন়্‌ সোদি নাযহন়্‌
মুত্তন়্‌ পরম্বর ন়েন়ুম্বেযর্ মুডিযা
ৱের়ুনিণ্ড্রুণর্ত্তিন়্‌ ৱিযাবহ মিণ্ড্রায্প্
পের়ুমিণ্ড্রাহুম্ এমক্কেম্ পেরুম
ইরুনিলন্ দীনীর্ ইযমান়ন়্‌ কালেন়ুম্

১৫ পেরুনিলৈত্ তাণ্ডৱম্ পেরুমার়্‌ কিলাদলিন়্‌
ৱের়ো ৱুডন়ো ৱিৰম্বল্ ৱেণ্ডুঞ্
সীর়ি যরুৰল্ সির়ুমৈ যুডৈত্তাল্
অর়িযাদু কূর়িন়ৈ যবক্কুৱ পক্কুৱক্
কুর়িবার্ত্ তরুৰিন়ঙ্ কুরুমুদ লাযেন়িন়্‌

২০ অবক্কুৱ মরুৰিন়ুম্ অর়িযেন়্‌ মিহত্তহুম্
পক্কুৱম্ ৱেণ্ডির়্‌ পযন়িলৈ নিন়্‌ন়ার়্‌
পক্কুৱ মদন়ার়্‌ পযন়্‌নী ৱরিন়ে
নিন়্‌ন়ৈপ্ পরুৱম্ নিহৰ়্‌ত্তা তন়্‌ন়ো
তন়্‌ন়োপ্ পারিলি যেন়্‌বদুন্ দহুমে

২৫ মুম্মলঞ্ সডমণু মূপ্পিৰ মৈযিন়্‌নী
নিন়্‌মলন়্‌ পরুৱম্ নিহৰ়্‌ত্তিয তিযার্ক্কো
উণর্ৱেৰ়ু নীক্কত্তৈ ওদিয তেন়িন়ে
ইণৈযিলি যাযিন়ৈ যেন়্‌বদৈ যর়িযেন়্‌
যান়ে নীক্কিন়ুন্ দান়ে নীক্কিন়ুঙ্

৩০ কোন়ে ৱেণ্ডা কূর়ল্ ৱেণ্ডুঙ্
কাণ্বার্ যার্গোল্ কাট্টাক্ কালেন়ুম্
মাণ্বুরৈ যুণর্ন্দিলৈ মণ্ড্র পাণ্ডিযন়্‌
কেট্পক্ কিৰক্কু মেয্ঞ্ঞা ন়ত্তিন়্‌
আট্পা লৱর্ক্করুৰ‍্ এন়্‌বদৈ যর়িযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் றானென
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ
காரார் கிரகக் கலியாழ் வேனைநின்
பேரா வின்பத் திருத்திய பெரும

5 வினவ லானா துடையேன் எனதுளம்
நீங்கா நிலைமை யூங்கு முளையால்
அறிவின் மைமலம் பிறிவின் மையெனின்
ஓராலினை யுணர்த்தும் விராய்நின் றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை யாகாய்

10 சுத்தன் அமலன் சோதி நாயகன்
முத்தன் பரம்பர னெனும்பெயர் முடியா
வேறுநின் றுணர்த்தின் வியாபக மின்றாய்ப்
பேறுமின் றாகும் எமக்கெம் பெரும
இருநிலந் தீநீர் இயமானன் காலெனும்

15 பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின்
வேறோ வுடனோ விளம்பல் வேண்டுஞ்
சீறி யருளல் சிறுமை யுடைத்தால்
அறியாது கூறினை யபக்குவ பக்குவக்
குறிபார்த் தருளினங் குருமுத லாயெனின்

20 அபக்குவ மருளினும் அறியேன் மிகத்தகும்
பக்குவம் வேண்டிற் பயனிலை நின்னாற்
பக்குவ மதனாற் பயன்நீ வரினே
நின்னைப் பருவம் நிகழ்த்தா தன்னோ
தன்னொப் பாரிலி யென்பதுந் தகுமே

25 மும்மலஞ் சடமணு மூப்பிள மையின்நீ
நின்மலன் பருவம் நிகழ்த்திய தியார்க்கோ
உணர்வெழு நீக்கத்தை ஓதிய தெனினே
இணையிலி யாயினை யென்பதை யறியேன்
யானே நீக்கினுந் தானே நீக்கினுங்

30 கோனே வேண்டா கூறல் வேண்டுங்
காண்பார் யார்கொல் காட்டாக் காலெனும்
மாண்புரை யுணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞா னத்தின்
ஆட்பா லவர்க்கருள் என்பதை யறியே


Open the Thamizhi Section in a New Tab
கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் றானென
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ
காரார் கிரகக் கலியாழ் வேனைநின்
பேரா வின்பத் திருத்திய பெரும

5 வினவ லானா துடையேன் எனதுளம்
நீங்கா நிலைமை யூங்கு முளையால்
அறிவின் மைமலம் பிறிவின் மையெனின்
ஓராலினை யுணர்த்தும் விராய்நின் றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை யாகாய்

10 சுத்தன் அமலன் சோதி நாயகன்
முத்தன் பரம்பர னெனும்பெயர் முடியா
வேறுநின் றுணர்த்தின் வியாபக மின்றாய்ப்
பேறுமின் றாகும் எமக்கெம் பெரும
இருநிலந் தீநீர் இயமானன் காலெனும்

15 பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின்
வேறோ வுடனோ விளம்பல் வேண்டுஞ்
சீறி யருளல் சிறுமை யுடைத்தால்
அறியாது கூறினை யபக்குவ பக்குவக்
குறிபார்த் தருளினங் குருமுத லாயெனின்

20 அபக்குவ மருளினும் அறியேன் மிகத்தகும்
பக்குவம் வேண்டிற் பயனிலை நின்னாற்
பக்குவ மதனாற் பயன்நீ வரினே
நின்னைப் பருவம் நிகழ்த்தா தன்னோ
தன்னொப் பாரிலி யென்பதுந் தகுமே

25 மும்மலஞ் சடமணு மூப்பிள மையின்நீ
நின்மலன் பருவம் நிகழ்த்திய தியார்க்கோ
உணர்வெழு நீக்கத்தை ஓதிய தெனினே
இணையிலி யாயினை யென்பதை யறியேன்
யானே நீக்கினுந் தானே நீக்கினுங்

30 கோனே வேண்டா கூறல் வேண்டுங்
காண்பார் யார்கொல் காட்டாக் காலெனும்
மாண்புரை யுணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞா னத்தின்
ஆட்பா லவர்க்கருள் என்பதை யறியே

Open the Reformed Script Section in a New Tab
कण्णहऩ् ञालत्तुक् कदिरवण्ड्राऩॆऩ
वॆण्णॆय्त् तोण्ड्रिय मॆय्गण्ड तेव
कारार् किरहक् कलियाऴ् वेऩैनिऩ्
पेरा विऩ्बत् तिरुत्तिय पॆरुम

५ विऩव लाऩा तुडैयेऩ् ऎऩदुळम्
नीङ्गा निलैमै यूङ्गु मुळैयाल्
अऱिविऩ् मैमलम् पिऱिविऩ् मैयॆऩिऩ्
ओरालिऩै युणर्त्तुम् विराय्निण्ड्रऩैयेल्
तिप्पियम् अन्दो पॊय्प्पहै याहाय्

१० सुत्तऩ् अमलऩ् सोदि नायहऩ्
मुत्तऩ् परम्बर ऩॆऩुम्बॆयर् मुडिया
वेऱुनिण्ड्रुणर्त्तिऩ् वियाबह मिण्ड्राय्प्
पेऱुमिण्ड्राहुम् ऎमक्कॆम् पॆरुम
इरुनिलन् दीनीर् इयमाऩऩ् कालॆऩुम्

१५ पॆरुनिलैत् ताण्डवम् पॆरुमाऱ् किलादलिऩ्
वेऱो वुडऩो विळम्बल् वेण्डुञ्
सीऱि यरुळल् सिऱुमै युडैत्ताल्
अऱियादु कूऱिऩै यबक्कुव पक्कुवक्
कुऱिबार्त् तरुळिऩङ् कुरुमुद लायॆऩिऩ्

२० अबक्कुव मरुळिऩुम् अऱियेऩ् मिहत्तहुम्
पक्कुवम् वेण्डिऱ् पयऩिलै निऩ्ऩाऱ्
पक्कुव मदऩाऱ् पयऩ्नी वरिऩे
निऩ्ऩैप् परुवम् निहऴ्त्ता तऩ्ऩो
तऩ्ऩॊप् पारिलि यॆऩ्बदुन् दहुमे

२५ मुम्मलञ् सडमणु मूप्पिळ मैयिऩ्नी
निऩ्मलऩ् परुवम् निहऴ्त्तिय तियार्क्को
उणर्वॆऴु नीक्कत्तै ओदिय तॆऩिऩे
इणैयिलि यायिऩै यॆऩ्बदै यऱियेऩ्
याऩे नीक्किऩुन् दाऩे नीक्किऩुङ्

३० कोऩे वेण्डा कूऱल् वेण्डुङ्
काण्बार् यार्गॊल् काट्टाक् कालॆऩुम्
माण्बुरै युणर्न्दिलै मण्ड्र पाण्डियऩ्
केट्पक् किळक्कु मॆय्ञ्ञा ऩत्तिऩ्
आट्पा लवर्क्करुळ् ऎऩ्बदै यऱिये
Open the Devanagari Section in a New Tab
ಕಣ್ಣಹನ್ ಞಾಲತ್ತುಕ್ ಕದಿರವಂಡ್ರಾನೆನ
ವೆಣ್ಣೆಯ್ತ್ ತೋಂಡ್ರಿಯ ಮೆಯ್ಗಂಡ ತೇವ
ಕಾರಾರ್ ಕಿರಹಕ್ ಕಲಿಯಾೞ್ ವೇನೈನಿನ್
ಪೇರಾ ವಿನ್ಬತ್ ತಿರುತ್ತಿಯ ಪೆರುಮ

೫ ವಿನವ ಲಾನಾ ತುಡೈಯೇನ್ ಎನದುಳಂ
ನೀಂಗಾ ನಿಲೈಮೈ ಯೂಂಗು ಮುಳೈಯಾಲ್
ಅಱಿವಿನ್ ಮೈಮಲಂ ಪಿಱಿವಿನ್ ಮೈಯೆನಿನ್
ಓರಾಲಿನೈ ಯುಣರ್ತ್ತುಂ ವಿರಾಯ್ನಿಂಡ್ರನೈಯೇಲ್
ತಿಪ್ಪಿಯಂ ಅಂದೋ ಪೊಯ್ಪ್ಪಹೈ ಯಾಹಾಯ್

೧೦ ಸುತ್ತನ್ ಅಮಲನ್ ಸೋದಿ ನಾಯಹನ್
ಮುತ್ತನ್ ಪರಂಬರ ನೆನುಂಬೆಯರ್ ಮುಡಿಯಾ
ವೇಱುನಿಂಡ್ರುಣರ್ತ್ತಿನ್ ವಿಯಾಬಹ ಮಿಂಡ್ರಾಯ್ಪ್
ಪೇಱುಮಿಂಡ್ರಾಹುಂ ಎಮಕ್ಕೆಂ ಪೆರುಮ
ಇರುನಿಲನ್ ದೀನೀರ್ ಇಯಮಾನನ್ ಕಾಲೆನುಂ

೧೫ ಪೆರುನಿಲೈತ್ ತಾಂಡವಂ ಪೆರುಮಾಱ್ ಕಿಲಾದಲಿನ್
ವೇಱೋ ವುಡನೋ ವಿಳಂಬಲ್ ವೇಂಡುಞ್
ಸೀಱಿ ಯರುಳಲ್ ಸಿಱುಮೈ ಯುಡೈತ್ತಾಲ್
ಅಱಿಯಾದು ಕೂಱಿನೈ ಯಬಕ್ಕುವ ಪಕ್ಕುವಕ್
ಕುಱಿಬಾರ್ತ್ ತರುಳಿನಙ್ ಕುರುಮುದ ಲಾಯೆನಿನ್

೨೦ ಅಬಕ್ಕುವ ಮರುಳಿನುಂ ಅಱಿಯೇನ್ ಮಿಹತ್ತಹುಂ
ಪಕ್ಕುವಂ ವೇಂಡಿಱ್ ಪಯನಿಲೈ ನಿನ್ನಾಱ್
ಪಕ್ಕುವ ಮದನಾಱ್ ಪಯನ್ನೀ ವರಿನೇ
ನಿನ್ನೈಪ್ ಪರುವಂ ನಿಹೞ್ತ್ತಾ ತನ್ನೋ
ತನ್ನೊಪ್ ಪಾರಿಲಿ ಯೆನ್ಬದುನ್ ದಹುಮೇ

೨೫ ಮುಮ್ಮಲಞ್ ಸಡಮಣು ಮೂಪ್ಪಿಳ ಮೈಯಿನ್ನೀ
ನಿನ್ಮಲನ್ ಪರುವಂ ನಿಹೞ್ತ್ತಿಯ ತಿಯಾರ್ಕ್ಕೋ
ಉಣರ್ವೆೞು ನೀಕ್ಕತ್ತೈ ಓದಿಯ ತೆನಿನೇ
ಇಣೈಯಿಲಿ ಯಾಯಿನೈ ಯೆನ್ಬದೈ ಯಱಿಯೇನ್
ಯಾನೇ ನೀಕ್ಕಿನುನ್ ದಾನೇ ನೀಕ್ಕಿನುಙ್

೩೦ ಕೋನೇ ವೇಂಡಾ ಕೂಱಲ್ ವೇಂಡುಙ್
ಕಾಣ್ಬಾರ್ ಯಾರ್ಗೊಲ್ ಕಾಟ್ಟಾಕ್ ಕಾಲೆನುಂ
ಮಾಣ್ಬುರೈ ಯುಣರ್ಂದಿಲೈ ಮಂಡ್ರ ಪಾಂಡಿಯನ್
ಕೇಟ್ಪಕ್ ಕಿಳಕ್ಕು ಮೆಯ್ಞ್ಞಾ ನತ್ತಿನ್
ಆಟ್ಪಾ ಲವರ್ಕ್ಕರುಳ್ ಎನ್ಬದೈ ಯಱಿಯೇ
Open the Kannada Section in a New Tab
కణ్ణహన్ ఞాలత్తుక్ కదిరవండ్రానెన
వెణ్ణెయ్త్ తోండ్రియ మెయ్గండ తేవ
కారార్ కిరహక్ కలియాళ్ వేనైనిన్
పేరా విన్బత్ తిరుత్తియ పెరుమ

5 వినవ లానా తుడైయేన్ ఎనదుళం
నీంగా నిలైమై యూంగు ముళైయాల్
అఱివిన్ మైమలం పిఱివిన్ మైయెనిన్
ఓరాలినై యుణర్త్తుం విరాయ్నిండ్రనైయేల్
తిప్పియం అందో పొయ్ప్పహై యాహాయ్

10 సుత్తన్ అమలన్ సోది నాయహన్
ముత్తన్ పరంబర నెనుంబెయర్ ముడియా
వేఱునిండ్రుణర్త్తిన్ వియాబహ మిండ్రాయ్ప్
పేఱుమిండ్రాహుం ఎమక్కెం పెరుమ
ఇరునిలన్ దీనీర్ ఇయమానన్ కాలెనుం

15 పెరునిలైత్ తాండవం పెరుమాఱ్ కిలాదలిన్
వేఱో వుడనో విళంబల్ వేండుఞ్
సీఱి యరుళల్ సిఱుమై యుడైత్తాల్
అఱియాదు కూఱినై యబక్కువ పక్కువక్
కుఱిబార్త్ తరుళినఙ్ కురుముద లాయెనిన్

20 అబక్కువ మరుళినుం అఱియేన్ మిహత్తహుం
పక్కువం వేండిఱ్ పయనిలై నిన్నాఱ్
పక్కువ మదనాఱ్ పయన్నీ వరినే
నిన్నైప్ పరువం నిహళ్త్తా తన్నో
తన్నొప్ పారిలి యెన్బదున్ దహుమే

25 ముమ్మలఞ్ సడమణు మూప్పిళ మైయిన్నీ
నిన్మలన్ పరువం నిహళ్త్తియ తియార్క్కో
ఉణర్వెళు నీక్కత్తై ఓదియ తెనినే
ఇణైయిలి యాయినై యెన్బదై యఱియేన్
యానే నీక్కినున్ దానే నీక్కినుఙ్

30 కోనే వేండా కూఱల్ వేండుఙ్
కాణ్బార్ యార్గొల్ కాట్టాక్ కాలెనుం
మాణ్బురై యుణర్ందిలై మండ్ర పాండియన్
కేట్పక్ కిళక్కు మెయ్ఞ్ఞా నత్తిన్
ఆట్పా లవర్క్కరుళ్ ఎన్బదై యఱియే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කණ්ණහන් ඥාලත්තුක් කදිරවන්‍රානෙන
වෙණ්ණෙය්ත් තෝන්‍රිය මෙය්හණ්ඩ තේව
කාරාර් කිරහක් කලියාළ් වේනෛනින්
පේරා වින්බත් තිරුත්තිය පෙරුම

5 විනව ලානා තුඩෛයේන් එනදුළම්
නීංගා නිලෛමෛ යූංගු මුළෛයාල්
අරිවින් මෛමලම් පිරිවින් මෛයෙනින්
ඕරාලිනෛ යුණර්ත්තුම් විරාය්නින්‍රනෛයේල්
තිප්පියම් අන්දෝ පොය්ප්පහෛ යාහාය්

10 සුත්තන් අමලන් සෝදි නායහන්
මුත්තන් පරම්බර නෙනුම්බෙයර් මුඩියා
වේරුනින්‍රුණර්ත්තින් වියාබහ මින්‍රාය්ප්
පේරුමින්‍රාහුම් එමක්කෙම් පෙරුම
ඉරුනිලන් දීනීර් ඉයමානන් කාලෙනුම්

15 පෙරුනිලෛත් තාණ්ඩවම් පෙරුමාර් කිලාදලින්
වේරෝ වුඩනෝ විළම්බල් වේණ්ඩුඥ්
සීරි යරුළල් සිරුමෛ යුඩෛත්තාල්
අරියාදු කූරිනෛ යබක්කුව පක්කුවක්
කුරිබාර්ත් තරුළිනඞ් කුරුමුද ලායෙනින්

20 අබක්කුව මරුළිනුම් අරියේන් මිහත්තහුම්
පක්කුවම් වේණ්ඩිර් පයනිලෛ නින්නාර්
පක්කුව මදනාර් පයන්නී වරිනේ
නින්නෛප් පරුවම් නිහළ්ත්තා තන්නෝ
තන්නොප් පාරිලි යෙන්බදුන් දහුමේ

25 මුම්මලඥ් සඩමණු මූප්පිළ මෛයින්නී
නින්මලන් පරුවම් නිහළ්ත්තිය තියාර්ක්කෝ
උණර්වෙළු නීක්කත්තෛ ඕදිය තෙනිනේ
ඉණෛයිලි යායිනෛ යෙන්බදෛ යරියේන්
යානේ නීක්කිනුන් දානේ නීක්කිනුඞ්

30 කෝනේ වේණ්ඩා කූරල් වේණ්ඩුඞ්
කාණ්බාර් යාර්හොල් කාට්ටාක් කාලෙනුම්
මාණ්බුරෛ යුණර්න්දිලෛ මන්‍ර පාණ්ඩියන්
කේට්පක් කිළක්කු මෙය්ඥ්ඥා නත්තින්
ආට්පා ලවර්ක්කරුළ් එන්බදෛ යරියේ


Open the Sinhala Section in a New Tab
കണ്ണകന്‍ ഞാലത്തുക് കതിരവന്‍ റാനെന
വെണ്ണെയ്ത് തോന്‍റിയ മെയ്കണ്ട തേവ
കാരാര്‍ കിരകക് കലിയാഴ് വേനൈനിന്‍
പേരാ വിന്‍പത് തിരുത്തിയ പെരുമ

5 വിനവ ലാനാ തുടൈയേന്‍ എനതുളം
നീങ്കാ നിലൈമൈ യൂങ്കു മുളൈയാല്‍
അറിവിന്‍ മൈമലം പിറിവിന്‍ മൈയെനിന്‍
ഓരാലിനൈ യുണര്‍ത്തും വിരായ്നിന്‍ റനൈയേല്‍
തിപ്പിയം അന്തോ പൊയ്പ്പകൈ യാകായ്

10 ചുത്തന്‍ അമലന്‍ ചോതി നായകന്‍
മുത്തന്‍ പരംപര നെനുംപെയര്‍ മുടിയാ
വേറുനിന്‍ റുണര്‍ത്തിന്‍ വിയാപക മിന്‍റായ്പ്
പേറുമിന്‍ റാകും എമക്കെം പെരുമ
ഇരുനിലന്‍ തീനീര്‍ ഇയമാനന്‍ കാലെനും

15 പെരുനിലൈത് താണ്ടവം പെരുമാറ് കിലാതലിന്‍
വേറോ വുടനോ വിളംപല്‍ വേണ്ടുഞ്
ചീറി യരുളല്‍ ചിറുമൈ യുടൈത്താല്‍
അറിയാതു കൂറിനൈ യപക്കുവ പക്കുവക്
കുറിപാര്‍ത് തരുളിനങ് കുരുമുത ലായെനിന്‍

20 അപക്കുവ മരുളിനും അറിയേന്‍ മികത്തകും
പക്കുവം വേണ്ടിറ് പയനിലൈ നിന്‍നാറ്
പക്കുവ മതനാറ് പയന്‍നീ വരിനേ
നിന്‍നൈപ് പരുവം നികഴ്ത്താ തന്‍നോ
തന്‍നൊപ് പാരിലി യെന്‍പതുന്‍ തകുമേ

25 മുമ്മലഞ് ചടമണു മൂപ്പിള മൈയിന്‍നീ
നിന്‍മലന്‍ പരുവം നികഴ്ത്തിയ തിയാര്‍ക്കോ
ഉണര്‍വെഴു നീക്കത്തൈ ഓതിയ തെനിനേ
ഇണൈയിലി യായിനൈ യെന്‍പതൈ യറിയേന്‍
യാനേ നീക്കിനുന്‍ താനേ നീക്കിനുങ്

30 കോനേ വേണ്ടാ കൂറല്‍ വേണ്ടുങ്
കാണ്‍പാര്‍ യാര്‍കൊല്‍ കാട്ടാക് കാലെനും
മാണ്‍പുരൈ യുണര്‍ന്തിലൈ മന്‍റ പാണ്ടിയന്‍
കേട്പക് കിളക്കു മെയ്ഞ്ഞാ നത്തിന്‍
ആട്പാ ലവര്‍ക്കരുള്‍ എന്‍പതൈ യറിയേ
Open the Malayalam Section in a New Tab
กะณณะกะณ ญาละถถุก กะถิระวะณ ราเณะณะ
เวะณเณะยถ โถณริยะ เมะยกะณดะ เถวะ
การาร กิระกะก กะลิยาฬ เวณายนิณ
เปรา วิณปะถ ถิรุถถิยะ เปะรุมะ

5 วิณะวะ ลาณา ถุดายเยณ เอะณะถุละม
นีงกา นิลายมาย ยูงกุ มุลายยาล
อริวิณ มายมะละม ปิริวิณ มายเยะณิณ
โอราลิณาย ยุณะรถถุม วิรายนิณ ระณายเยล
ถิปปิยะม อนโถ โปะยปปะกาย ยากาย

10 จุถถะณ อมะละณ โจถิ นายะกะณ
มุถถะณ ปะระมปะระ เณะณุมเปะยะร มุดิยา
เวรุนิณ รุณะรถถิณ วิยาปะกะ มิณรายป
เปรุมิณ รากุม เอะมะกเกะม เปะรุมะ
อิรุนิละน ถีนีร อิยะมาณะณ กาเละณุม

15 เปะรุนิลายถ ถาณดะวะม เปะรุมาร กิลาถะลิณ
เวโร วุดะโณ วิละมปะล เวณดุญ
จีริ ยะรุละล จิรุมาย ยุดายถถาล
อริยาถุ กูริณาย ยะปะกกุวะ ปะกกุวะก
กุริปารถ ถะรุลิณะง กุรุมุถะ ลาเยะณิณ

20 อปะกกุวะ มะรุลิณุม อริเยณ มิกะถถะกุม
ปะกกุวะม เวณดิร ปะยะณิลาย นิณณาร
ปะกกุวะ มะถะณาร ปะยะณนี วะริเณ
นิณณายป ปะรุวะม นิกะฬถถา ถะณโณ
ถะณโณะป ปาริลิ เยะณปะถุน ถะกุเม

25 มุมมะละญ จะดะมะณุ มูปปิละ มายยิณนี
นิณมะละณ ปะรุวะม นิกะฬถถิยะ ถิยารกโก
อุณะรเวะฬุ นีกกะถถาย โอถิยะ เถะณิเณ
อิณายยิลิ ยายิณาย เยะณปะถาย ยะริเยณ
ยาเณ นีกกิณุน ถาเณ นีกกิณุง

30 โกเณ เวณดา กูระล เวณดุง
กาณปาร ยารโกะล กาดดาก กาเละณุม
มาณปุราย ยุณะรนถิลาย มะณระ ปาณดิยะณ
เกดปะก กิละกกุ เมะยญญา ณะถถิณ
อาดปา ละวะรกกะรุล เอะณปะถาย ยะริเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကန္နကန္ ညာလထ္ထုက္ ကထိရဝန္ ရာေန့န
ေဝ့န္ေန့ယ္ထ္ ေထာန္ရိယ ေမ့ယ္ကန္တ ေထဝ
ကာရာရ္ ကိရကက္ ကလိယာလ္ ေဝနဲနိန္
ေပရာ ဝိန္ပထ္ ထိရုထ္ထိယ ေပ့ရုမ

5 ဝိနဝ လာနာ ထုတဲေယန္ ေအ့နထုလမ္
နီင္ကာ နိလဲမဲ ယူင္ကု မုလဲယာလ္
အရိဝိန္ မဲမလမ္ ပိရိဝိန္ မဲေယ့နိန္
ေအာရာလိနဲ ယုနရ္ထ္ထုမ္ ဝိရာယ္နိန္ ရနဲေယလ္
ထိပ္ပိယမ္ အန္ေထာ ေပာ့ယ္ပ္ပကဲ ယာကာယ္

10 စုထ္ထန္ အမလန္ ေစာထိ နာယကန္
မုထ္ထန္ ပရမ္ပရ ေန့နုမ္ေပ့ယရ္ မုတိယာ
ေဝရုနိန္ ရုနရ္ထ္ထိန္ ဝိယာပက မိန္ရာယ္ပ္
ေပရုမိန္ ရာကုမ္ ေအ့မက္ေက့မ္ ေပ့ရုမ
အိရုနိလန္ ထီနီရ္ အိယမာနန္ ကာေလ့နုမ္

15 ေပ့ရုနိလဲထ္ ထာန္တဝမ္ ေပ့ရုမာရ္ ကိလာထလိန္
ေဝေရာ ဝုတေနာ ဝိလမ္ပလ္ ေဝန္တုည္
စီရိ ယရုလလ္ စိရုမဲ ယုတဲထ္ထာလ္
အရိယာထု ကူရိနဲ ယပက္ကုဝ ပက္ကုဝက္
ကုရိပာရ္ထ္ ထရုလိနင္ ကုရုမုထ လာေယ့နိန္

20 အပက္ကုဝ မရုလိနုမ္ အရိေယန္ မိကထ္ထကုမ္
ပက္ကုဝမ္ ေဝန္တိရ္ ပယနိလဲ နိန္နာရ္
ပက္ကုဝ မထနာရ္ ပယန္နီ ဝရိေန
နိန္နဲပ္ ပရုဝမ္ နိကလ္ထ္ထာ ထန္ေနာ
ထန္ေနာ့ပ္ ပာရိလိ ေယ့န္ပထုန္ ထကုေမ

25 မုမ္မလည္ စတမနု မူပ္ပိလ မဲယိန္နီ
နိန္မလန္ ပရုဝမ္ နိကလ္ထ္ထိယ ထိယာရ္က္ေကာ
အုနရ္ေဝ့လု နီက္ကထ္ထဲ ေအာထိယ ေထ့နိေန
အိနဲယိလိ ယာယိနဲ ေယ့န္ပထဲ ယရိေယန္
ယာေန နီက္ကိနုန္ ထာေန နီက္ကိနုင္

30 ေကာေန ေဝန္တာ ကူရလ္ ေဝန္တုင္
ကာန္ပာရ္ ယာရ္ေကာ့လ္ ကာတ္တာက္ ကာေလ့နုမ္
မာန္ပုရဲ ယုနရ္န္ထိလဲ မန္ရ ပာန္တိယန္
ေကတ္ပက္ ကိလက္ကု ေမ့ယ္ည္ညာ နထ္ထိန္
အာတ္ပာ လဝရ္က္ကရုလ္ ေအ့န္ပထဲ ယရိေယ


Open the Burmese Section in a New Tab
カニ・ナカニ・ ニャーラタ・トゥク・ カティラヴァニ・ ラーネナ
ヴェニ・ネヤ・タ・ トーニ・リヤ メヤ・カニ・タ テーヴァ
カーラーリ・ キラカク・ カリヤーリ・ ヴェーニイニニ・
ペーラー ヴィニ・パタ・ ティルタ・ティヤ ペルマ

5 ヴィナヴァ ラーナー トゥタイヤエニ・ エナトゥラミ・
ニーニ・カー ニリイマイ ユーニ・ク ムリイヤーリ・
アリヴィニ・ マイマラミ・ ピリヴィニ・ マイイェニニ・
オーラーリニイ ユナリ・タ・トゥミ・ ヴィラーヤ・ニニ・ ラニイヤエリ・
ティピ・ピヤミ・ アニ・トー ポヤ・ピ・パカイ ヤーカーヤ・

10 チュタ・タニ・ アマラニ・ チョーティ ナーヤカニ・
ムタ・タニ・ パラミ・パラ ネヌミ・ペヤリ・ ムティヤー
ヴェールニニ・ ルナリ・タ・ティニ・ ヴィヤーパカ ミニ・ラーヤ・ピ・
ペールミニ・ ラークミ・ エマク・ケミ・ ペルマ
イルニラニ・ ティーニーリ・ イヤマーナニ・ カーレヌミ・

15 ペルニリイタ・ ターニ・タヴァミ・ ペルマーリ・ キラータリニ・
ヴェーロー. ヴタノー ヴィラミ・パリ・ ヴェーニ・トゥニ・
チーリ ヤルラリ・ チルマイ ユタイタ・ターリ・
アリヤートゥ クーリニイ ヤパク・クヴァ パク・クヴァク・
クリパーリ・タ・ タルリナニ・ クルムタ ラーイェニニ・

20 アパク・クヴァ マルリヌミ・ アリヤエニ・ ミカタ・タクミ・
パク・クヴァミ・ ヴェーニ・ティリ・ パヤニリイ ニニ・ナーリ・
パク・クヴァ マタナーリ・ パヤニ・ニー ヴァリネー
ニニ・ニイピ・ パルヴァミ・ ニカリ・タ・ター タニ・ノー
タニ・ノピ・ パーリリ イェニ・パトゥニ・ タクメー

25 ムミ・マラニ・ サタマヌ ムーピ・ピラ マイヤニ・ニー
ニニ・マラニ・ パルヴァミ・ ニカリ・タ・ティヤ ティヤーリ・ク・コー
ウナリ・ヴェル ニーク・カタ・タイ オーティヤ テニネー
イナイヤリ ヤーヤニイ イェニ・パタイ ヤリヤエニ・
ヤーネー ニーク・キヌニ・ ターネー ニーク・キヌニ・

30 コーネー ヴェーニ・ター クーラリ・ ヴェーニ・トゥニ・
カーニ・パーリ・ ヤーリ・コリ・ カータ・ターク・ カーレヌミ・
マーニ・プリイ ユナリ・ニ・ティリイ マニ・ラ パーニ・ティヤニ・
ケータ・パク・ キラク・ク メヤ・ニ・ニャー ナタ・ティニ・
アータ・パー ラヴァリ・ク・カルリ・ エニ・パタイ ヤリヤエ
Open the Japanese Section in a New Tab
gannahan naladdug gadirafandranena
fenneyd dondriya meyganda defa
garar girahag galiyal fenainin
bera finbad diruddiya beruma

5 finafa lana dudaiyen enadulaM
ningga nilaimai yunggu mulaiyal
arifin maimalaM birifin maiyenin
oralinai yunardduM firaynindranaiyel
dibbiyaM ando boybbahai yahay

10 suddan amalan sodi nayahan
muddan baraMbara nenuMbeyar mudiya
ferunindrunarddin fiyabaha mindrayb
berumindrahuM emaggeM beruma
irunilan dinir iyamanan galenuM

15 berunilaid dandafaM berumar giladalin
fero fudano filaMbal fendun
siri yarulal sirumai yudaiddal
ariyadu gurinai yabaggufa baggufag
guribard darulinang gurumuda layenin

20 abaggufa marulinuM ariyen mihaddahuM
baggufaM fendir bayanilai ninnar
baggufa madanar bayanni farine
ninnaib barufaM nihaldda danno
dannob barili yenbadun dahume

25 mummalan sadamanu mubbila maiyinni
ninmalan barufaM nihalddiya diyarggo
unarfelu niggaddai odiya denine
inaiyili yayinai yenbadai yariyen
yane nigginun dane nigginung

30 gone fenda gural fendung
ganbar yargol gaddag galenuM
manburai yunarndilai mandra bandiyan
gedbag gilaggu meynna naddin
adba lafarggarul enbadai yariye
Open the Pinyin Section in a New Tab
كَنَّحَنْ نعالَتُّكْ كَدِرَوَنْدْرانيَنَ
وٕنّيَیْتْ تُوۤنْدْرِیَ ميَیْغَنْدَ تيَۤوَ
كارارْ كِرَحَكْ كَلِیاظْ وٕۤنَيْنِنْ
بيَۤرا وِنْبَتْ تِرُتِّیَ بيَرُمَ

۵ وِنَوَ لانا تُدَيْیيَۤنْ يَنَدُضَن
نِينغْغا نِلَيْمَيْ یُونغْغُ مُضَيْیالْ
اَرِوِنْ مَيْمَلَن بِرِوِنْ مَيْیيَنِنْ
اُوۤرالِنَيْ یُنَرْتُّن وِرایْنِنْدْرَنَيْیيَۤلْ
تِبِّیَن اَنْدُوۤ بُویْبَّحَيْ یاحایْ

۱۰ سُتَّنْ اَمَلَنْ سُوۤدِ نایَحَنْ
مُتَّنْ بَرَنبَرَ نيَنُنبيَیَرْ مُدِیا
وٕۤرُنِنْدْرُنَرْتِّنْ وِیابَحَ مِنْدْرایْبْ
بيَۤرُمِنْدْراحُن يَمَكّيَن بيَرُمَ
اِرُنِلَنْ دِينِيرْ اِیَمانَنْ كاليَنُن

۱۵ بيَرُنِلَيْتْ تانْدَوَن بيَرُمارْ كِلادَلِنْ
وٕۤرُوۤ وُدَنُوۤ وِضَنبَلْ وٕۤنْدُنعْ
سِيرِ یَرُضَلْ سِرُمَيْ یُدَيْتّالْ
اَرِیادُ كُورِنَيْ یَبَكُّوَ بَكُّوَكْ
كُرِبارْتْ تَرُضِنَنغْ كُرُمُدَ لایيَنِنْ

۲۰ اَبَكُّوَ مَرُضِنُن اَرِیيَۤنْ مِحَتَّحُن
بَكُّوَن وٕۤنْدِرْ بَیَنِلَيْ نِنّْارْ
بَكُّوَ مَدَنارْ بَیَنْنِي وَرِنيَۤ
نِنَّْيْبْ بَرُوَن نِحَظْتّا تَنُّْوۤ
تَنُّْوبْ بارِلِ یيَنْبَدُنْ دَحُميَۤ

۲۵ مُمَّلَنعْ سَدَمَنُ مُوبِّضَ مَيْیِنْنِي
نِنْمَلَنْ بَرُوَن نِحَظْتِّیَ تِیارْكُّوۤ
اُنَرْوٕظُ نِيكَّتَّيْ اُوۤدِیَ تيَنِنيَۤ
اِنَيْیِلِ یایِنَيْ یيَنْبَدَيْ یَرِیيَۤنْ
یانيَۤ نِيكِّنُنْ دانيَۤ نِيكِّنُنغْ

۳۰ كُوۤنيَۤ وٕۤنْدا كُورَلْ وٕۤنْدُنغْ
كانْبارْ یارْغُولْ كاتّاكْ كاليَنُن
مانْبُرَيْ یُنَرْنْدِلَيْ مَنْدْرَ بانْدِیَنْ
كيَۤتْبَكْ كِضَكُّ ميَیْنعّا نَتِّنْ
آتْبا لَوَرْكَّرُضْ يَنْبَدَيْ یَرِیيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɳɳʌxʌn̺ ɲɑ:lʌt̪t̪ɨk kʌðɪɾʌʋʌn̺ rɑ:n̺ɛ̝n̺ʌ
ʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯t̪ t̪o:n̺d̺ʳɪɪ̯ə mɛ̝ɪ̯xʌ˞ɳɖə t̪e:ʋʌ
kɑ:ɾɑ:r kɪɾʌxʌk kʌlɪɪ̯ɑ˞:ɻ ʋe:n̺ʌɪ̯n̺ɪn̺
pe:ɾɑ: ʋɪn̺bʌt̪ t̪ɪɾɨt̪t̪ɪɪ̯ə pɛ̝ɾɨmʌ

5 ʋɪn̺ʌʋə lɑ:n̺ɑ: t̪ɨ˞ɽʌjɪ̯e:n̺ ʲɛ̝n̺ʌðɨ˞ɭʼʌm
n̺i:ŋgɑ: n̺ɪlʌɪ̯mʌɪ̯ ɪ̯u:ŋgɨ mʊ˞ɭʼʌjɪ̯ɑ:l
ˀʌɾɪʋɪn̺ mʌɪ̯mʌlʌm pɪɾɪʋɪn̺ mʌjɪ̯ɛ̝n̺ɪn̺
ʷo:ɾɑ:lɪn̺ʌɪ̯ ɪ̯ɨ˞ɳʼʌrt̪t̪ɨm ʋɪɾɑ:ɪ̯n̺ɪn̺ rʌn̺ʌjɪ̯e:l
t̪ɪppɪɪ̯ʌm ˀʌn̪d̪o· po̞ɪ̯ppʌxʌɪ̯ ɪ̯ɑ:xɑ:ɪ̯

10 sʊt̪t̪ʌn̺ ˀʌmʌlʌn̺ so:ðɪ· n̺ɑ:ɪ̯ʌxʌn̺
mʊt̪t̪ʌn̺ pʌɾʌmbʌɾə n̺ɛ̝n̺ɨmbɛ̝ɪ̯ʌr mʊ˞ɽɪɪ̯ɑ:
ʋe:ɾɨn̺ɪn̺ rʊ˞ɳʼʌrt̪t̪ɪn̺ ʋɪɪ̯ɑ:βʌxə mɪn̺d̺ʳɑ:ɪ̯β
pe:ɾɨmɪn̺ rɑ:xɨm ʲɛ̝mʌkkɛ̝m pɛ̝ɾɨmʌ
ʲɪɾɨn̺ɪlʌn̺ t̪i:n̺i:r ʲɪɪ̯ʌmɑ:n̺ʌn̺ kɑ:lɛ̝n̺ɨm

15 pɛ̝ɾɨn̺ɪlʌɪ̯t̪ t̪ɑ˞:ɳɖʌʋʌm pɛ̝ɾɨmɑ:r kɪlɑ:ðʌlɪn̺
ʋe:ɾo· ʋʉ̩˞ɽʌn̺o· ʋɪ˞ɭʼʌmbʌl ʋe˞:ɳɖɨɲ
si:ɾɪ· ɪ̯ʌɾɨ˞ɭʼʌl sɪɾɨmʌɪ̯ ɪ̯ɨ˞ɽʌɪ̯t̪t̪ɑ:l
ˀʌɾɪɪ̯ɑ:ðɨ ku:ɾɪn̺ʌɪ̯ ɪ̯ʌβʌkkɨʋə pʌkkɨʋʌk
kʊɾɪβɑ:rt̪ t̪ʌɾɨ˞ɭʼɪn̺ʌŋ kʊɾʊmʊðə lɑ:ɪ̯ɛ̝n̺ɪn̺

20 ˀʌβʌkkɨʋə mʌɾɨ˞ɭʼɪn̺ɨm ˀʌɾɪɪ̯e:n̺ mɪxʌt̪t̪ʌxɨm
pʌkkɨʋʌm ʋe˞:ɳɖɪr pʌɪ̯ʌn̺ɪlʌɪ̯ n̺ɪn̺n̺ɑ:r
pʌkkɨʋə mʌðʌn̺ɑ:r pʌɪ̯ʌn̺n̺i· ʋʌɾɪn̺e:
n̺ɪn̺n̺ʌɪ̯p pʌɾɨʋʌm n̺ɪxʌ˞ɻt̪t̪ɑ: t̪ʌn̺n̺o:
t̪ʌn̺n̺o̞p pɑ:ɾɪlɪ· ɪ̯ɛ̝n̺bʌðɨn̺ t̪ʌxɨme:

25 mʊmmʌlʌɲ sʌ˞ɽʌmʌ˞ɳʼɨ mu:ppɪ˞ɭʼə mʌjɪ̯ɪn̺n̺i:
n̺ɪn̺mʌlʌn̺ pʌɾɨʋʌm n̺ɪxʌ˞ɻt̪t̪ɪɪ̯ə t̪ɪɪ̯ɑ:rkko:
ʷʊ˞ɳʼʌrʋɛ̝˞ɻɨ n̺i:kkʌt̪t̪ʌɪ̯ ʷo:ðɪɪ̯ə t̪ɛ̝n̺ɪn̺e:
ʲɪ˞ɳʼʌjɪ̯ɪlɪ· ɪ̯ɑ:ɪ̯ɪn̺ʌɪ̯ ɪ̯ɛ̝n̺bʌðʌɪ̯ ɪ̯ʌɾɪɪ̯e:n̺
ɪ̯ɑ:n̺e· n̺i:kkʲɪn̺ɨn̺ t̪ɑ:n̺e· n̺i:kkʲɪn̺ɨŋ

30 ko:n̺e· ʋe˞:ɳɖɑ: ku:ɾʌl ʋe˞:ɳɖɨŋ
kɑ˞:ɳbɑ:r ɪ̯ɑ:rɣo̞l kɑ˞:ʈʈɑ:k kɑ:lɛ̝n̺ɨm
mɑ˞:ɳbʉ̩ɾʌɪ̯ ɪ̯ɨ˞ɳʼʌrn̪d̪ɪlʌɪ̯ mʌn̺d̺ʳə pɑ˞:ɳɖɪɪ̯ʌn̺
ke˞:ʈpʌk kɪ˞ɭʼʌkkɨ mɛ̝ɪ̯ɲɲɑ: n̺ʌt̪t̪ɪn̺
ˀɑ˞:ʈpɑ: lʌʋʌrkkʌɾɨ˞ɭ ʲɛ̝n̺bʌðʌɪ̯ ɪ̯ʌɾɪɪ̯e·
Open the IPA Section in a New Tab
kaṇṇakaṉ ñālattuk katiravaṉ ṟāṉeṉa
veṇṇeyt tōṉṟiya meykaṇṭa tēva
kārār kirakak kaliyāḻ vēṉainiṉ
pērā viṉpat tiruttiya peruma

5 viṉava lāṉā tuṭaiyēṉ eṉatuḷam
nīṅkā nilaimai yūṅku muḷaiyāl
aṟiviṉ maimalam piṟiviṉ maiyeṉiṉ
ōrāliṉai yuṇarttum virāyniṉ ṟaṉaiyēl
tippiyam antō poyppakai yākāy

10 cuttaṉ amalaṉ cōti nāyakaṉ
muttaṉ parampara ṉeṉumpeyar muṭiyā
vēṟuniṉ ṟuṇarttiṉ viyāpaka miṉṟāyp
pēṟumiṉ ṟākum emakkem peruma
irunilan tīnīr iyamāṉaṉ kāleṉum

15 perunilait tāṇṭavam perumāṟ kilātaliṉ
vēṟō vuṭaṉō viḷampal vēṇṭuñ
cīṟi yaruḷal ciṟumai yuṭaittāl
aṟiyātu kūṟiṉai yapakkuva pakkuvak
kuṟipārt taruḷiṉaṅ kurumuta lāyeṉiṉ

20 apakkuva maruḷiṉum aṟiyēṉ mikattakum
pakkuvam vēṇṭiṟ payaṉilai niṉṉāṟ
pakkuva mataṉāṟ payaṉnī variṉē
niṉṉaip paruvam nikaḻttā taṉṉō
taṉṉop pārili yeṉpatun takumē

25 mummalañ caṭamaṇu mūppiḷa maiyiṉnī
niṉmalaṉ paruvam nikaḻttiya tiyārkkō
uṇarveḻu nīkkattai ōtiya teṉiṉē
iṇaiyili yāyiṉai yeṉpatai yaṟiyēṉ
yāṉē nīkkiṉun tāṉē nīkkiṉuṅ

30 kōṉē vēṇṭā kūṟal vēṇṭuṅ
kāṇpār yārkol kāṭṭāk kāleṉum
māṇpurai yuṇarntilai maṉṟa pāṇṭiyaṉ
kēṭpak kiḷakku meyññā ṉattiṉ
āṭpā lavarkkaruḷ eṉpatai yaṟiyē
Open the Diacritic Section in a New Tab
каннaкан гнaaлaттюк катырaвaн раанэнa
вэннэйт тоонрыя мэйкантa тэaвa
кaраар кырaкак калыяaлз вэaнaынын
пэaраа вынпaт тырюттыя пэрюмa

5 вынaвa лаанаа тютaыеaн энaтюлaм
нингкa нылaымaы ёюнгкю мюлaыяaл
арывын мaымaлaм пырывын мaыенын
оораалынaы ёнaрттюм выраайнын рaнaыеaл
тыппыям антоо пойппaкaы яaкaй

10 сюттaн амaлaн сооты нааякан
мюттaн пaрaмпaрa нэнюмпэяр мютыяa
вэaрюнын рюнaрттын выяaпaка мынраайп
пэaрюмын раакюм эмaккэм пэрюмa
ырюнылaн тинир ыямаанaн кaлэнюм

15 пэрюнылaыт таантaвaм пэрюмаат кылаатaлын
вэaроо вютaноо вылaмпaл вэaнтюгн
сиры ярюлaл сырюмaы ётaыттаал
арыяaтю курынaы япaккювa пaккювaк
кюрыпаарт тaрюлынaнг кюрюмютa лааенын

20 апaккювa мaрюлынюм арыеaн мыкаттaкюм
пaккювaм вэaнтыт пaянылaы ныннаат
пaккювa мaтaнаат пaянни вaрынэa
ныннaып пaрювaм ныкалзттаа тaнноо
тaнноп паарылы енпaтюн тaкюмэa

25 мюммaлaгн сaтaмaню муппылa мaыйынни
нынмaлaн пaрювaм ныкалзттыя тыяaрккоо
юнaрвэлзю никкаттaы оотыя тэнынэa
ынaыйылы яaйынaы енпaтaы ярыеaн
яaнэa никкынюн таанэa никкынюнг

30 коонэa вэaнтаа курaл вэaнтюнг
кaнпаар яaркол кaттаак кaлэнюм
маанпюрaы ёнaрнтылaы мaнрa паантыян
кэaтпaк кылaккю мэйгнгнaa нaттын
аатпаа лaвaрккарюл энпaтaы ярыеa
Open the Russian Section in a New Tab
ka'n'nakan gnahlaththuk kathi'rawan rahnena
we'n'nejth thohnrija mejka'nda thehwa
kah'rah'r ki'rakak kalijahsh wehnä:nin
peh'rah winpath thi'ruththija pe'ruma

5 winawa lahnah thudäjehn enathu'lam
:nihngkah :nilämä juhngku mu'läjahl
ariwin mämalam piriwin mäjenin
oh'rahlinä ju'na'rththum wi'rahj:nin ranäjehl
thippijam a:nthoh pojppakä jahkahj

10 zuththan amalan zohthi :nahjakan
muththan pa'rampa'ra nenumpeja'r mudijah
wehru:nin ru'na'rththin wijahpaka minrahjp
pehrumin rahkum emakkem pe'ruma
i'ru:nila:n thih:nih'r ijamahnan kahlenum

15 pe'ru:niläth thah'ndawam pe'rumahr kilahthalin
wehroh wudanoh wi'lampal weh'ndung
sihri ja'ru'lal zirumä judäththahl
arijahthu kuhrinä japakkuwa pakkuwak
kuripah'rth tha'ru'linang ku'rumutha lahjenin

20 apakkuwa ma'ru'linum arijehn mikaththakum
pakkuwam weh'ndir pajanilä :ninnahr
pakkuwa mathanahr pajan:nih wa'rineh
:ninnäp pa'ruwam :nikashththah thannoh
thannop pah'rili jenpathu:n thakumeh

25 mummalang zadama'nu muhppi'la mäjin:nih
:ninmalan pa'ruwam :nikashththija thijah'rkkoh
u'na'rweshu :nihkkaththä ohthija thenineh
i'näjili jahjinä jenpathä jarijehn
jahneh :nihkkinu:n thahneh :nihkkinung

30 kohneh weh'ndah kuhral weh'ndung
kah'npah'r jah'rkol kahddahk kahlenum
mah'npu'rä ju'na'r:nthilä manra pah'ndijan
kehdpak ki'lakku mejnggnah naththin
ahdpah lawa'rkka'ru'l enpathä jarijeh
Open the German Section in a New Tab
kanhnhakan gnaalaththòk kathiravan rhaanèna
vènhnhèiyth thoonrhiya mèiykanhda thèèva
kaaraar kirakak kaliyaalz vèènâinin
pèèraa vinpath thiròththiya pèròma

5 vinava laanaa thòtâiyèèn ènathòlham
niingkaa nilâimâi yöngkò mòlâiyaal
arhivin mâimalam pirhivin mâiyènin
ooraalinâi yònharththòm viraaiynin rhanâiyèèl
thippiyam anthoo poiyppakâi yaakaaiy

10 çòththan amalan çoothi naayakan
mòththan parampara nènòmpèyar mòdiyaa
vèèrhònin rhònharththin viyaapaka minrhaaiyp
pèèrhòmin rhaakòm èmakkèm pèròma
irònilan thiiniir iyamaanan kaalènòm

15 pèrònilâith thaanhdavam pèròmaarh kilaathalin
vèèrhoo vòdanoo vilhampal vèènhdògn
çiirhi yaròlhal çirhòmâi yòtâiththaal
arhiyaathò körhinâi yapakkòva pakkòvak
kòrhipaarth tharòlhinang kòròmòtha laayènin

20 apakkòva maròlhinòm arhiyèèn mikaththakòm
pakkòvam vèènhdirh payanilâi ninnaarh
pakkòva mathanaarh payannii varinèè
ninnâip paròvam nikalzththaa thannoo
thannop paarili yènpathòn thakòmèè

25 mòmmalagn çadamanhò möppilha mâiyeinnii
ninmalan paròvam nikalzththiya thiyaarkkoo
ònharvèlzò niikkaththâi oothiya thèninèè
inhâiyeili yaayeinâi yènpathâi yarhiyèèn
yaanèè niikkinòn thaanèè niikkinòng

30 koonèè vèènhdaa körhal vèènhdòng
kaanhpaar yaarkol kaatdaak kaalènòm
maanhpòrâi yònharnthilâi manrha paanhdiyan
kèètpak kilhakkò mèiygngnaa naththin
aatpaa lavarkkaròlh ènpathâi yarhiyèè
cainhnhacan gnaalaiththuic cathiravan rhaanena
veinhnheyiith thoonrhiya meyicainhta theeva
caaraar ciracaic caliiyaalz veenainin
peeraa vinpaith thiruiththiya peruma

5 vinava laanaa thutaiyieen enathulham
niingcaa nilaimai yiuungcu mulhaiiyaal
arhivin maimalam pirhivin maiyienin
ooraalinai yunhariththum viraayinin rhanaiyieel
thippiyam ainthoo poyippakai iyaacaayi

10 suiththan amalan cioothi naayacan
muiththan parampara nenumpeyar mutiiyaa
veerhunin rhunhariththin viiyaapaca minrhaayip
peerhumin rhaacum emaickem peruma
irunilain thiiniir iyamaanan caalenum

15 perunilaiith thaainhtavam perumaarh cilaathalin
veerhoo vutanoo vilhampal veeinhtuign
ceiirhi yarulhal ceirhumai yutaiiththaal
arhiiyaathu cuurhinai yapaiccuva paiccuvaic
curhipaarith tharulhinang curumutha laayienin

20 apaiccuva marulhinum arhiyieen micaiththacum
paiccuvam veeinhtirh payanilai ninnaarh
paiccuva mathanaarh payannii varinee
ninnaip paruvam nicalziththaa thannoo
thannop paarili yienpathuin thacumee

25 mummalaign ceatamaṇhu muuppilha maiyiinnii
ninmalan paruvam nicalziththiya thiiyaariccoo
unharvelzu niiiccaiththai oothiya theninee
inhaiyiili iyaayiinai yienpathai yarhiyieen
iyaanee niiiccinuin thaanee niiiccinung

30 coonee veeinhtaa cuurhal veeinhtung
caainhpaar iyaarcol caaittaaic caalenum
maainhpurai yunharinthilai manrha paainhtiyan
keeitpaic cilhaiccu meyiigngnaa naiththin
aaitpaa lavariccarulh enpathai yarhiyiee
ka'n'nakan gnaalaththuk kathiravan 'raanena
ve'n'neyth thoan'riya meyka'nda thaeva
kaaraar kirakak kaliyaazh vaenai:nin
paeraa vinpath thiruththiya peruma

5 vinava laanaa thudaiyaen enathu'lam
:neengkaa :nilaimai yoongku mu'laiyaal
a'rivin maimalam pi'rivin maiyenin
oaraalinai yu'narththum viraay:nin 'ranaiyael
thippiyam a:nthoa poyppakai yaakaay

10 suththan amalan soathi :naayakan
muththan parampara nenumpeyar mudiyaa
vae'ru:nin 'ru'narththin viyaapaka min'raayp
pae'rumin 'raakum emakkem peruma
iru:nila:n thee:neer iyamaanan kaalenum

15 peru:nilaith thaa'ndavam perumaa'r kilaathalin
vae'roa vudanoa vi'lampal vae'ndunj
see'ri yaru'lal si'rumai yudaiththaal
a'riyaathu koo'rinai yapakkuva pakkuvak
ku'ripaarth tharu'linang kurumutha laayenin

20 apakkuva maru'linum a'riyaen mikaththakum
pakkuvam vae'ndi'r payanilai :ninnaa'r
pakkuva mathanaa'r payan:nee varinae
:ninnaip paruvam :nikazhththaa thannoa
thannop paarili yenpathu:n thakumae

25 mummalanj sadama'nu mooppi'la maiyin:nee
:ninmalan paruvam :nikazhththiya thiyaarkkoa
u'narvezhu :neekkaththai oathiya theninae
i'naiyili yaayinai yenpathai ya'riyaen
yaanae :neekkinu:n thaanae :neekkinung

30 koanae vae'ndaa koo'ral vae'ndung
kaa'npaar yaarkol kaaddaak kaalenum
maa'npurai yu'nar:nthilai man'ra paa'ndiyan
kaedpak ki'lakku meynjgnaa naththin
aadpaa lavarkkaru'l enpathai ya'riyae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.