பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

தொகை
`கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன்அடியார்க்கும் அடியேன்'
(தி.7 ப.39 பா.7)
வகை
பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்னடியான்
சைவத் திருவுரு வாய்வரத் தானவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாராவிட மனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி பா.53
விரி
தொகை, பொ-ரை: தம் மனைவியின் கைகளை வெட்டிய வரிந்து கட்டப்பட்ட வில்லினையுடைய கலிக்கம்ப நாயனாரின் அடியார்க்கும் அடியேன்.
வகை, பொ-ரை: பொய்யை விலக்கி, நம்புண்ணியராகிய சிவ பிரானுக்கு அடிமைப்பட்டுத், தம் ஏவலன் ஒருவன் சிவனடியார் வேடம் தாங்கிவரத் தாம் அவ்வடியாரின் கால்களைக் கழுவ, உலக மக்களின் முன் நீர்வார்க்க நாணிய மனைவியார், நீர் வார்க்காது நிற்கச் சினந்து அம்மனைவியாரின் கையை வெட்டியவர், பெண்ணாகடத் தில் தோன்றிய கலிக்கம்பர் ஆவர்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.