முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
130 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : மேகராகக்குறிஞ்சி

நீரோடு கூவிளமு நிலாமதியும் வெள்ளெருக்கு நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடு மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

கங்கைநதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது, மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.

குறிப்புரை:

கங்கையோடு வில்வம் எருக்கம்பூ முதலியவற்றைச் சடையிலணிந்த தத்துவனார் தங்குங் கோயில், மேகமண்டலத்தையளாவி, விண்ணையளந்த பொழில்கள் சேர்ந்துள்ள தேரோடும் வீதியிலே உள்ள அரங்குகளில் மகளிர் நடமாடும் ஐயாறு என்கின்றது. கூவிளம் - வில்வம். கார் ஓடி - மேகம் பரந்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గంగానది, బిల్వపత్రములు, చంద్రవంక, తెల్లని ఉమ్మెత్త, కొండ్రై పుష్పములతో నిండిన మాలలు, చల్లని తులసి మున్నగువానిని కేశముడులపై ధరించిన
తత్వమూర్తియైన ఆ పరమేశ్వరుడు వెలసియున్న ఆలయము గలది, మేఘమండలము వరకు ఏపుగ పెరిగి ఆకాశమునంటినట్లు వ్యాపించిన పరిమళములతో నిండిన ఉద్యానవనములు గలది,
సువాసనలను వెదజల్లు గృహములతో కూడి, రథములను ఊరేగించు వీధులతోనుండు వేదికలపైకి, ఆభరణములను ధరించిన స్త్రీలు ఎక్కి నటనమాడు తిరువైయాఱ్రమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಗಂಗಾನದಿ, ಬಿಲ್ವ, ಬಾಲಚಂದ್ರ, ಬಿಳಿಯ ಎಕ್ಕದ ಹೂವು, ಕೊನ್ರೈ ಪುಷ್ಪಗಳು
ತುಂಬಿದಮಾಲೆ, ತಂಪಾಗಿರುವ ತುಳಸಿ-ಇವುಗಳೆಲ್ಲವನ್ನು ತನ್ನ ಕೆಂಜಡೆಯ ಮೇಲೆ
ಅಲಂಕರಿಸಿಕೊಂಡ ತತ್ತ್ವನಾಗಿರುವ ಶಿವಮಹಾದೇವ ತಂಗಿರುವ ಮಂದಿರವಿರುವುದು,
ಮೇಘಮಂಡಲದವರೆಗೂ ಬೆಳೆದು ಹೋಗಿ ಬಾನನ್ನು ಅಳೆದು ಪರಿಮಳವನ್ನು
ಪಸರಿಸುವ ತೋಪುಗಳು ಸುತ್ತುವರೆದಿರುವ, ಕಂಪನ್ನು ಬೀರುವಂತಹ ಮನೆಗಳನ್ನುಳ್ಳ
ರಥ ಚಲಿಸುವ ಮಾರ್ಗಗಳಲ್ಲಿ ರಂಗಮಂಟಪದ ಮೇಲೇರಿ ಆಭರಣಗಳಿಂದ
ಅಲಂಕೃತರಾದ ಎಳೆಯ ಯುವತಿಯರು ನಾಟ್ಯವಾಡುವಂತಹ ತಿರುವೈಯಾರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සුරගඟ බෙලි පත් නව සඳ සුදු එඬරු ඇසල මාලා සිසිල්
කරඳ සිකාව දරා ගත් දසුන්පතියන් වැඩ සිටිනුයේ වලා පෙළ
සිපිනා වන රොද වට‚ මහල් මැදුරු පිරි තේර් රථ යන වීදිවල
වේදිකා මත යොවුන් නළඟනන් රඟනා තිරුවෛයාරු පුදබිමයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु गंगाधारी हैं।
वे विल्वमाला पहने हुए हैं।
प्रभु बालचन्द्र से अलंकृत हैं।
वे श्वेत अर्क पुष्प से सुशोभित हैं।
आरग्वध पुष्पमाला से प्रभु सालंकृत हैं।
शीतल करन्दै पत्तों से अलंकृत हैं।
जटाजूटधारी प्रभु वेदविज्ञ हैं।
वे प्रभु इस मंदिर में प्रतिष्ठित हैं।
मेघाच्छित वाटिकाओं के वृक्षों से सुशोभित
नानाविध पुष्पों से आवृत है तिरुवैयारु।
रथ परिक्रमा की विथियों में
हर कहीं रंगमंच पर महिलाएँ नृत्य सीखनेवाली स्थल
तिरुवैयारु
इस सुंदर सुशोभित तिरुवैयारु में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the temple where Civaṉ the ultimate reality who wears on his caṭai cool basil garland of koṉṟai flowers which are profuse, white yarcum flowers, bael and a crescent along with water (of Kaṅkai), stays.
is Tiruvaiyāṟu where ladies wearing beautiful ornaments, ascend the dancing stage and practise dance where in the streets the garlands spread the fragrance, and gardens which spread fragrance after reaching the region of clouds and seem to measure the sky, where clouds are running.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀭𑁄𑀝𑀼 𑀓𑀽𑀯𑀺𑀴𑀫𑀼 𑀦𑀺𑀮𑀸𑀫𑀢𑀺𑀬𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀢𑁆
𑀢𑀸𑀭𑁄𑀝𑀼 𑀢𑀡𑁆𑀓𑀭𑀦𑁆𑀢𑁃 𑀘𑀝𑁃𑀓𑁆𑀓𑀡𑀺𑀦𑁆𑀢 𑀢𑀢𑁆𑀢𑀼𑀯𑀷𑀸𑀭𑁆 𑀢𑀗𑁆𑀓𑀼𑀗𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀓𑀸𑀭𑁄𑀝𑀺 𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀴𑀦𑁆𑀢𑀼 𑀓𑀝𑀺𑀦𑀸𑀶𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀡𑁃𑀦𑁆𑀢 𑀓𑀫𑀵𑁆𑀢𑀸𑀭𑁆𑀯𑀻𑀢𑀺𑀢𑁆
𑀢𑁂𑀭𑁄𑀝𑀼 𑀫𑀭𑀗𑁆𑀓𑁂𑀶𑀺𑀘𑁆 𑀘𑁂𑀬𑀺𑀵𑁃𑀬𑀸𑀭𑁆 𑀦𑀝𑀫𑁆𑀧𑀬𑀺𑀮𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীরোডু কূৱিৰমু নিলামদিযুম্ ৱেৰ‍্ৰেরুক্কু নির়ৈন্দহোণ্ড্রৈত্
তারোডু তণ্গরন্দৈ সডৈক্কণিন্দ তত্তুৱন়ার্ তঙ্গুঙ্গোযিল্
কারোডি ৱিসুম্বৰন্দু কডিনার়ুম্ পোৰ়িলণৈন্দ কমৰ়্‌দার্ৱীদিত্
তেরোডু মরঙ্গের়িচ্ চেযিৰ়ৈযার্ নডম্বযিলুন্ দিরুৱৈযার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீரோடு கூவிளமு நிலாமதியும் வெள்ளெருக்கு நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடு மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே


Open the Thamizhi Section in a New Tab
நீரோடு கூவிளமு நிலாமதியும் வெள்ளெருக்கு நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடு மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே

Open the Reformed Script Section in a New Tab
नीरोडु कूविळमु निलामदियुम् वॆळ्ळॆरुक्कु निऱैन्दहॊण्ड्रैत्
तारोडु तण्गरन्दै सडैक्कणिन्द तत्तुवऩार् तङ्गुङ्गोयिल्
कारोडि विसुम्बळन्दु कडिनाऱुम् पॊऴिलणैन्द कमऴ्दार्वीदित्
तेरोडु मरङ्गेऱिच् चेयिऴैयार् नडम्बयिलुन् दिरुवैयाऱे
Open the Devanagari Section in a New Tab
ನೀರೋಡು ಕೂವಿಳಮು ನಿಲಾಮದಿಯುಂ ವೆಳ್ಳೆರುಕ್ಕು ನಿಱೈಂದಹೊಂಡ್ರೈತ್
ತಾರೋಡು ತಣ್ಗರಂದೈ ಸಡೈಕ್ಕಣಿಂದ ತತ್ತುವನಾರ್ ತಂಗುಂಗೋಯಿಲ್
ಕಾರೋಡಿ ವಿಸುಂಬಳಂದು ಕಡಿನಾಱುಂ ಪೊೞಿಲಣೈಂದ ಕಮೞ್ದಾರ್ವೀದಿತ್
ತೇರೋಡು ಮರಂಗೇಱಿಚ್ ಚೇಯಿೞೈಯಾರ್ ನಡಂಬಯಿಲುನ್ ದಿರುವೈಯಾಱೇ
Open the Kannada Section in a New Tab
నీరోడు కూవిళము నిలామదియుం వెళ్ళెరుక్కు నిఱైందహొండ్రైత్
తారోడు తణ్గరందై సడైక్కణింద తత్తువనార్ తంగుంగోయిల్
కారోడి విసుంబళందు కడినాఱుం పొళిలణైంద కమళ్దార్వీదిత్
తేరోడు మరంగేఱిచ్ చేయిళైయార్ నడంబయిలున్ దిరువైయాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරෝඩු කූවිළමු නිලාමදියුම් වෙළ්ළෙරුක්කු නිරෛන්දහොන්‍රෛත්
තාරෝඩු තණ්හරන්දෛ සඩෛක්කණින්ද තත්තුවනාර් තංගුංගෝයිල්
කාරෝඩි විසුම්බළන්දු කඩිනාරුම් පොළිලණෛන්ද කමළ්දාර්වීදිත්
තේරෝඩු මරංගේරිච් චේයිළෛයාර් නඩම්බයිලුන් දිරුවෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
നീരോടു കൂവിളമു നിലാമതിയും വെള്ളെരുക്കു നിറൈന്തകൊന്‍റൈത്
താരോടു തണ്‍കരന്തൈ ചടൈക്കണിന്ത തത്തുവനാര്‍ തങ്കുങ്കോയില്‍
കാരോടി വിചുംപളന്തു കടിനാറും പൊഴിലണൈന്ത കമഴ്താര്‍വീതിത്
തേരോടു മരങ്കേറിച് ചേയിഴൈയാര്‍ നടംപയിലുന്‍ തിരുവൈയാറേ
Open the Malayalam Section in a New Tab
นีโรดุ กูวิละมุ นิลามะถิยุม เวะลเละรุกกุ นิรายนถะโกะณรายถ
ถาโรดุ ถะณกะระนถาย จะดายกกะณินถะ ถะถถุวะณาร ถะงกุงโกยิล
กาโรดิ วิจุมปะละนถุ กะดินารุม โปะฬิละณายนถะ กะมะฬถารวีถิถ
เถโรดุ มะระงเกริจ เจยิฬายยาร นะดะมปะยิลุน ถิรุวายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီေရာတု ကူဝိလမု နိလာမထိယုမ္ ေဝ့လ္ေလ့ရုက္ကု နိရဲန္ထေကာ့န္ရဲထ္
ထာေရာတု ထန္ကရန္ထဲ စတဲက္ကနိန္ထ ထထ္ထုဝနာရ္ ထင္ကုင္ေကာယိလ္
ကာေရာတိ ဝိစုမ္ပလန္ထု ကတိနာရုမ္ ေပာ့လိလနဲန္ထ ကမလ္ထာရ္ဝီထိထ္
ေထေရာတု မရင္ေကရိစ္ ေစယိလဲယာရ္ နတမ္ပယိလုန္ ထိရုဝဲယာေရ


Open the Burmese Section in a New Tab
ニーロートゥ クーヴィラム ニラーマティユミ・ ヴェリ・レルク・ク ニリイニ・タコニ・リイタ・
ターロートゥ タニ・カラニ・タイ サタイク・カニニ・タ タタ・トゥヴァナーリ・ タニ・クニ・コーヤリ・
カーローティ ヴィチュミ・パラニ・トゥ カティナールミ・ ポリラナイニ・タ カマリ・ターリ・ヴィーティタ・
テーロートゥ マラニ・ケーリシ・ セーヤリイヤーリ・ ナタミ・パヤルニ・ ティルヴイヤーレー
Open the Japanese Section in a New Tab
nirodu gufilamu nilamadiyuM felleruggu niraindahondraid
darodu dangarandai sadaigganinda daddufanar danggunggoyil
garodi fisuMbalandu gadinaruM bolilanainda gamaldarfidid
derodu maranggerid deyilaiyar nadaMbayilun dirufaiyare
Open the Pinyin Section in a New Tab
نِيرُوۤدُ كُووِضَمُ نِلامَدِیُن وٕضّيَرُكُّ نِرَيْنْدَحُونْدْرَيْتْ
تارُوۤدُ تَنْغَرَنْدَيْ سَدَيْكَّنِنْدَ تَتُّوَنارْ تَنغْغُنغْغُوۤیِلْ
كارُوۤدِ وِسُنبَضَنْدُ كَدِنارُن بُوظِلَنَيْنْدَ كَمَظْدارْوِيدِتْ
تيَۤرُوۤدُ مَرَنغْغيَۤرِتشْ تشيَۤیِظَيْیارْ نَدَنبَیِلُنْ دِرُوَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾo˞:ɽɨ ku:ʋɪ˞ɭʼʌmʉ̩ n̺ɪlɑ:mʌðɪɪ̯ɨm ʋɛ̝˞ɭɭɛ̝ɾɨkkɨ n̺ɪɾʌɪ̯n̪d̪ʌxo̞n̺d̺ʳʌɪ̯t̪
t̪ɑ:ɾo˞:ɽɨ t̪ʌ˞ɳgʌɾʌn̪d̪ʌɪ̯ sʌ˞ɽʌjccʌ˞ɳʼɪn̪d̪ə t̪ʌt̪t̪ɨʋʌn̺ɑ:r t̪ʌŋgɨŋgo:ɪ̯ɪl
kɑ:ɾo˞:ɽɪ· ʋɪsɨmbʌ˞ɭʼʌn̪d̪ɨ kʌ˞ɽɪn̺ɑ:ɾɨm po̞˞ɻɪlʌ˞ɳʼʌɪ̯n̪d̪ə kʌmʌ˞ɻðɑ:rʋi:ðɪt̪
t̪e:ɾo˞:ɽɨ mʌɾʌŋge:ɾɪʧ ʧe:ɪ̯ɪ˞ɻʌjɪ̯ɑ:r n̺ʌ˞ɽʌmbʌɪ̯ɪlɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
nīrōṭu kūviḷamu nilāmatiyum veḷḷerukku niṟaintakoṉṟait
tārōṭu taṇkarantai caṭaikkaṇinta tattuvaṉār taṅkuṅkōyil
kārōṭi vicumpaḷantu kaṭināṟum poḻilaṇainta kamaḻtārvītit
tērōṭu maraṅkēṟic cēyiḻaiyār naṭampayilun tiruvaiyāṟē
Open the Diacritic Section in a New Tab
нироотю кувылaмю нылаамaтыём вэллэрюккю нырaынтaконрaыт
таароотю тaнкарaнтaы сaтaыкканынтa тaттювaнаар тaнгкюнгкоойыл
кaрооты высюмпaлaнтю катынаарюм ползылaнaынтa камaлзтаарвитыт
тэaроотю мaрaнгкэaрыч сэaйылзaыяaр нaтaмпaйылюн тырювaыяaрэa
Open the Russian Section in a New Tab
:nih'rohdu kuhwi'lamu :nilahmathijum we'l'le'rukku :nirä:nthakonräth
thah'rohdu tha'nka'ra:nthä zadäkka'ni:ntha thaththuwanah'r thangkungkohjil
kah'rohdi wizumpa'la:nthu kadi:nahrum poshila'nä:ntha kamashthah'rwihthith
theh'rohdu ma'rangkehrich zehjishäjah'r :nadampajilu:n thi'ruwäjahreh
Open the German Section in a New Tab
niiroodò kövilhamò nilaamathiyòm vèlhlhèròkkò nirhâinthakonrhâith
thaaroodò thanhkaranthâi çatâikkanhintha thaththòvanaar thangkòngkooyeil
kaaroodi viçòmpalhanthò kadinaarhòm po1zilanhâintha kamalzthaarviithith
thèèroodò marangkèèrhiçh çèèyeilzâiyaar nadampayeilòn thiròvâiyaarhèè
niirootu cuuvilhamu nilaamathiyum velhlheruiccu nirhaiinthaconrhaiith
thaarootu thainhcarainthai ceataiiccanhiintha thaiththuvanaar thangcungcooyiil
caarooti visumpalhainthu catinaarhum polzilanhaiintha camalzthaarviithiith
theerootu marangkeerhic ceeyiilzaiiyaar natampayiiluin thiruvaiiyaarhee
:neeroadu koovi'lamu :nilaamathiyum ve'l'lerukku :ni'rai:nthakon'raith
thaaroadu tha'nkara:nthai sadaikka'ni:ntha thaththuvanaar thangkungkoayil
kaaroadi visumpa'la:nthu kadi:naa'rum pozhila'nai:ntha kamazhthaarveethith
thaeroadu marangkae'rich saeyizhaiyaar :nadampayilu:n thiruvaiyaa'rae
Open the English Section in a New Tab
ণীৰোটু কূৱিলমু ণিলামতিয়ুম্ ৱেল্লেৰুক্কু ণিৰৈণ্তকোন্ৰৈত্
তাৰোটু তণ্কৰণ্তৈ চটৈক্কণাণ্ত তত্তুৱনাৰ্ তঙকুঙকোয়িল্
কাৰোটি ৱিচুম্পলণ্তু কটিণাৰূম্ পোলীলণৈণ্ত কমইলতাৰ্ৱীতিত্
তেৰোটু মৰঙকেৰিচ্ চেয়িলৈয়াৰ্ ণতম্পয়িলুণ্ তিৰুৱৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.