முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
001 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : நட்டபாடை

தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை:

மாலொடு தண் தாமரையானும் தாள் நுதல் செய்து இறை காணிய நீணுதல் செய்து நிமிர்ந்தான் எனக் கூட்டுக. மால் தாள் காணிய நிமிர்ந்தான் எனவும், தாமரையான் நுதல் காணிய நிமிர்ந்தான் எனவும் தனித்தனிக் கூட்டிப் பொருள் காண்க. தாள் நுதல் செய்து - தாளையும் நுதலையும் தமது குறிக்கோளாகக் கருதி. இறை காணிய - தம்முள் யார் இறை என்பதைக் காணும் பொருட்டு; இறைவனைக் காணும் பொருட்டு என்பாரும் உளர். நீணுதல் - மால் பெரிய பன்றியாய் நீளுதலும் பிரமன் அன்னமாய் வானத்தில் நீளுதலுமாகிய இரண்டின் செயல்கள். ஒழிய - செயலற்றுப் போக. நிமிர்ந்தான் -அண்ணாமலையாய் உயர்ந்தவன். சென்று பற்றுவேன் என்று செருக்கிய தேவர்க்கு அப்பாற்பட்டவன், செயலழிந்திருந்த தலைவியின் சிந்தையை வலியவந்து கவர்கின்றான் என்பது இறைவனது எளிமை தோன்ற நின்றது. மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்த மேவிய பெம்மான் என்றது இவளும் வையத்தவருள் ஒருத்தியாயிருக்க இங்ஙனம் கூறினாள், ஏனைய மகளிர்க்கு இல்லாததாகிய, இறைவனே வலியவந்து உள்ளங்கவரும்பேறு தனக்குக் கிட்டியமையைத் தெரிவிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
నారాయణుడు లక్ష్మీ సమేతుడై ఎర్రని తామర పుష్పముపై అమరియుండ,
వారి పాదములు, తలభాగము ప్రధాన కేంద్రములుగా ఎంచి, తమలో ఎవరు గొప్పో ప్రదర్శించదలచి,
బ్రహ్మ పాతాలమువైపుకు ఒక వరాహ రూపమున ముందుకు పోగా, నా మనసును దోచిన ఆ పరమశివుడు ఆకాశమువైపుకు ఒక హంసవలే బహుదూరము పయనించాడు.
ఇతడు ఖచ్చితంగా బ్రహ్మపురమున వెలసి, విశాలమైన నుదురుగల స్త్రీలు మొదలుకొని,
ప్రపంచమున గల జీవులందరూ తనను ఆరాధించ గోరే ఆ పరంధాముడే.!

[ అనువాదము: సశికళ దివాకర్,2009]
ವಿಷ್ಣುವೂ, ಕಮಲದ ಹೂವಿನ ಮೇಲೆ ಕುಳಿತಿರುವ
ನಾಲ್ಮೊಗನಾದ ಬ್ರಹ್ಮನೂ, ತನ್ನ ಪಾದಗಳನ್ನೂ,
ತಲೆಯ ಮುಡಿಯನ್ನೂ ಕೂಡಲೇ ಕಾಣುವ ಸಲುವಾಗಿ
ಹಂದಿಯಾಗಿಯೂ, ಹಂಸವಾಗಿಯೂ ಹುಡುಕುತ್ತಾ ಹೊರಡಲು
ಅಣ್ಣಾಮಲೆಯಾಗಿ ಬೆಳೆದು ನಿಂತು, ನನ್ನ ಮನಸ್ಸನ್ನು ಕದ್ದ
ಕಳ್ಳನಾಗಿ ಬೆಳಗುವಂತಹ, ಜ್ವಲಿಸುವಂತಹ ನೊಸಲನ್ನೂ,
ಕೆಂಬಣ್ಣವನ್ನೂ ಹೊಂದಿರುವ, ಜನರೇ ಆದಿಯಾಗಿ, ಲೋಕದ
ಎಲ್ಲರೂ ಸ್ತುತಿಸಬಯಸುವಂತೆ ಮಾಡುವ, ಬ್ರಹ್ಮಪುರದಲ್ಲಿ
ವಾಸ ಮಾಡುವ ಭಗವಂತನಾಗಿರುವವನು ಇವನೇ ಅಲ್ಲವೇನು!
ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु शिव के श्रीचरणों के दर्शन करने के लिए
विष्णु एवं ब्रह्म ने उनके शीश के दर्शन करने के लिए प्रयत्न किया।
उनके सारे प्रयत्न व्यर्थ हो गए।
प्रभु विराट स्वरूप लेकर उनको दर्शन दिलानेवाले मेरे हृदय को
आकृष्ट करनेवाले चित्त चोर हैं।
खड्ग सदृश लालट से सुशोभित महिलाएँ प्रभु की स्तुति कर रही हैं।
विश्व वन्दनीय प्रभु समृदु ब्रह्मपुरम में प्रतिष्ठित यही तो हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
(Brahma und Vishnu stritten sich, wer der Größte von beiden sei. Shiva sagte denen, derjenige der sein Fuß oder sein Kopfende zu Erst sieht, sei der Größte von den beiden.)
Vishnu nahm in der Breite zu ( und wandelt sich als ein Schwein) und suchte nach dem Fuß, Brahma wandelte sich als ein Schwan und flog nach oben um das Kopfende zu entdecken.
Er ( Gott Shiva) streckte sich groß, somit stehlt der Dieb mein Herz.
Beginnend mit den Frauen mit dem leuchtenden Stirn auf der Erde, preisen ihn hoch und beten ihn an.
Der großartiger Herr ist in der Tat er, der in diesen ruhmreichen Ort residiert.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Māl and the god who is seated in the cool lotus.
having as their objects feet and forehead to find out who was the chief between them Māl going down a long distance as a pig and Piramaṉ going a long distance in the sky as a swan the thief who captivated my mind.
this person is truly the Lord who resides in Piramāpuram gladly, which was desired intensely to be worshiped by the people of this world beginning with the ladies with bright forehead.
Translation: V.M.Subramanya Aiyar – Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


There was a dispute between Maal (Vishnu) and Ayan (Brahma) as to who among them was superior. They went to Siva for adjudication. Siva gave them a test. He asked them to find His feet or crown. Whoever comes first would be the superior. Siva stood like huge column of fire, the top of which went beyond the skies and the bottom went beyond the netherworld. Maal became a pig and went on dredging the earth to find the feet of Siva. Ayan became a swan and flew up to see the crown. Both were exhausted but were not successful in their missions. They realized that Siva was superior to both of them. This anecdote is repeated by Sambandar in the ninth stanza of every decad.
Notes: Su. Kothandaraman, Mambalam, Chennai(2008)


Boar-Maal and swan-chill Lotus-ee probed in vain To ken the feet and crest of Him, the Hill unclimbed, The snatcher of my heart, like lurid templed charmer Of women and the world to serve,at Brahmapuram whose Lord alone is He.
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀸𑀡𑀼𑀢𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀶𑁃 𑀓𑀸𑀡𑀺𑀬𑀫𑀸𑀮𑁄𑁆𑀝𑀼 𑀢𑀡𑁆𑀝𑀸𑀫𑀭𑁃𑀬𑀸𑀷𑀼𑀫𑁆
𑀦𑀻𑀡𑀼𑀢𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑁄𑁆𑀵𑀺 𑀬𑀦𑁆𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁂𑁆𑀷 𑀢𑀼𑀴𑁆𑀴𑀗𑁆𑀓𑀯𑀭𑁆𑀓𑀴𑁆𑀯𑀷𑁆
𑀯𑀸𑀡𑀼𑀢𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀫𑀓 𑀴𑀻𑀭𑁆𑀫𑀼𑀢𑀮𑀸𑀓𑀺𑀬 𑀯𑁃𑀬𑀢𑁆𑀢𑀯𑀭𑁂𑀢𑁆𑀢𑀧𑁆
𑀧𑁂𑀡𑀼𑀢𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀧𑀺𑀭 𑀫𑀸𑀧𑀼𑀭𑀫𑁂𑀯𑀺𑀬 𑀧𑁂𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑀺𑀯𑀷𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তাণুদল্সেয্দির়ৈ কাণিযমালোডু তণ্ডামরৈযান়ুম্
নীণুদল্সেয্দোৰ়ি যন্নিমির্ন্দান়েন় তুৰ‍্ৰঙ্গৱর্গৰ‍্ৱন়্‌
ৱাণুদল্সেয্মহ ৰীর্মুদলাহিয ৱৈযত্তৱরেত্তপ্
পেণুদল্সেয্বির মাবুরমেৱিয পেম্মান়িৱন়ণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே


Open the Thamizhi Section in a New Tab
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே

Open the Reformed Script Section in a New Tab
ताणुदल्सॆय्दिऱै काणियमालॊडु तण्डामरैयाऩुम्
नीणुदल्सॆय्दॊऴि यन्निमिर्न्दाऩॆऩ तुळ्ळङ्गवर्गळ्वऩ्
वाणुदल्सॆय्मह ळीर्मुदलाहिय वैयत्तवरेत्तप्
पेणुदल्सॆय्बिर माबुरमेविय पॆम्माऩिवऩण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ತಾಣುದಲ್ಸೆಯ್ದಿಱೈ ಕಾಣಿಯಮಾಲೊಡು ತಂಡಾಮರೈಯಾನುಂ
ನೀಣುದಲ್ಸೆಯ್ದೊೞಿ ಯನ್ನಿಮಿರ್ಂದಾನೆನ ತುಳ್ಳಂಗವರ್ಗಳ್ವನ್
ವಾಣುದಲ್ಸೆಯ್ಮಹ ಳೀರ್ಮುದಲಾಹಿಯ ವೈಯತ್ತವರೇತ್ತಪ್
ಪೇಣುದಲ್ಸೆಯ್ಬಿರ ಮಾಬುರಮೇವಿಯ ಪೆಮ್ಮಾನಿವನಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
తాణుదల్సెయ్దిఱై కాణియమాలొడు తండామరైయానుం
నీణుదల్సెయ్దొళి యన్నిమిర్ందానెన తుళ్ళంగవర్గళ్వన్
వాణుదల్సెయ్మహ ళీర్ముదలాహియ వైయత్తవరేత్తప్
పేణుదల్సెయ్బిర మాబురమేవియ పెమ్మానివనండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තාණුදල්සෙය්දිරෛ කාණියමාලොඩු තණ්ඩාමරෛයානුම්
නීණුදල්සෙය්දොළි යන්නිමිර්න්දානෙන තුළ්ළංගවර්හළ්වන්
වාණුදල්සෙය්මහ ළීර්මුදලාහිය වෛයත්තවරේත්තප්
පේණුදල්සෙය්බිර මාබුරමේවිය පෙම්මානිවනන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
താണുതല്‍ചെയ്തിറൈ കാണിയമാലൊടു തണ്ടാമരൈയാനും
നീണുതല്‍ചെയ്തൊഴി യന്നിമിര്‍ന്താനെന തുള്ളങ്കവര്‍കള്വന്‍
വാണുതല്‍ചെയ്മക ളീര്‍മുതലാകിയ വൈയത്തവരേത്തപ്
പേണുതല്‍ചെയ്പിര മാപുരമേവിയ പെമ്മാനിവനന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
ถาณุถะลเจะยถิราย กาณิยะมาโละดุ ถะณดามะรายยาณุม
นีณุถะลเจะยโถะฬิ ยะนนิมิรนถาเณะณะ ถุลละงกะวะรกะลวะณ
วาณุถะลเจะยมะกะ ลีรมุถะลากิยะ วายยะถถะวะเรถถะป
เปณุถะลเจะยปิระ มาปุระเมวิยะ เปะมมาณิวะณะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထာနုထလ္ေစ့ယ္ထိရဲ ကာနိယမာေလာ့တု ထန္တာမရဲယာနုမ္
နီနုထလ္ေစ့ယ္ေထာ့လိ ယန္နိမိရ္န္ထာေန့န ထုလ္လင္ကဝရ္ကလ္ဝန္
ဝာနုထလ္ေစ့ယ္မက လီရ္မုထလာကိယ ဝဲယထ္ထဝေရထ္ထပ္
ေပနုထလ္ေစ့ယ္ပိရ မာပုရေမဝိယ ေပ့မ္မာနိဝနန္ေရ


Open the Burmese Section in a New Tab
ターヌタリ・セヤ・ティリイ カーニヤマーロトゥ タニ・ターマリイヤーヌミ・
ニーヌタリ・セヤ・トリ ヤニ・ニミリ・ニ・ターネナ トゥリ・ラニ・カヴァリ・カリ・ヴァニ・
ヴァーヌタリ・セヤ・マカ リーリ・ムタラーキヤ ヴイヤタ・タヴァレータ・タピ・
ペーヌタリ・セヤ・ピラ マープラメーヴィヤ ペミ・マーニヴァナニ・レー
Open the Japanese Section in a New Tab
danudalseydirai ganiyamalodu dandamaraiyanuM
ninudalseydoli yannimirndanena dullanggafargalfan
fanudalseymaha lirmudalahiya faiyaddafareddab
benudalseybira maburamefiya bemmanifanandre
Open the Pinyin Section in a New Tab
تانُدَلْسيَیْدِرَيْ كانِیَمالُودُ تَنْدامَرَيْیانُن
نِينُدَلْسيَیْدُوظِ یَنِّمِرْنْدانيَنَ تُضَّنغْغَوَرْغَضْوَنْ
وَانُدَلْسيَیْمَحَ ضِيرْمُدَلاحِیَ وَيْیَتَّوَريَۤتَّبْ
بيَۤنُدَلْسيَیْبِرَ مابُرَميَۤوِیَ بيَمّانِوَنَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɑ˞:ɳʼɨðʌlsɛ̝ɪ̯ðɪɾʌɪ̯ kɑ˞:ɳʼɪɪ̯ʌmɑ:lo̞˞ɽɨ t̪ʌ˞ɳɖɑ:mʌɾʌjɪ̯ɑ:n̺ɨm
n̺i˞:ɳʼɨðʌlsɛ̝ɪ̯ðo̞˞ɻɪ· ɪ̯ʌn̺n̺ɪmɪrn̪d̪ɑ:n̺ɛ̝n̺ə t̪ɨ˞ɭɭʌŋgʌʋʌrɣʌ˞ɭʋʌn̺
ʋɑ˞:ɳʼɨðʌlsɛ̝ɪ̯mʌxə ɭi:rmʉ̩ðʌlɑ:çɪɪ̯ə ʋʌjɪ̯ʌt̪t̪ʌʋʌɾe:t̪t̪ʌp
pe˞:ɳʼɨðʌlsɛ̝ɪ̯βɪɾə mɑ:βʉ̩ɾʌme:ʋɪɪ̯ə pɛ̝mmɑ:n̺ɪʋʌn̺ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
tāṇutalceytiṟai kāṇiyamāloṭu taṇṭāmaraiyāṉum
nīṇutalceytoḻi yannimirntāṉeṉa tuḷḷaṅkavarkaḷvaṉ
vāṇutalceymaka ḷīrmutalākiya vaiyattavarēttap
pēṇutalceypira māpuramēviya pemmāṉivaṉaṉṟē
Open the Diacritic Section in a New Tab
таанютaлсэйтырaы кaныямаалотю тaнтаамaрaыяaнюм
нинютaлсэйтолзы яннымырнтаанэнa тюллaнгкавaркалвaн
ваанютaлсэймaка лирмютaлаакыя вaыяттaвaрэaттaп
пэaнютaлсэйпырa маапюрaмэaвыя пэммаанывaнaнрэa
Open the Russian Section in a New Tab
thah'nuthalzejthirä kah'nijamahlodu tha'ndahma'räjahnum
:nih'nuthalzejthoshi ja:n:nimi'r:nthahnena thu'l'langkawa'rka'lwan
wah'nuthalzejmaka 'lih'rmuthalahkija wäjaththawa'rehththap
peh'nuthalzejpi'ra mahpu'ramehwija pemmahniwananreh
Open the German Section in a New Tab
thaanhòthalçèiythirhâi kaanhiyamaalodò thanhdaamarâiyaanòm
niinhòthalçèiytho1zi yannimirnthaanèna thòlhlhangkavarkalhvan
vaanhòthalçèiymaka lhiirmòthalaakiya vâiyaththavarèèththap
pèènhòthalçèiypira maapòramèèviya pèmmaanivananrhèè
thaaṇhuthalceyithirhai caanhiyamaalotu thainhtaamaraiiyaanum
niiṇhuthalceyitholzi yainnimirinthaanena thulhlhangcavarcalhvan
vaṇhuthalceyimaca lhiirmuthalaaciya vaiyaiththavareeiththap
peeṇhuthalceyipira maapurameeviya pemmaanivananrhee
thaa'nuthalseythi'rai kaa'niyamaalodu tha'ndaamaraiyaanum
:nee'nuthalseythozhi ya:n:nimir:nthaanena thu'l'langkavarka'lvan
vaa'nuthalseymaka 'leermuthalaakiya vaiyaththavaraeththap
pae'nuthalseypira maapuramaeviya pemmaanivanan'rae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.