நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
011 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 8 பண் : காந்தார பஞ்சமம்

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடைய தாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே.

குறிப்புரை :

இல் - வீடு. உயிர்க்குத் துச்சில் உடல் ஆதலின் ` இல் ` என்றார். அக விளக்கு - உள்ளே விளங்கி விளக்கும் விளக்கு. அகமாகிய இல்லின் விளக்குமாம். புறத்திருளைப் போக்கும் விளக்கேபோல் அகத்திருளை அழிப்பது. சொல்லின் அகத்தும் நின்று விளக்குவது. சோதி உள்ளது. ஏனைய சோதிகளுக்கு அச்சோதி முன் இல்லாது பின் வந்ததாம். திருவைந்தெழுத்தின் சோதி முக்காலத்தும் உள்ளது. உயிர்கள் எண்ணில்லாதன. அவற்றின் அகமெல்லாம் விளக்கும் ஒளியாதலின் ` பல்லக விளக்கு ` ஆயிற்று. பலரும் - எல்லாச் சமயத்தாரும். காண்பது - தம்மையறியாமலே காண நிற்பது. அழியாதது. யகாரம், நகாரம், மகாரம் மூன்றில் மற்றெல்லாச் சமயங்களும் அடங்கி விடுகின்றன. வகாரம் சிகாரம் இரண்டும் சைவத்திற்கே உரிய தனிச் சிறப்புடையன. நல்லக விளக்கு :- ஞானரூபத்தினுள்ளே விளங்கும் விளக்கு. ஞானம் நிறைந்த அகமே நல்லகம். ` ஆன்மாப் பாசம் ஒருவி ஞானக் கண்ணினிற் பதியைச்சிந்தை நாடுக ` என விதித்த விதியின்படியே ஓதும் திறத்திற்குரியது முத்தி பஞ்சாக்கரம். அஞ்செழுத்து ஓதும் முறையால் ஒரு குறியின் வைத்து அன்றி முதல்வனைக் காண்டல் செல்லாது.` ( சிவஞானபோதம். சூ.9. அதி.3. பேருரை பார்க்க ). சுட்டறிவு இறந்து ஞானத்தான் ஞேயத்தைக் கண்டு எங்கும் தானாக நிட்டை கூடிய வழியும், தொன்றுதொட்டுவரும் ஏகதேசப் பழக்கம் பற்றிப் புறத்தே விடயத்திற் சென்று பற்றுவதாகிய தன் அறிவை அங்ஙனம் செல்லாது மடக்கி, அகத்தே ஒரு குறியின் கண் நிறுத்தி, நிட்டைகூடிநிற்கும் முறைமையை அஞ்செழுத்து ஓதும் முறைமையில் வைத்துக் கண்டு சிந்திக்கச் சிந்திக்கச் சிவதரிசனத்தை விளக்குவதால் ` விளக்கு ` எனப்பட்டது. வாதனைவயத்தால், புறத்திற் சென்று பற்றும் ஏகதேச அறிவைப் பற்றறத் துடைத்துப் பூரண நிலையிற் கொண்டு செல்வதால், அது வாசனையை நீக்குவதற்குரிய சிறந்த சாதனமாம். ( சிவஞானபோதம் சூ. 9. அதி. 3. பேருரை ). உணர்விற்கு விடயமாகக் காணப்படும் பசுபாசங்களோடு ஒப்ப வேறு காணப்படாத பதிப்பொருளாகிய முதல்வனைத் தன் அகத்தின்கண் அஞ்செழுத்து ஓதும் முறையால் காணும் ஆயின், கோலை நட்டுக் கயிற்றினாற் சுற்றிக் கடையவே விறகினின்றும் தோன்றும் தீயைப்போல அம் முதல்வன் அங்குத் தோன்றி, அறிவிற்கு அறிவாய் விளங்கிநிற்கும் ஆதலின், ` நல்லக விளக்கு ` எனப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
ఇంటి చీకటి పోకార్చు దీపమొకటియె
మంటి జీవుల పలుకుల జ్యోతిగ వెలగి
కంటికి కానరక భక్తుల మది నిలచు
వింటినా మంత్రము నమశ్శివాయమే!

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
गृहदीप बाहर के अंधकार को नष्ट करता है। अंतर-दीप अज्ञानांधकार को नष्ट करता है। पंचाक्षर शब्द के भीतर का प्रकाषमय दीप जिसमें ज्योति है, वह भक्तों का दीप है। सभी भक्त उसे देखते हैं। वह सज्जनों का आंतरिक दीप है। यही ‘नमः षिवाय’ पंचाक्षर मंत्र है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
it is inner light inside the body.
destroys ignorance elucidates the meaning of words which are inside them.
has the light divine.
as the souls are innumerable, lights them internally.
it stands to be seen by all religionists without their knowledge.
it is the lamp that shines inside the form of spiritual knowledge that mantiram is namaccivāya.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ఇల్లగ విళగ్గతు విరుళ్గె ఢుభ్భతు
చొల్లగ విళగ్గతు చోతి యుళ్ళతు
భల్లగ విళగ్గతు భలరుఙ్ గాణ్భతు
నల్లగ విళగ్గతు నమచ్చి వాయవే.
ಇಲ್ಲಗ ವಿಳಗ್ಗತು ವಿರುಳ್ಗೆ ಢುಭ್ಭತು
ಚೊಲ್ಲಗ ವಿಳಗ್ಗತು ಚೋತಿ ಯುಳ್ಳತು
ಭಲ್ಲಗ ವಿಳಗ್ಗತು ಭಲರುಙ್ ಗಾಣ್ಭತು
ನಲ್ಲಗ ವಿಳಗ್ಗತು ನಮಚ್ಚಿ ವಾಯವೇ.
ഇല്ലഗ വിളഗ്ഗതു വിരുള്ഗെ ഢുഭ്ഭതു
ചൊല്ലഗ വിളഗ്ഗതു ചോതി യുള്ളതു
ഭല്ലഗ വിളഗ്ഗതു ഭലരുങ് ഗാണ്ഭതു
നല്ലഗ വിളഗ്ഗതു നമച്ചി വായവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉලංලක විළකංකතු විරුළංතෙ ටුපංපතු
චොලංලක විළකංකතු චෝති යුළංළතු
පලංලක විළකංකතු පලරුඞං කාණංපතු
නලංලක විළකංකතු නමචංචි වායවේ.
इल्लक विळक्कतु विरुळ्कॆ टुप्पतु
चॊल्लक विळक्कतु चोति युळ्ळतु
पल्लक विळक्कतु पलरुङ् काण्पतु
नल्लक विळक्कतु नमच्चि वायवे.
تهببد كيلرفي تهكاكلافي كالالي
uhtappud ekl'uriv uhtakkal'iv akalli
تهلاليأ تهياسو تهكاكلافي كالالسو
uhtal'l'uy ihtaos uhtakkal'iv akallos
تهبن'كا نقرلاب تهكاكلافي كالالب
uhtapn'aak gnuralap uhtakkal'iv akallap
.فاييفا هيcهcمانا تهكاكلافي كالالنا
.eavayaav ihchcaman: uhtakkal'iv akallan:
อิลละกะ วิละกกะถุ วิรุลเกะ ดุปปะถุ
โจะลละกะ วิละกกะถุ โจถิ ยุลละถุ
ปะลละกะ วิละกกะถุ ปะละรุง กาณปะถุ
นะลละกะ วิละกกะถุ นะมะจจิ วายะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိလ္လက ဝိလက္ကထု ဝိရုလ္ေက့ တုပ္ပထု
ေစာ့လ္လက ဝိလက္ကထု ေစာထိ ယုလ္လထု
ပလ္လက ဝိလက္ကထု ပလရုင္ ကာန္ပထု
နလ္လက ဝိလက္ကထု နမစ္စိ ဝာယေဝ.
イリ・ラカ ヴィラク・カトゥ ヴィルリ・ケ トゥピ・パトゥ
チョリ・ラカ ヴィラク・カトゥ チョーティ ユリ・ラトゥ
パリ・ラカ ヴィラク・カトゥ パラルニ・ カーニ・パトゥ
ナリ・ラカ ヴィラク・カトゥ ナマシ・チ ヴァーヤヴェー.
ыллaка вылaккатю вырюлкэ тюппaтю
соллaка вылaккатю сооты ёллaтю
пaллaка вылaккатю пaлaрюнг кaнпaтю
нaллaка вылaккатю нaмaчсы вааявэa.
illaka wi'lakkathu wi'ru'lke duppathu
zollaka wi'lakkathu zohthi ju'l'lathu
pallaka wi'lakkathu pala'rung kah'npathu
:nallaka wi'lakkathu :namachzi wahjaweh.
illaka viḷakkatu viruḷke ṭuppatu
collaka viḷakkatu cōti yuḷḷatu
pallaka viḷakkatu palaruṅ kāṇpatu
nallaka viḷakkatu namacci vāyavē.
illaka vi'lakkathu viru'lke duppathu
sollaka vi'lakkathu soathi yu'l'lathu
pallaka vi'lakkathu palarung kaa'npathu
:nallaka vi'lakkathu :namachchi vaayavae.
சிற்பி