குரங்கணில்முட்டம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு இறையார்வளையம்மை உடனுறை வாலீசுவரர்


மரம்: வில்வம்
குளம்:வாலி தீர்த்தம்

பதிகம்: விழுநீர் -1 -31 திருஞானசம்பந்தர்

முகவரி: தூசி அஞ்சல்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், 631703
தொபே. 044 27242409

இது தொண்டைநாட்டுத் தலங்களில் ஒன்று. காஞ்சிபுரத் திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்துகளில் ஏறி, பாலாற்றைக் கடந்த வுடன் தூசி என்னும் இடத்தில் இறங்கி கிழக்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.

குரங்காகிய வாலியும், அணிலும், காகமும் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது. முட்டம் - காகம். இறைவன் திருநாமம் வாலி வழிபட்டதைக் காட்டும் சான்று. காக்கைமடு, காக்கை வழிபட்டதைக் காட்டுவது. மூன்றின் உருவங்களும் சுதையால் ஆலயவாயிலில் அமைக்கப் பெற்றிருக்கின்றன.

இறைவன் திருநாமம் வாலீசுவரர்; இறைவி திருநாமம் இறையார்வளையம்மை. இதனையே ``இறையார் வளையாளை ஓர்பாகத்தடக்கி`` எனப் பதிகம் அறிவிக்கிறது. தீர்த்தம் வாலி தீர்த்தம். இத்தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிலிருந்து தெற்கே 12 கி.மீ. தூரத்தில் பாலாற்றின் தென்கரையில் இருக்கிறது.



கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றியனவாக 6 கல்வெட்டுகள் உள்ளன. அவை கோநேரின்மைகொண்டான், குலோத்துங்கன், இராஷ்டிரகூட கன்னரதேவன், கிருஷ்ணதேவராயர் இவர்கள் காலத்தன. அவற்றால் இத்தலம் காளியூர்க்கோட்டத்து இருகழிநாட்டு மாவண்டூர்ப்பற்றத்துப் பல்லவபுரமான திருக்குரங்கணில் முட்டம் என்று குறிப்பிடப் பெறுகிறது(290 of 1902). கடவுள் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலரீசுவர தேவர் என்றும் குறிப்பிடப்பெறுகிறார். பூஜா விருத்திக்காகச் சகம் 1451இல் கிருஷ்ணதேவ மகாராயர் பல்லவபுரம் கிராமத்தை அளித்தார்(295 of 1902) . இராஷ்டிரகூட கன்னரதேவன் ஸ்ரீ பலி பூஜைக்காக நிலம் அளித்தான். சம்புவராயரால் சத்திமங்கலமாகிற அம்மநல்லூர் கிராமத்தை நிவந்தமாகவிட நீறணிந்தான் சேதுராயனுக்கு உத்தரவிட்டான்(291 of 1902).

 
 
சிற்பி சிற்பி