கற்குடி (திருக்கற்குடி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அஞ்சனாட்சி உடனுறை உச்சிநாதர்


மரம்: வில்வம்
குளம்: பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக் கிணறு, நாற்கோணக் கிணறு

பதிகங்கள்: விடையாருங் -7 -27 சுந்தரர்
வடந்திகழ் -1 -43 திருஞானசம்பந்தர்
மூத்தவனை -6 -60 திருநாவுக்கரசர்

முகவரி: உய்யக்கொண்டான் திருமலை அஞ்சல்
சோமரசம்பேட்டை
திருச்சி மாவட்டம், 620102
தொபே. 9442628044

இத்தலம் சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் மேற்றிசையில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

இன்று உய்யக்கொண்டான் மலையென வழங்குகிறது. நந்திவர்ம பல்லவனால் திருப்பணி செய்விக்கப்பெற்றமையின் நந்திவர்ம மங்கலம் எனக் கல்வெட்டுக்கள் வழங்குகின்றன. மேற்குநோக்கிய சந்நிதி. அம்மன் சந்நிதிகள் இரண்டு.

இறைவன் பெயர் உச்சிநாதர். முத்தீசர், கற்பகநாதர், உச்சீவ நாத சுவாமி , உய்யக்கொண்ட நாயனார், விழுமியார், ஆள்வார் விழுமிய தேவர், விழுமியநாயனார் எனக் கல்வெட்டுக்களிலும், புராணங்களிலும் வழங்கப்பெறுகின்றன. அம்மை, அஞ்சனாட்சி, தீர்த்தங்கள் பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண் கோணக் கிணறு, நாற்கோணக்கிணறு என்பன. மார்க்கண்டர் வழிபட்டு அருள் பெற்ற தலம். முனிவர்கட்குக் குருமூர்த்தியாக இருந்து பெருமான் விழுமிய நூல்களை உபதேசித்த தலம். கரனும், ஈழநாட்டரசனும் வழிபட்ட தலம். தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது.



கல்வெட்டு:

இத்தலம் இராஜராஜன் காலத்து, பாண்டிய குலாசனி வளநாட்டு ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலத்துக் கற்குடி எனவும்(455 of 1908) , குலோத்துங்கன் காலத்து, இராஜமகேந்திர வளநாட்டு உறையூர்க் கூற்றத்துப் பிரமதேயமான ௸ சதுர்வேதி மங்கலத்துக் கற்குடி எனவும்(460 of 1908), முதல் இராஜேந்திரன் காலத்து கேரளாந்தக வளநாட்டு உறையூர்க் கூற்றத்துக் கற்குடியெனவும்(461 of 1908) , மல்லிகார்ச்சுன மகாராஜா காலத்து இராஜகம்பீர வளநாட்டுப் பிரமதேயமான உய்யக் கொண்டான் திருமலையெனவும்(474 of 1908.) வழங்கப்பெறுகின்றது.

தருமம் ஆற்றிய மன்னர்கள் முதற்பராந்தகன், கண்டராதித் தன் மனைவி, பராந்தகன் மாதேவ அடிகளாராகிய செம்பியன் மாதேவியார், உத்தமசோழன், இராஜராஜன் I, பரகேசரி இராஜேந்திரன் I, வீர இராஜேந்திரன், குலோத்துங்கன் I,மல்லிகார்ச்சுன மகாராஜா, மயிலைத் திண்ணன் முதலியோர், இவர்கள் அளித்தன; பெரும்பாலும் விளக்கிற்காகப் பொன்னும், ஆடும் நிவேதனத்திற்கு நிலமும் ஆம்.

 
 
சிற்பி சிற்பி