கழிப்பாலை (திருக்கழிப்பாலை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வேதநாயகி உடனுறை பால்வண்ணநாதர்


மரம்: வில்வம்
குளம்: கொள்ளிட நதி

பதிகங்கள்: புனலாடிய -2 -21 திருஞானசம்பந்தர்
வெந்தகுங்கி -3 -44 திருஞானசம்பந்தர்
வனபவளவாய் -4 -6 திருநாவுக்கரசர்
நங்கையைப்பாக -4 -30 திருநாவுக்கரசர்
நெய்தற் குருகு -4 -106 திருநாவுக்கரசர்
வண்ணமும் -5 -40 திருநாவுக்கரசர்
ஊனுடுத்தி -6 -12 திருநாவுக்கரசர்
செடியேன்தீ -7 -23 சுந்தரர்

முகவரி: சிவபுரி அஞ்சல்
அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம், 608002
தொபே. 04364 235462

சிவபுரி என வழங்கப்பெறுகிறது. இது முன்பு கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் காரைமேடு என்னும் இடத்தில் இருந்தது. அங்கு இருந்தபொழுது கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கு, திருக் கோயிலை முற்றிலும் பாழ்படுத்திவிட்டது.

படுகை முதலியார் குடும்பத்தில் திரு. பழநியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோயில்கட்டி அதில் கழிப்பாலை இறைவரையும், இறைவியாரையும், ஏனைய பரிவார தேவதைகளையும் எழுந்தருளுவித்துள்ளார்.

இது சிதம்பரத்திற்குத் தென்கிழக்கே சுமார் 10 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது சோழநாட்டு வடகரைத் தலங்களுள் நான்காவது. சிதம்பரத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. வான்மீகி முனிவர் பூசித்துப் பேறு எய்தினர். இத்தலத்திற்கு ஞானசம்பந்தரது பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசரது பதிகங்கள் ஐந்து, சுந்தரரது பதிகம் ஒன்று ஆக எட்டுத் திருப்பதிகங்கள் இருக்கின்றன. இவற்றுள் திருநாவுக்கரசர் திருவாய் மலர்ந்துள்ள ``வனபவள வாய்திறந்து`` என்று தொடங்கும் அகப்பொருள்துறைகள் அமைந்த பாடல்கள் படித்து இன்புறத்தக்கன. சுவாமியின்பெயர் பால்வண்ணநாதர். தேவியின்பெயர் வேதநாயகி.

இக்கோயிலில் நான்குசோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. முதலாம் இராசராசன் ஒரு நுந்தா விளக்கு எரிக்க, திருக்கழிப்பாலை மகாதேவனுக்குப் பத்துக் காசுகள் தானம் செய்தான். கங்கைகொண்டசோழன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்துப் பணிப்பெண் ஒருத்தி இக்கோயிலுக்குப் பொன் அளித்துள்ளாள்.

முதலாம் இராஜராஜசோழனது கல்வெட்டின் ஒருபகுதியில் பகல் பூசைக்குத் திட்டம்செய்ததைப் பற்றியும், மற்றொரு பகுதியில் மாதேவிப்பேரங்காடி வியாபாரி ஒருவன் கூத்தன் அழகன் என்பானின் பெயர் எழுதப்பட்டுள்ளது. கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு ஒருநாழி தும்பை மலர் அளிக்க வடுகன்நல்லூரடிகள் என்ற விக்கிரம சோழ பிரமமாராயன் ஐந்து காசுகள் கொடுத்தான்.

இத்திருக்கோயில் கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் இருந்து, அவ்வாற்று வெள்ளத்தால் இடிந்துபோய்விட்டது. சைவப் பெரியார்கள் இக்கோயில் கற்களைக் கொண்டுவந்து, சிவபுரிக்குத் தென்பால் கோயில்கட்டி அதில் இறைவரை எழுந்தருளுவித்து உள்ளனர். அங்ஙனம் கட்டியபோது கல்வெட்டுக்களைத் தொடர்ச்சியின்றி வெவ்வேறு இடங்களில் வைத்துக் கட்டியுள்ளனர். அவைகளை ஒருவாறு படித்து இக்குறிப்பு எழுதப்பெற்றது.

இத்திருக்கோயிலில் முதலாம் இராஜராஜசோழன், இவனது மகனாகிய முதல் இராஜேந்திரசோழன் இவர்கள் காலங்களில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றுள் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு, திருக்கழிப்பாலை உடைய மகாதேவருக்கு ஒரு திருநுந்தா விளக்கு எரிப்பதற்கு இத்தேவர் பண்டாரத்தில் காசுகளை வைத்து அதன் வட்டியைக் கொண்டு நாடோறும் உழக்கு நெய் கொண்டு ஒரு விளக்கு எரிய நிவந்தம் அளித்ததைக் குறிப்பிட்டுள்ளது. முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டால் உச்சியம் போதைக்குத் திரு வமுதுக்கு நிலம் அளித்த செய்தி புலனாகின்றது. மேலும் சில துண்டுக் கல்வெட்டுக்கள் தரா விளக்கு, தண்ணீர் அமுதுக்கு வெள்ளிவட்டில், இவைகள் கொடுக்கப் பட்ட செய்திகளை உணர்த்துகின்றன. (இதுகாறும் ஆண்டு அறிக்கை, கல்வெட்டுத் தொகுதி இவைகளில் இக்கோயில் கல்வெட்டுக்கள் வெளிவந்தில. நேரில் படித்து எழுதியுதவின.)


கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி