கண்ணார்கோயில் (குறுமாணக்குடி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு முருகுவளர்கோதை உடனுறை கண்ணாயிரநாதர்


மரம்: கொன்றை
குளம்: இந்திர தீர்த்தம்

பதிகம்: தண்ணார் -1 -101 திருஞானசம்பந்தர்

முகவரி: கொண்டத்தூர் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609117

சோழ நாட்டுக் காவிரி வடகரைத்தலம். மயிலாடுதுறை - வைத்தீசுவரன் கோயில் பேருந்துவழியில் உள்ளது. குறுமாணக்குடி என வழங்கும். கௌதம முனிவரால் சாபம்பெற்ற இந்திரன் பூசித்துச் சரீரத்திலுள்ள குறிகள் அனைத்தையும் கண்களாக மாற்றிக் கொண்டமையால் இப்பெயர் எய்தியது.

வாமனமூர்த்தியும் பூசித்துப்பேறு பெற்றமையின் குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று. இறைவன் பெயர் கண்ணாயிரநாதர். இறைவியின் பெயர் முருகுவளர்கோதை. தீர்த்தம் இந்திரதீர்த்தம். இடம் வைத்தீஸ்வரன் கோயிலுக்குத் தென்கிழக்கே 2.5 கி.மீ. தூரத்தில் உள்ளது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி