கடைமுடி (திருக்கடைமுடி) (கீழூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அபிராமியம்மை உடனுறை கடைமுடிநாதர்


மரம்: கிளுவை மரம்
குளம்: கருணாதீர்த்தம்

பதிகம்: அருத்தனை -1 -111 திருஞானசம்பந்தர்

முகவரி: கீழையூர் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609304
தொபே. 04364 283261

இத்தலம் கீழூர் எனப் பெயர்பெறும். சோழ நாட்டுக் காவிரி வடகரைத்தலமாய்க் காவிரியின் கடைமுடியாதலின் இப்பெயர் பெற்றது. மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. பிரமன் பூசித்துப் பேறுபெற்றதலம்.

சுவாமிபெயர் கடைமுடிநாதர். அம்மையின் பெயர் அபிராமி யம்மை. தீர்த்தம் கருணாதீர்த்தம்.



கல்வெட்டு:

கடைமுடி என்பது கீழூராயின் கல்வெட்டொன்றுமில்லை. சேதுசமஸ்தான வித்துவான் மு. இராகவையங்காரவர்கள் தமது ஆராய்ச்சித் தொகுதியில் சிறந்ததோர் ஆராய்ச்சி வெளியிட்டுள்ளார்கள். அதன் சுருக்கமாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவிலடி எனவழங்கும் பேரூருக்குப் பக்கத்தில் கிழக்கே 2.5 கி.மீ. தூரத்தில் திருச்சின்னம்பூண்டி என்ற கிராமம் உள்ளது. அங்கே உள்ள இறைவர் சடையை உடையர், சடேசுவரர் என்று வழங்கப்படுகிறார். அங்கேயுள்ள சாசனங்கள் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன், அவன் மகன் கோவிஜய நிருபதுங்கவர்மன், முதற்பராந்தகன் இவர்கள் காலத்தன. அவற்றுள் முதற்பராந்தகன் காலத்துக் கல்வெட்டுக்களில் ஒன்றே ஒன்று திருச்சடைமுடி மகாதேவர் எனக் குறிப்பிடப்படுகிறது. ஏனைய இறைவன் பெயரை, திருக்கடைமுடிமகாதேவர் என்றே குறிப்பிடுகின்றன. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் அதாவது ஏழாம் நூற்றாண்டினரான திருஞானசம்பந்தர் காலத்திற்கு அணிமையில் திருக்கடைமுடி இப்பொழுது வழங்கும் சென்னப்பூண்டி என்றே விளங்கினமையறியலாம். திருச்சடைமுடி என்பது திருப்பேராகிய கோவிலடிக்கு வழங்கிய பெயராதலைப் பிற கல்வெட்டுக்களும் எடுத்துக் காட்டுகின்றன. ஆதலால் கீழூர் கடைமுடியன்று என்பர்.

சென்னம்பூண்டி கடைமுடியைப் பற்றியனவாக 22 கல் வெட்டுக்கள் உள்ளன. தென்கரை இடையாற்றுநாட்டு திருக்கடைமுடி எனக் குறிக்கப்பெற்றுள்ளது( 284 of 1901). நிருபதுங்கவர்மன் காலத்து அரசி ஒருத்தி விளக்கிற்காகப் பொன் அளித்தாள். முதற்பராந்தகன் பணிகள்யாவும் விளக்கிற்காக ஆடுகள் அளித்தமையே. வீரநாராயண மூவேந்த வேளான் முதலான அரசியல் தலைவர்களும் நிபந்தங்கள் அளித்துள்ளார்கள்.

 
 
சிற்பி சிற்பி