திருக்கஞ்சனூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அக்கினீச்சரர்


மரம்: புரசு மரம்
குளம்: அக்கினி தீர்த்தம்
பதிகம்: மூவிலைநற் -6 -90 திருநாவுக்கரசர்

முகவரி: துகிலி
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 609804
தொபே. 0435 2473737

தஞ்சாவூர் மாவட்டத்தில், நரசிங்கன் பேட்டை தொடர் வண்டி நிலையத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிறது.

அக்நியும், பிரமனும் வழிபட்டுப் பேறு எய்தினர். நடராசப் பெருமான் சிவகாமி அம்மையார் இவர்களின் திருமேனிகள் கருங்கல்லால் ஆக்கப்பெற்றவை. அரதத்த சிவாசாரியார் சைவத்தின் பெருமையை நிலை நாட்டிய இடம்.



கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் விக்கிரமசோழ தேவன் இராஜேகசரிவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழேதவன், திருபுவனச்சக்கரவர்த்தி வீரராஜேந்திரேதவன் இவர்கள் காலங்களிலும்; விஜயநகரமன்னரில் கிருஷ்ணராய மகாராயர் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில் இறைவர் திரு அக்நீஸ்வரம் உைடயார் என்னும் பெயரால் குறிக்கப்பெற்றுள்ளனர். இக்கோயிலில் விழாக்காலங்களில் எழுந்தருளும் கற்பகப்பிள்ளையை எழுந்தருளுவித்துவர் பாஸ்கரபட்டர்மகன், கனகசபைப்பட்டர் ஆவர். இதை இவர் எழுந்தருளுவித்தது சகம் 1447 அதாவது கி.பி. 1525 ஆகும். இவ்வூரில் விக்கிரமசோழன் கல்வெட்டு ஐந்நூற்று எண்மன் மடத்தைக் குறிப்பிடுகிறது. இவ்வூர் விருதராச பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டுக்கு உட்பட்டிருந்தது.

 
 
சிற்பி சிற்பி