கச்சிஅனேகதங்காவதம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகுகாமாட்சியம்மை உடனுறை அநேகதங்காவதேஸ்வரர்


மரம்: மா மரம்
குளம்: விட்டுணு தீர்த்தம்

பதிகம்: தேனெய்புரி -7 -10 சுந்தரர்

முகவரி: பிள்ளையார்பாளையம்
காஞ்சிபுரம் மாவட்டம், 631501
தொபே. 044 27223948

காஞ்சீபுரத்தின் வடமேற்கில் கழனி வெளி மத்தியில் இருக்கிறது. திருக்கச்சியிலுள்ள (அநேகதம்) விநாயகர் பூசித்த தலம் எனப் பொருள்படும் என்பர் கயப்பாக்கம் திரு. சதாசிவச் செட்டியார் பி.ஏ. அவர்கள்.விநாயகரோடு குபேரனும் வழிபட்ட தலம்.



கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1890. Nos. 22-24.)

இத்திருக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளுள் முதற் குலோத்துங்க சோழனின் முப்பத்து நான்காம் ஆட்சியாண்டில் தோன்றிய கல்வெட்டு, திருக்கோயிலுக்கு இரண்டுவேலி நிலம் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது. இந்நிலம் காஞ்சீபுரத்தில் இராஜ சிம்மேஸ்வரம் அல்லது கைலாசநாதர் கோயிலுக்கு வடக்கில் உள்ளது. இம் மன்னனுடைய இருபதாம் ஆண்டுக் கல்வெட்டு, தாமர்க்கோட்டத்து தாமர்நாட்டுத் தாமர் (தாமல்) அல்லது நித்தவிநோதநல்லூரில், அரசன் மூன்றுவேலி நிலத்தை இறைவர்க்குக் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது. மூன்றாவது கல்வெட்டு நள ஆண்டில் ஏற்பட்டது. அநேகதங்காபதக்கோயில் அதிகாரிகள், கோயிலுக்குரிய கைக்கோளர்களுக்கு 1400 குழி நிலத்தைக் கொடுத்ததைக் குறிப்பதாகும்.

 
 
சிற்பி சிற்பி