விற்கோலம் (திருவிற்கோலம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு திரிபுராந்தநாயகி உடனுறை திரிபுராந்தகர்


மரம்: வில்வம்
குளம்: கூவாக்கினி

பதிகம்: உருவினார்உமை -3 -23 திருஞானசம்பந்தர்

முகவரி: கூவம் கிராமம்
கடம்பத்தூர் அஞ்சல்
திருவள்ளூர் வட்டம்
திருவள்ளூர் மாவட்டம், 631203
தொபே. 044 27651084

இது இக்காலம் கூவம் என வழங்கப்பெறுகின்றது. திரிபுரம் எரித்த காலத்தில் இறைவன் வில்லையேந்திய திருக்கோலத்தோடு வீற்றிருந்தமையின் விற்கோலம் எனப்பெயர்பெற்றது என்பர்.

இது சென்னைப் பட்டினத்துக்கு மேற்கேயுள்ள மேற்கேயுள்ள கடம்பத்தூர் தொடர் வண்டி நிலையத்திற்குத் தெற்கே 10 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது தொண்டைநாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இறைவரின் திருப்பெயர் திரிபுராந்தகர். இறைவியின் திருப்பெயர் திரிபுராந்தநாயகி. அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவரின் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதும், யுத்தம் ஏற்படுவதாயிருந்தால் சிவப்புநிறம் படர்வதும் ஆகிய அற்புதம் பொருந்திய தலம். ஞானசம்பந்தப் பெருந்தகையார் இத்தலப்பதிகத்தில் ``ஐயன் நல்ல அதிசயன்`` எனக்குறிப்பிட்டிருப்பது இது கருதியாகும். இத்தலத்திற்கு ஞான சம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. தலபுராணம் சிவப்பிரகாச சுவாமிகளால் பாடப்பெற்று அச்சிடப்பெற்று வெளிவந்துள்ளது.




கல்வெட்டு:

(இவ்வூர்க் கோயிலைப்பற்றிய 1909 ஆம் ஆண்டு அறிக்கை கிடைத்திலது.) பையரவு அல்குல் அம்மைக்கு வெள்ளிக்கிழமை வழிபாட்டிற்கு இம்மடி சென்னம்ம நாயக்கரும், விற்கோலம் ஊரார் களும் நிவந்தம் அளித்த செய்தி 1912 ஆம் ஆண்டு அறிக்கையால் வெளியாகின்றது. (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1909, No 322 - 350, year 1912 No 30.)

 
 
சிற்பி சிற்பி