வலிதாயம் (திருவலிதாயம்) (பாடி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு தாயம்மை உடனுறை வலிதாயநாதர்


மரம்: பாதிரி
குளம்: பரத்துவாச தீர்த்தம்

பதிகம்: பத்தரோடு -1 -3 திருஞானசம்பந்தர்

முகவரி: பாடி
சென்னை மாவட்டம் 600050
தொபே. 044 26540706

தலம்: தொண்டைநாட்டில் விளங்கும் தேவாரத் தலங்களில் 21வது தலம். சென்னைப் பெருநகரின் மேல்பால் உள்ளது. சென்னை மையப் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகளில் செல்லலாம். இத்தலம் பாடி என இன்று வழங்குகிறது. பாரத்வாஜமகரிஷி, வியாழன், அநுமான் இவர்கள் வழிபட்டு முத்தி பெற்றதாகத் தல புராணம் கூறும். கஜப்பிரஷ்ட விமானம். சுவாமி பெயர் வலிதாய நாதர்; அம்மை பெயர் தாயம்மை; இங்கேயுள்ள கிணற்று நீர் மிக்க சுவையானது.




கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் 14 உள்ளன. அவற்றில் சுவாமி பெயர் திருவலிதாயமுடைய நாயனார் என வழங்கப் பெறுகிறது. அம்மை பெயர் திருவீதி நாச்சியார் என்பது(-217 of 1910). இன்ன அரசர் காலத்தது என்று அறியப் பெறாத கல்வெட்டு ஒன்று, திருவெண்காட்டி லிருந்து அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனாரை எழுந்தருள் வித்துப் பிரதிஷ்டை செய்து, அதனைப் பூசிக்க, அந்தணரையும் அங் கிருந்து குடியேற்றி, அவர்களுக்கும் உணவுக்காக ஜயங்கொண்ட சோழ மண்டலத்து, புலியூர்க்கோட்டமான சங்கமசோழவள நாட்டு அம்பத் தூர் நாட்டு திருவலிதாயத்தில் நிலம் விட்டதாகக் கூறுகிறது(-214 of 1910). திருஞான சம்பந்த நாழி என்னும் மரக்காலால் நெல் அளந்து கொடுக்கும்படியும் எழுதியுள்ளது. திரிபுவன சக்ரவர்த்தியான இராஜராஜசோழன் தமது ஆட்சி 28ஆம் ஆண்டில் கே்ஷத்ரபாலப் பிள்ளையார் கோயிலையும் கட்டி, நிவேதனத்திற்காக நிலமும் விட்டான்(-216 of 1910). விஜயகண்ட கோபால தேவர் என்பவர் காஞ்சிபுரத்திலிருந்து நடனமாதரைக் கொண்டுவந்து குடியேற்றினார். சுவாமிக்கும் அம்மை திருவீதி நாச்சியாருக்கும் ஆபரணங்களும், பாத்திரங்களும் வழங்கினார்(-217 of 1910).

இராஜராஜன் காலத் தில் சாளுக்கிய நாரணன் யாதவராயன் என்பவனால் பாடியைச் சேர்ந்த சிந்தாமணிபுரம் என்னும் இடத்தில் இருவீடுகளும் இரு நந்த வனங்களும் வழங்கப் பெற்றன. பரமேஸ்வரமங்கலத்துச் சிலம்பூர் கோட்டத்துச் சிலம்பணிந்தான் மாதவராயனால் விளக்கிற்குப் பொன் வழங்கப்பெற்ற செய்தியும் அறியலாகும்.(-218 , 219 of 1910) இவையன்றி, விளக்கு, உணவு முதலியவற்றிற்கு நிலமும் காசும் அளித்ததாக ஏனைய கல் வெட்டுக்கள் கூறுகின்றன.

 
 
சிற்பி சிற்பி