மூக்கீச்சரம் (திருமூக்கீச்சரம்) (உறையூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு காந்திமதியம்மை உடனுறை பஞ்சவர்ணேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: சிவ தீர்த்தம்

பதிகம்: சாந்தம்வெண் -2 -120 திருஞானசம்பந்தர்

முகவரி: உறையூர் அஞ்சல்
திருச்சி வட்டம்
திருச்சி மாவட்டம், 620003
தொபே. 0431 2768546

திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 2.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரியின் தென்கரைத் தலங்களில் ஐந்தாவது ஆகும். திருச்சிராப்பள்ளி பேருந்து நிலயத்திலிருந்து உறையூர் செல்ல நகரப் பேருந்துகள் பல உள்ளன. இது உறையூரிலுள்ள திருக்கோயிலாகும்.

இது புகழ்ச்சோழ நாயனார் அவதரித்த திருப்பதி. தமிழ் நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட பதி. உதங்க முனிவர்க்குச் சிவ பெருமான் ஐந்து காலங்களில் ஐந்து வர்ணமாகக் காட்சியளித்த தலம். கத்துருவின் மகன் கார்க்கோடகன் வந்து பூசித்துப் பேறுபெற்றான். வேதச் சுருதி என்னும் அந்தணன் பூசித்துப் பேயுரு நீங்கப்பெற்றான்.

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி வென்றமையால் இத்தலத்திற்குக் கோழியூர் என்ற வேறு பெயரும் உண்டு. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.

திருசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இதற்குத் தலபுராணம் எழுதியுள்ளார்கள். அது அச்சில் வெளி வந்துள்ளது. உறையூர்க் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழையும் அவர் செய்திருக்கிறார். இன்னும் பல பிரபந்தங்கள் இக்கோயிலுக்கு உண்டு.

பழுதுபட்டிருந்த இந்தக் கோயிலைத் தேவகோட்டையார் திருப்பணி செய்துள்ளனர். 4-5-1922 ல் இக்கோயிலுக்குக் குட முழுக்கு நடந்தது. கல்தூண்களில் புராண வரலாறுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.




கல்வெட்டு:

இக்கோயிலில் ஒன்பது கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவையெல்லாம் சோழர்களின் கல் வெட்டுக்களே, பரகேசரிவர்மன் கல்வெட்டில் உறையூர் திருவுடைத்தலைப் பெருமாளுக்கு நித்திய பூசைக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இராஜேந்திரன் காலத்தில் அதிகுண கற்பகநல்லூர் இக்கோயிலுக்குத் தரப்பட்டது.

 
 
சிற்பி சிற்பி