முல்லைவாயில் (திருமுல்லைவாயில்) (வட)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கொடியிடை நாயகி உடனுறை மாசிலாமணி ஈசர்


மரம்: முல்லைக் கொடி
குளம்: சுப்பிமணிய தீர்த்தம்

பதிகம்: திருவும்மெய் -7 -69 சுந்தரர்

முகவரி: திருமுல்லைவாயில் அஞ்சல்
காஞ்சிபுரம் மாவட்டம், 600113
தொபே. 044 26376151

சோழ நாட்டில் முல்லைக் கொடியைத் தலவிருட்சமாக உடைய திருமுல்லைவாயில் என்னும் தலம் தென் திருமுல்லைவாயில் எனப்பெறும். இது வடதிசையில் இருப்பதால் வட திருமுல்லை வாயில் என்றும் வழங்கப்படும். இதற்கும் தல விருட்சம் முல்லைக் கொடி.

சென்னைக்கு மேற்கேயுள்ள அம்பத்தூர் தொடர்வண்டி நிலையத்துக்கு வடமேற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்கு வேட்டையின் பொருட்டு வந்த தொண்டைமான் வேந்தனது யானையின் காலில் முல்லைக் கொடி சுற்றிக் கொண்டது. அதனை வேந்தன் வாளினால் வீசினான். அது பொழுது இறைவர் வெளிப்பட்டு அவர்க்கு அருள் செய்தருளினார். இச்செய்தி,

`சொல்லரும் புகழான் றொண்டைமான் களிற்றைச்

சூழ்கொடி முல்லையாற் கட்டிட்டு

எல்லையில் இன்பமவன்பெற வெளிப்பட்டருளிய விறை

வனேயென்றும்

நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்`

என்னும் இவ்வூர்ப்பதிகம் பத்தாம் திருப்பாடலின் அடிகளால் அறியக் கிடக்கின்றது,

இத்தலம் முருகப் பெருமானால் பூசிக்கப்பட்டது. சோழன், காமதேனு, வசிட்டர் இவர்கள் வழிபட்டுள்ளனர்.

சுவாமி சந்நிதியில் இரண்டு எருக்கந் தூண்கள் இருக்கின்றன.

இறைவர்:- மாசிலாமணி ஈசர். இறைவி:- கொடியிடை நாயகி.




கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1904, No. 662- 684.)

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில், பரகேசரிவர்மன் உத்தமசோழன், முதலாம் இராசேந்திர சோழன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பாண்டியதேவன் காலத்திலும்; விசயநகர வேந்தர்களில் ஹரிஹரராயர் II, இரண்டாம் தேவராயருடைய தம்பி பிரதாப தேவராயர், வீரப்பிரதாபபுக்க ராயர், வீரப்பிரதாப மல்லிகார்ச்சுன தேவமகாராயர் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, பார்த்திவேந்திரவர்மன் காலத்திலும் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உண்டு.

மழவரையர் மகளாரும், கண்டராதித்த பெருமாள் தேவி யாரும், ஆகிய செம்பியன்மாதேவியார், புழற்கோட்டத்து அம்பத்தூர் நாட்டு அம்பத்தூர் ஊராரிடமிருந்து நிலம் வாங்கி, இத் திருமுல்லை வாயில் கோயிலுக்கு உத்தமசோழ தேவரின் பதினான்காம் ஆட்சி யாண்டில் கொடுத்துள்ளனர். மண்டபத்துத் தூணில் உள்ள முதலாம் இராசேந்திரசோழ தேவன் கல்வெட்டு, அந்த மண்டபம் கட்டப் பட்டதைக் குறிப்பிடுகின்றது. வட திருமுல்லைவாயில் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துக்கானப்பேரூர் நாட்டுக்கு உட்பட்டிருந்தது என்பதை ஜடாவர்மன் சுந்தரபாண்டிய தேவனின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. அம் மன்னனது 18ஆம் ஆண்டுக் கல்வெட்டு புழற்கோட்டம் விக்கிரம சோழவளநாடு என்னும் பெயர் எய்தியதைப் புலப்படுத்துகின்றது.

 
 
சிற்பி சிற்பி