மயிலாடுதுறை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அஞ்சல்நாயகி உடனுறை மயிலாடுதுறையரன்


மரம்: மா மரம்
குளம்: காவிரி, இடப தீர்த்தம்

பதிகங்கள்: கரவின்றி -1 -38 திருஞானசம்பந்தர்
ஏனவெயிறா -3 -70 திருஞானசம்பந்தர்
கொள்ளுங் -5 -39 திருநாவுக்கரசர்

முகவரி: மயிலாடுதுறை அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609001
தொபே. 04364 223779

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். சிதம்பரம் - கும்பகோணம் பேருந்து வழியில் உள்ள நகரம். சென்னை - திருச்சி நேர்வழி இருப்புப்பாதையில் இரயில் சந்திப்பு நிலயம். இரயில் நிலையத்திலிருந்து ஆலயம் கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

அம்மை மயில் உருக்கொண்டு இறைவனை வழிபட்ட தலம். இங்கு அம்மையின் வேண்டுகோளுக்காக இறைவன் மயில் உருக் கொண்டு தாண்டவமாடினார். இதற்குக் கௌரீதாண்டவம் என்று பெயர். தலம் கௌரீதாண்டவபுரமாயிற்று.

இறைவன் பெயர் மாயூரநாதர். கல்வெட்டுக்களும் தேவார மும் மயிலாடுதுறையார், மயிலாடுதுறையரன் எனக் குறிக்கின்றன. இறைவியின் பெயர் அஞ்சல்நாயகி, அபயாம்பிகை என்பன. தீர்த்தம் காவிரியில் இடப தீர்த்தத் துறை விசேடம். துலாமாதம் முழுவதும் இங்கு நீராட்டு விழா நடைபெறும். 1 372 of 1907, 2 380 of 1907, 3 376 of 1907, 4 377 of 1907.




கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றிப் படியெடுக்கப்பட்டதாகப் பதினாறு கல்வெட்டுக்கள் உள்ளன. பணிசெய்த அரசர்கள் குலோத்துங்கன் I, இராசாதிராசன் II, குலோத்துங்கன் III, இராஜராஜன் III, சடையவர்மன் சுந்தரபாண்டியன் இவர்களாவர். இக்கல்வெட்டுக் களால் நிலம் பொன் அளிக்கப்பெற்றமை அறியப்பெறுகின்றன. இறைவன் திருமயிலாடுதுறை உடையார்(372 of 1907) எனவும் குறிக்கப்பெறுவர். இக்கல்வெட்டுகளில் ஐந்துபோக ஏனையவை ஐயாறப்பரைப் பற்றியன. இத்தலத்து ஐயாறப்பர் கோயில் தனியே மாயூரநாதர் கோயிலுக்குத் தென்மேற்கில் உள்ளது. இந்த ஐயாறப்பர் ஜயங் கொண்ட சோழவளநாட்டுத் திருவழுந்தூர்நாட்டு குலோத்துங்க சோழன் குற்றாலமாகிய திருவையாறுடையார் எனக் குறிக்கப் பெறுவர்( 380 of 1907). இத்தலத்து விக்கிரமசோழன் திருமடம் என ஒன்றிருப்ப தாகக் குறிக்கப்பெறுகின்றது(376 of 1907). முதற் குலோத்துங்கன் சுங்கம்தவிர்த்த சோழன் எனப்படுகின்றான். ஐயாறப்பர் கோயில் ஐயாறப்பரைப் பிரதிஷ்டை செய்ததுபோன்ற சிறந்த நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பெறு கின்றன(377 of 1907).

 
 
சிற்பி சிற்பி