புன்கூர் (திருப்புன்கூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சொக்கநாயகி உடனுறை சிவலோகநாதர்


மரம்: புங்க மரம்
குளம்: தேவேந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இடப தீர்த்தம்

பதிகங்கள்: முந்திநின்ற -1 -27 திருஞானசம்பந்தர்
பிறவாதே -6 -11 திருநாவுக்கரசர்
அந்தணாளன் -7 -55 சுந்தரர்

முகவரி: திருப்புன்கூர் அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609112
தொபே. 04364 279784

சோழநாட்டுக் காவிரிவடகரைத்தலம். வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்து வசதிஉண்டு.

இது புன்கமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டதாகலின் திருப்புன்கூர் எனப்படுவதாயிற்று. வடமொழியில் காஞ்சாரண்யம் என வழங்கும். இத்தலத்திற்குப் பக்கத்திலுள்ள ஆதனூரில் அவதரித்த திருநாளைப்போவார் என்னும் நந்தனார் பக்திக்காக நந்தியை விலகும்படிச் செய்த தலம். இவர் வெட்டிய திருக்குளம் ஒன்றும் இருக்கின்றது. இதற்கு வடக்கே உள்ள திருப் பெருமங்கலத்தில் வசித்த ஏயர்கோன் கலிக்காமநாயனார் திருக்கோயிலைப் புதுக்கிப் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். கலிக்காமர் வேண்டுகோளுக்காக இறைவன் 12 வேலி நிலங்களைப் பெற்றுக்கொண்டு மழைபெய்வித்து உலகை உய்வித்தார். இதனைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் பதிகத்து ``வையகம் முற்றும் மாமழை`` என்ற பாடலால் குறிப்பிடுகின்றார்கள். இச்செய்தி கோயில் திருப்பண்ணியர் விருத்தத்திலும் கூறப்பெறுகிறது.இறைவன் பெயர் சிவலோகநாதர்; இறைவிபெயர் சொக்க நாயகி; தீர்த்தம் கணபதி தீர்த்தம்; விருட்சம் புன்கமரம்.



கல்வெட்டு:

411 முதல் 415 வரையிலுள்ள ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன. 1918 இல் படியெடுக்கப்பெற்றன. இறைவன் சிவலோகமுடையநாதர் என்று வழங்கப்பெறுகின்றார் (-411 of 1918) . இராஜராஜன் ஆட்சி 11ம் ஆண்டில் சிவலோகமுடையார் கோயிலிலேயே வடக்கு இரண்டாம் பிராகாரத்து விக்கிரம சோழீச்சுர முடைய நாயனார் கோயிலைக்கட்ட விக்கிரம சோழனான வயநாட்டரையன் மருதூர் உடையான் நிலமளித்து இருக்கிறான்(-412 of 1918). கோப்பெருஞ்சிங்கன் 2 ஆம் ஆண்டில் இத் தலம் இராஜாதிராஜவளநாட்டு திருவாலிநாட்டுத் திருப்புன்கூர் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. பாண்டிய குலாசனி வளநாட்டுக் கீழையூர் நாட்டுக் குறிச்சியான் ஒருவன் சிவலோகமுடைய மாதேவர் திருமஞ்சனத்திற்கும் திருமாலைக்குமாக நிலமளித்திருக்கிறான்( 411 of 1918.). ஏனைய கல்வெட்டுக்கள் விளக்கிற்காக நிலமளித்த செய்தியை அறிவிப்பன.

 
 
சிற்பி சிற்பி