புக்கொளியூர்அவிநாசி (திருப்புக்கொளியூர்அவிநாசி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கருணாம்பிகை உடனுறை அவிநாசியப்பர்


மரம்: மாமரம்
குளம்: காசிக் கங்கை

பதிகம்: எற்றான்மறக்கேன் -7 -92 சுந்தரர்

முகவரி: அவிநாசி அஞ்சல்
அவிநாசி வட்டம்
கோவை மாவட்டம், 641654
தொபே. 04296 273113

இத்தலம் கொங்குநாட்டின் ஏழுதலங்களில் ஒன்றாகும்.

அவிநாசி என வழங்கப்படுகிறது.

புக்கொளியூர் என்பது இவ்வூரின் பழம் பெயராகும்.

கோவை-ஈரோடு பேருந்துச்சாலையில் உள்ளது.

இவ்வூருக்குப் பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன.

சிவபிரான் அக்னித் தாண்டவம் செய்தபோது தேவர்கள் அஞ்சி நடுங்கி இங்கு வந்து புகுந்தொளிந்த காரணத்தால் புக்கொளியூர் எனப் பெயர் பெற்றது எனத் தலபுராணம் கூறும்.

இதற்குத் தட்சிண காசி, தட்சிண வாரணாசி என்ற பெயர்களும் உள்ளன.

முதலை உண்ட பாலனை அழைத்தது: இத்தலம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை உண்ட பாலகனை இங்குள்ள சிவபிரானை வேண்டிப் பதிகம் பாடி மீட்டுத்தந்த அற்புதம் உடையது.

அவர் பாடிய திருப்பதிகத்தில், `கரைக்கால் முதலையை பிள்ளைதரச் சொல்லு காலனையே` என வேண்டிப்பாடுவதைக் காணலாம்.

முதலையுண்ட வரலாறு: ஐந்து வயது நிரம்பப் பெற்ற அந்தணச் சிறுவர் இருவர், இங்குள்ள நீர் நிலையில் குளித்தபோது ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று.

மற்றொருவன் அதன்வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம் சேர்ந்து, நிகழ்ந்ததை அச்சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தான்.

அவனின் பெற்றோர் மிக்க துயருற்றனர்.

இது நிகழ்ந்து சில ஆண்டுகளான நிலையில் உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர்.

அவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனங் கவன்றனர்.

அவர்களின் நற்காலம் சுந்தரர் அத்தலத்துக்கு எழுந்தருளினார்.

சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள் நாயனாரின் அழைப்பினை ஏற்று, அவரைச் சந்திக்கத் திருவுளம் கொண்டு சோழநாடு கடந்து, கொங்கு நாட்டை அடைந்தார்.

அவிநாசி என்னும் இத்தலத்திற்கு வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார்.

நிகழ்ந்ததை அவ்வூர் வேதியர்கள் உரைத்தனர்.

அவ்வேளையில் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளி வந்துள்ளார் என்பதைக் கேட்டு, மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார்.

சிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி `எற்றான் மறக்கேன்` என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.

அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.

அவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.

சுந்தரர் பின் இத்தலத் திருக்கோயிலை அடைந்து, அருள்மிகு கருணாம்பிகையையும் அவிநாசியப்பரையும் வழிபட்டு, மலைநாடடைந்தார் என்பது பெரிய புராணத்துட் காணப்படும் வரலாறாகும்.

கோயிலமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கியுள்ளது.

தவத்திரு சுந்தர சுவாமிகள் தலைமையில், அன்பர்கள் பலர் இவ்வாலயத்தைத் திருப்பணிகள் செய்வித்துப் புதுப்பொலிவுடன் விளங்கச் செய்துள்ளனர்.

நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் நன்கு நடைபெறுகின்றன.

சிற்பங்கள்: கோயிலின் மண்டபத் தூண்களிலும், கருவறைச் சுவர்களிலும் அழகிய சிற்பங்கள் உள்ளன.

முதலையிருந்த மடு, தாமரைக்குளம் என அழைக்கப்படுகிறது.

கரையில் சுந்தரர் கோயிலும் அற்புதங்களைக் குறித்த சுதைச் சிற்பங்களும் உள்ளன.

சுவாமி பெயர் அருள்மிகு அவிநாசியப்பர் அம்பாள் பெயர் அருள்மிகு கருணாம்பிகை.

தலமரம்-மா தீர்த்தம்-காசிக் கங்கை(கிணறு) நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) ஐராவத தீர்த்தம் முதலியன.




கல்வெட்டு:

வீரராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன், வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் வீரநஞ்சராய உடையார், வீரசிக்கராய உடையார், விஜயநகர அச்சுததேவ மகாராயர் முதலியோர் காலங்களில் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானங்களைக் குறிக்கின்றன.

குளக்கரையில் உள்ள சுந்தரர் கோயிலைக் கட்டியவன்.

சுந்தரபாண்டியன் என்பது ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது.

 
 
சிற்பி சிற்பி