பாம்புரம் (திருப்பாம்புரம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வண்டார் குழலி உடனுறை பாம்புரேசுவரர்


மரம்: வன்னி
குளம்: ஆதிசேட தீர்த்தம்

பதிகம்: சீரணிதி -1 -41 திருஞானசம்பந்தர்

முகவரி: சுரைக்காயூர் அஞ்சல்
குடவாயில் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 612203
தொபே. 0435 2469555

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். பேரளம் - கும்ப கோணம், பேருந்து வழியில் உள்ளது. பாம்பு புரம் என்பது பாம்புரம் என மருவியது. நாகராஜன் பூசித்த தலம். ஆதிசேடனுடைய மூலவிக்கிரகமும் உற்சவ விக்கிரக மும் கோயிலில் உள்ளன. இறைவன் பாம்புரேஸ்வரர். இறைவி வண்டார் குழலி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் ஆதிசேஷ தீர்த்தம்.




கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் 15 உள்ளன. அவை இராஜராஜன், இராஜேந்திரன், திரிபுவனவீரதேவன், குலோத்துங்கன் III, சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்தன. இத்தலம் உய்யக்கொண்டார் வளநாட்டுத் திருப்பாம்புரம் என வழங்கப் படுகிறது. இறைவன் திரும்பாம்புரமுடையார்(90 of 1911, 90 of 1911) எனவும், இறைவி மாமலையாட்டியாள்(90 of 1911, 90 of 1911) எனவும், விநாயகப் பெருமான் இராஜராஜப் பிள்ளையார்( 91 of 1911.) எனவும் வழங்கப்படுகின்றனர்.

இராஜராஜதேவன் காலத்தில் சோழியதரையவேளான் தாமோதரையனால் கோயில் 2 - ஆம் பிராகாரத்தில் மண்டபங் கட்டவும் இதனைப் பராமரிக்கவும் நிலமளிக்கப்பட்டது( 99 of 1911) . வசந்த மண்டபத்தை சரபோஜி மன்னனுடைய பிரதிநிதியான சுபேதார் ரகுபண்டிதராயன் கட்டினான். கி.பி.1209 இல் திருப்பாம்புரத்தில் கடும்பஞ்சம் நிலவியது. ஒரு பொற்காசுக்கு 3 - படி நெல் விற்றது. பஞ்சத்தால் வாடிய ஒரு வேளாளன் தன்னுடைய இரண்டு பெண்களை நூறு பொற்காசுக்குக் கோயிலுக்கு அடிமையாக விற்றான்(86 of 1911. ) .

 
 
சிற்பி சிற்பி