பாதாளீச்சரம் (திருப்பாதாளீச்சரம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அமிர்தநாயகி உடனுறை நாகநாதர்


மரம்: மாமரம்
குளம்: நாகதீர்த்தம்

பதிகம்: மின்னியல்செஞ் -1 -108 திருஞானசம்பந்தர்

முகவரி: பாமணி அஞ்சல்
மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம், 614014
தொபே. 9360685073

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. பாமணி, பாம்பணி என வழங்கப் பெறுகிறது. சர்ப்ப புரம் எனவும் பெயர் உண்டு. தனஞ்சயன் என்னும் பாம்பு பூசித்துப் பேறுபெற்ற தலம். அம்முனிவருடைய திருவுருவம் கோயிலில் உள்ளது.

இறைவன் பெயர் நாகநாதர், சர்ப்பபுரீசுவரர்; இறைவியின் பெயர் அமிர்தநாயகி; தீர்த்தம் நாகதீர்த்தம்.



கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றியதாக ஆறு கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தலத்திறைவன் திருப்பாதாளீச்சரம் உடையார். செல்வத்திருவாரூர் வாகீசப் பெருமான் வடகீழ்மடத்து முதலியார் பிள்ளையின் நிலங்கள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. இதில் ஆலாலசுந்தரர் திரு மடமும் குறிக்கப்படுகின்றது. இத்தலம் சுற்றவேலி வளநாட்டுப் பாம் பணிகூற்றத்துப் பாமணி என இராஜராஜன் காலத்து அழைக்கப்படு கின்றது. இவையன்றி ஷ்ரீபூதிவிண்ணகர ஆழ்வார்க்கு விளக்கிற் காகவும், வழிபடவருவார்க்கு உணவிற்காகவும் பொன்னும் ஆடும் வழங்கப்பெற்றன.(169 to 174 of 1926)

 
 
சிற்பி சிற்பி