பறியலூர் (திருப்பறியலூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கொம்பனையாள் உடனுறை வீரட்டேசுவரர்


மரம்: பலா மரம்
குளம்: சிவகங்கை, சந்திரபுட்கரணி

பதிகம்: கருத்தன்கடவுள் -1 -134 திருஞானசம்பந்தர்

முகவரி: கீழப்பரசலூர் அஞ்சல்
செம்பனார்கோயில்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609309
தொபே. 04364 281197

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். மயிலாடுதுறை (செம்பொனார்கோயில் வழி) சங்கரன்பந்தல் செல்லும் பேருந்துகளில் பறியலூர் செல்லலாம். இப்பொழுது பரசலூர் என வழங்கும். அட்ட வீரட்டத்தில் ஒன்று. தக்கன்செய்த யாகத்திற்குப் போந்த மாயன் முதலிய விண்ணவர்களின் வேதனையைத் தீர்த்த தலம்.

இறைவன் பெயர் வீரட்டேசுரர். இறைவியின் பெயர் இளம் கொம்பனையாள். தீர்த்தம் சிவகங்கை. தருமையாதீன அருளாட்சியில் உள்ளது.



கல்வெட்டு:

இத்தலம் சுந்தரபாண்டியன் 5ஆம் ஆட்சி ஆண்டில் ஜெயங் கொண்ட சோழவளநாட்டு வீழைநாட்டு ராஜநாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர் என வழங்கப்படுகிறது. இறைவன் தட்சேசு வரமுடையார் எனவும், திருவீரட்டான முடையார் எனவும் வழங்கப் படுகிறார்.

கிருஷ்ணப்பதேவமகாராயரால் குறிப்பிட்ட சில கிராமங்கள் (பறியலூர் உட்பட) சூலவரி வசூலிக்கப்பெற்றுச் சிவ விஷ்ணு கோயிலுக்களிக்கப்பட்டது. இதில் யாத்ரீகர்களுக்கும் உணவளிக்க ஏற்பாடுசெய்யப்பெற்றது. பூங்காக் குடியான பரராஜ பயங்கரநல்லூரில் 30 வேலி நிலத்தை இறையிலி செய்தளிக்கப்பட்டது. இங்கே ஏழுலகமுழுதுடைய சதுர்வேதி மங்கலத்து ஒரு அக்ரகாரம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டது(167 to 169 of 1925).

 
 
சிற்பி சிற்பி