பழையாறைவடதளி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு விமலநாயகி உடனுறை தருமபுரீசர்


மரம்: வில்வம்
குளம்: விசுவ தீர்த்தம்

பதிகம்: தலையெலாம் -5 -58 திருநாவுக்கரசர்

முகவரி: பட்டீச்சரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612703

பழையாறை என இன்று வழங்கும் இவ்வூர், சோழமன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் நகரங்களில் ஒன்று. இது பழசை என்று மரூஉ மொழியாகத் தேவார காலத்திலேயே வழங்கப்பட்டிருக்கின்றது.

திருப்பட்டீச்சரம், பழையாறைமேற்றளி, பழையாறைவடதளி என்னும் தலங்கள் இப்பழையாறை நகருக்குள் அடங்கியிருந்தன.

பழையாறைவடதளி:- பழையாறை நகரத்தில் உள்ள வடதளி என்று பொருள்படும். (தளி - கோயில்). கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.

தஞ்சை மாவட்டத்தில் திருப்பட்டீச்சரத்துக்கு அண்மையில் உள்ளது.

அப்பர்பெருமான் இத்தலத்தை அடைந்தபொழுது இக்கோயில் சமணர்களால் மறைக்கப் பெற்றிருந்தது. அவர் அதைக்கண்டு சமணர்களின் செயலைக் கெடுத்து இறைவனைக் கண்டு வழிபாடாற்றாமல் போவதில்லை என்று உறுதியுடன் இருந்தார். அதுபொழுது இறைவர் சோழ மன்னனின் கனவில் தோன்றி அறிவிக்க அம்மன்னன் இறைவனை வெளிப்படுத்தி அப்பமூர்த்திகளை வழிபடச்செய்தருளிய தலம்.

சமணர்கள் மறைத்ததைப்பற்றி அப்பர் பெருமான் ``தலையெலாம் பறிக்குஞ் சமண்கையருள், நிலையினான் மறைத்தான் மறைக் கொண்ணுமோ`` என இவ்வடதளிப் பதிகத்தில் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது.



கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1927 No. 221 and 222.)

இத்திருக்கோயிலின் மகாமண்டபமும், படிக்கட்டுகளும் பொருவனூர் வாணாதராயன் நரசிங்கதேவனால் சகம் 1375 அதாவது கி.பி. 1453இல் கட்டப்பெற்றனவாகும். ஒரு தூண் ஒன்றில் அது நரசிங்கதேவரின் நன்கொடை என்றும் செதுக்கப்பட்டுள்ளது.

 
 
சிற்பி சிற்பி