பழமண்ணிப்படிக்கரை (திருப்பழமண்ணிப்படிக்கரை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அமிர்தகரவல்லி உடனுறை நீலகண்டர்


மரம்: இலுப்பை
குளம்: பிரம தீர்த்தம், மண்ணியாறு

பதிகம்: முன்னவன் -7 -22 சுந்தரர்

முகவரி: மணல்மேடு அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609202
தொபே. 9245619738

இக்காலம் இவ்வூர், இலுப்பைப்பட்டு என்று வழங்கப் பெறுகின்றது.

நாகை மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மேற்கேயுள்ள மண்ணிப் பள்ளத்தை அடைந்து அங்கிருந்து வாழ்கொளிபுத்தூர்க்கு மேற்கே ஒரு கி.மீ. சென்றால் இவ்வூரை அடையலாம்.

சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தியபோது அம்மன் அவரது கண்டத்தைக் கையால் பற்றி விஷத்தை உள்ளே போகாது செய்தருள, இறைவர் நீலகண்டம் காட்டியருளிய பதி. இதற்கு ஏற்ப `திருநீலமிடற்றெம்பிரான்` என்று பதிகத்திலும் குறிப்பு உள்ளது. பாண்டவர் பூசித்த ஐந்து இலிங்கங்கள் உள்ளன.



கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1927, No. 135-139) இத் திருக்கோயிலில், விசயநகர வேந்தர்களில் மகா மண்டலேஸ்வரன் வீர பூபதி உடையார், வீரப் பிரதாப கிருஷ்ணதேவ மகாராயர் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன, இவைகளன்றிக் கிரந்தத்தில் செதுக்கப் பட்ட கல்வெட்டு ஒன்றும் உண்டு. இவைகளுள் வீரபூபதி உடையார் கல்வெட்டு, சகம் 1330 அதாவது கி.பி. 1408இல் ஏற்பட்டதாகும். இக் கல்வெட்டில் இறைவரின் திருப்பெயர் திருநீலகண்டம் உடைய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது. இம்மன்னன் இத்திரு நீலகண்டமுடைய நாயனார்க்குத் திருவமுது உள்ளிட்டவைகளுக்கு, சர்வமான்யமாக நிலம் அளித்துள்ளான்.

இம்மண்ணிப்படிக்கரை, விருதராஜ பயங்கரவளநாட்டு, இராஜராஜ வளநாட்டு, திருப்படிக்கரை என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில், உள்ள பரமேஸ்வரம் உடையார், விசுவேசுரம் உடைய நாயனார் இவர்கள் திருமேனி களையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது, இக்கோயிலில் திருவிழா நடாத்திய ஒரு வேளாளரைப் புகழ்ந்து பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. விழாக்காலங்களில் சந்திரசேகரப் பெருமானைப் புறப்பாடு செய்வதைப் பற்றி மற்றொருகல்வெட்டு அறிவிக்கின்றது.

 
 
சிற்பி சிற்பி