நெல்வாயில்(சிவபுரி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு உச்சியார் உடனுறை உச்சிநாதேசுவரர்


மரம்: நெல்லி
குளம்: கனக தீர்த்தம், கிருபா சமுத்திரம், திருக்குளம்

பதிகம்: புடையினாற் -2 -26 திருஞானசம்பந்தர்

முகவரி: சிவபுரி அஞ்சல்
அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம், 608002

சுவாமியின் பெயர் உச்சிநாதேசுவரர். தேவியின்பெயர் கனகாம்பிகை. உச்சியார் என்பது தேவாரப் பெயர்.

இவ்வூர் தென் ஆற்காடு மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் சிதம்பரம் தொடர்வண்டிநிலையத்திலிருந்து தென்கிழக்கே13.5.கி.மீ. தூரத்தில், அண்ணாமலை நகருக்குத் தெற்கே 1.5.கி.மீ. தூரத்தில் உள்ளது. தற்பொழுது சிவபுரி என்று வழங்கப்பெறுகிறது. புதுப்பிக்கப் பெற்ற தலமாகும். சிவபுரி மான்மியம் என்ற தல வரலாறும் இதற்கு உண்டு.




கல்வெட்டு:

இந்தக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் படி யெடுக்கப் பட்டிருக்கின்றன. முத்துவேங்கடப்ப நாயக்கன் சகம் 1564 இல் (கி.பி. 1642) தூபாஷ் கிருஷ்ணப்ப நாயக்கன் நலத்திற்காகச் சிதம்பரம் அபிஷேக புரம் அக்கிராகாரத்திற்கு முத்து வேங்கடப்ப நாயக்கன் காரியத்தர் கோனேரி செட்டியார் இருபத்தைந்துமா நிலம் தந்தார்.

 
 
சிற்பி சிற்பி